பொது செய்தி

இந்தியா

நிர்பயா குற்றவாளிகள் கடைசியாக குடும்பத்தினரை சந்திக்க அனுமதி

Updated : பிப் 22, 2020 | Added : பிப் 22, 2020 | கருத்துகள் (26)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : நிர்பயா குற்றவாளிகள் 4 பேரும் கடைசியாக தங்களின் குடும்பத்தினரை சந்திப்பது தொடர்பாக எழுத்துபூர்வமாக விண்ணப்பம் கேட்கப்பட்டுள்ளது என திகார் சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



latest tamil news



நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கும் மார்ச் 3 அன்று தூக்கு தண்டனை நிறைவேற்ற டில்லி கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில் குற்றவாளிகளில் ஒருவனான வினய் சர்மா, சுவரில் தலையை மோதி காயம் ஏற்படுத்திக் கொண்டதால், தூக்கு தேதி அறிவிக்கப்பட்டது முதல் அவர் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் ஏ.பி.சிங்., கோர்ட்டில் மனு அளித்திருந்தார். இதனையடுத்து குற்றவாளிகள் 4 பேருக்கும் நேற்று (பிப்.,21) சிறையில் மனநல ஆலோசனை வழங்கப்பட்டது.


latest tamil news



இந்நிலையில் இன்று (பிப்.,22) குற்றவாளிகள் 4 பேரும் கடைசியாக தங்கள் குடும்பத்தினர்களை சந்திக்க எழுத்துப்பூர்வமாக விருப்பம் கேட்கப்பட்டுள்ளது. இவர்களில் முகேஷ் மற்றும் பவன் ஆகியோர் இதற்கு முன்பு பிப்.,1 அன்று தூக்கு தண்டனை நிறைவேற்ற தேதி அறிவிக்கப்பட்டிருந்ததால் ஏற்கனவே தங்கள் குடும்பத்தினரை சந்தித்து விட்டதாக கூறி உள்ளனர். அக்ஷய் மற்றும் வினய் ஆகியோர் தற்போது குடும்பத்தினரை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக திகார் சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
natarajan s - chennai,இந்தியா
23-பிப்-202007:40:58 IST Report Abuse
natarajan s எத்தனையோ பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற பட்டுள்ளது, ஆனால் சமீப காலமாக இவர்களுக்கு கிடைத்த விளம்பரம், இவர்களை மீது ஒரு அனுதாபத்தை ஏற்படுத்தி விட்டது என்றே சொல்ல வேண்டும், நிச்சயம் இவர்களுக்காக வாதாட ஒரு கூட்டம் வரும் பாருங்கள், நமூரில் 7 அப்பாவி தமிழர்கள் போல், இவர்களுக்கும் தண்டனை குறைப்பு அப்புறம் நன்னடத்தை காரணமாக (?) விடுதலை என்று கிளம்புவார்கள். என்னக்கு இன்னும் புரியாத புதிர் இந்த 7 பேர்தான், அவர்கள் என்ன அப்படி ஒரு தியாகம் செய்து விட்டார்கள் என்று இவளவு வக்காலத்து?
Rate this:
Share this comment
sambantham sasikumar - chennai,இந்தியா
27-பிப்-202017:20:17 IST Report Abuse
sambantham sasikumarஏழு பேர் எந்த தியாகமும் செய்யவில்லை. இந்த ஏழு பேரும் தான் குற்றவாளிகள் என்று சொல்ல முடியுமா? பேரறிவாளன் அப்போதைய வயது பதினேழு தான். அவனுக்கு ஒரு தேச தலைவரை கொள்ள திட்டம் தீட்ட முடியுமா? விசாரணை அதிகாரி தியாகராஜன் பேரறிவாளன் சொன்ன வாக்கு மூலத்தை நான் மாற்றி தவறாக எழுதினேன் என்று தனி நீதிபதிக்கு கடிதம் எழுதினார் உங்களுக்கு தெரியுமா? ஒரு பதினேழு வயது பள்ளி மாணாவனை குற்றவாளியாகிய அதிகாரிக்கு என்ன தண்டனை. உண்மையான குற்றவாளிகளை கைதுசெய்ய முடியாமல் பெயருக்கு சிலரை கைதுசெய்து எப்படி தண்டனை கொடுக்க முடியும். செய்யாத குற்றத்திற்கு இன்னும் தண்டனை அனுபவிக்கும் பேரறிவாளனை பார்த்து நாம் வெட்கி தலை குனிய வேண்டும். (நளினி, முருகன், சாந்தன் குற்றவாளியாக இருக்கலாம், ஆனால் தியாகராஜன் சொன்னதை வைத்து பார்த்தல் பேரறிவாளன் நிரபராதிதான்)...
Rate this:
Share this comment
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
23-பிப்-202005:56:54 IST Report Abuse
D.Ambujavalli குடும்பத்தாரை சந்தித்து என்ன செய்யப் போகிறார்கள்? அவர்களும் வக்கியில்களை வைத்து ஆனமட்டும் தண்டனையை இழுத்தடித்தார்கள் இன்னும் கூட என்ன செய்து ‘புத்திர சிகாமணிகளைக்’ காப்பாற்றி, ஆயுள் தண்டனையாக்கி, வெளியே கொணர்ந்து நாலைந்து நிர்பயாக்களை நாசம் செய்ய வழி செய்யும்படி பெற்றவர்களைக் கெஞ்சலாம் அங்கேயே மயக்கம் போட்டு விழுந்து மருத்துவ மனை, சிகிச்சை என்று இன்னும் நாலு மாசம் இழுக்கலாம்
Rate this:
Share this comment
Cancel
Babu -  ( Posted via: Dinamalar Android App )
22-பிப்-202023:52:23 IST Report Abuse
Babu கடைசியாக.. கட்டக் கடைசியாக... கட்ட, கட்டக் கடைசியாக.... கட்ட, கட்ட, கட்டக் கடைசியாக,,,,,,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X