நிர்பயா குற்றவாளிகள் கடைசியாக குடும்பத்தினரை சந்திக்க அனுமதி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

நிர்பயா குற்றவாளிகள் கடைசியாக குடும்பத்தினரை சந்திக்க அனுமதி

Updated : பிப் 22, 2020 | Added : பிப் 22, 2020 | கருத்துகள் (26)
Share

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : நிர்பயா குற்றவாளிகள் 4 பேரும் கடைசியாக தங்களின் குடும்பத்தினரை சந்திப்பது தொடர்பாக எழுத்துபூர்வமாக விண்ணப்பம் கேட்கப்பட்டுள்ளது என திகார் சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



latest tamil news



நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கும் மார்ச் 3 அன்று தூக்கு தண்டனை நிறைவேற்ற டில்லி கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில் குற்றவாளிகளில் ஒருவனான வினய் சர்மா, சுவரில் தலையை மோதி காயம் ஏற்படுத்திக் கொண்டதால், தூக்கு தேதி அறிவிக்கப்பட்டது முதல் அவர் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் ஏ.பி.சிங்., கோர்ட்டில் மனு அளித்திருந்தார். இதனையடுத்து குற்றவாளிகள் 4 பேருக்கும் நேற்று (பிப்.,21) சிறையில் மனநல ஆலோசனை வழங்கப்பட்டது.


latest tamil news



இந்நிலையில் இன்று (பிப்.,22) குற்றவாளிகள் 4 பேரும் கடைசியாக தங்கள் குடும்பத்தினர்களை சந்திக்க எழுத்துப்பூர்வமாக விருப்பம் கேட்கப்பட்டுள்ளது. இவர்களில் முகேஷ் மற்றும் பவன் ஆகியோர் இதற்கு முன்பு பிப்.,1 அன்று தூக்கு தண்டனை நிறைவேற்ற தேதி அறிவிக்கப்பட்டிருந்ததால் ஏற்கனவே தங்கள் குடும்பத்தினரை சந்தித்து விட்டதாக கூறி உள்ளனர். அக்ஷய் மற்றும் வினய் ஆகியோர் தற்போது குடும்பத்தினரை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக திகார் சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X