பெண் பயிற்சியாளர்களை நிர்வாணமாக்கி சோதனை: குஜராத்தில் 'பகீர்'

Updated : பிப் 22, 2020 | Added : பிப் 22, 2020 | கருத்துகள் (40)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

சூரத் : குஜராத்தின் பூஜ் நகரில் பெண்கள் கல்லூரியில் மாதவிடாய் காலத்தை நிரூபிக்க மாணவிகளை உள்ளாடைகளை அகற்ற வைத்து சோதனையிட்ட சம்பவம் சமீபத்தில் நடந்தது. இந்த சர்ச்சை அடங்குவதற்குள், சூரத்தில் மருத்துவ பெண் பயிற்சியாளர்களை நிர்வாணமாக நிற்க வைத்து சோதனை நடத்திய பகீர் சம்பவம் நடந்துள்ளது.latest tamil news


சூரத் நகராட்சியின் மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி மருத்துவமனையில் பயிற்சி கிளார்க்குகளாக இருப்பவர்கள், பயிற்சி முடித்து நிரந்தர கிளார்க் பதவிக்கு சேருவதற்கு அவர்களின் உடல் தகுதி சோதிக்கப்படுவது வழக்கம். இதன் காரணமாக பல்வேறு துறைகளில் பயிற்சி பெற்ற 10 பெண் பயிற்சியாளர்கள் உடல்தகுதி பரிசோதனை செய்வதற்காக பெண் மருத்துவரின் அறையில் நிர்வாணமாக நிற்க வைக்கப்பட்டு சோதனை செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் அந்தரங்கமான கேள்விகள் கேட்கப்பட்டதுடன், திருமணம் ஆகாத பெண்களிடமும் கர்ப்பம் தொடர்பான சோதனை நடத்தப்பட்டுள்ளது. 10 பேரும் நிர்வாணமாக நிறுத்தப்பட்டு, ஒருவர் பின் ஒருவராக தனியாக அழைத்து பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.


latest tamil news


பிப்.,20 ம் தேதி நடந்த இச்சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது குறித்து மருத்துவமனை டீன் வந்தனா தேசாயிடம் கேட்ட போது, இது போன்று தனக்கு எந்த புகாரும் வரவில்லை எனவும், இது குறித்து விசாரிக்கப்படும் என தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து 3 நபர் கமிட்டி ஒன்றை அமைத்துள்ளதாகவும், அவர்கள் இந்த சம்பவம் குறித்து விசாரித்து 15 நாட்களில் அறிக்கை அளிப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்திற்கு மருத்துவ துறையை சார்ந்த பலரும் கடும் கண்டனத்தையும், எதிர்ப்பையும் தெரிவித்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
24-பிப்-202005:51:44 IST Report Abuse
skv srinivasankrishnaveni ஆண்களைக்கூட இப்படியே தான் பல துறைகளில் அசிங்கமா பல நிறுவனம் காலிலே நடத்துவாங்க என்று DEFENCE லே சோதிப்பாங்க என்று கேள்வி பெண்களை இப்படி செய்வதுகேட்டதில்லீங்க ஆமாம் குஜராத்லஎம்காட்டும்தானா இல்லே ALL இந்தியாலேயும் இருக்கா இந்த ரோதனை மோடி ஆட்ச்சில் இருப்பதுபோல எதிர்க்கட்ச்சிகளுக்கு காசுகொல்லை அடிக்கமுடியலேன்னு எரிச்சல் அதனால் இஷ்டத்துக்கு கதைக்குறானுக என்பதும் உண்மை கான் கிரேஸ் க்கு கூட்டு திமுக என்ற பிராடுகள் ரெண்டுமே கொள்ளைஅடிச்சுதான் கொடியே பறக்குதுங்க கரப்ஷன் இல்லாத ஆட்ச்சியைக்கண்டால் வயறுபத்திண்டு எரியுதே அதான் காரணம் என்று தோன்றுது
Rate this:
Share this comment
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
23-பிப்-202008:49:21 IST Report Abuse
mindum vasantham காங்கிரஸ் எதோ டுபாக்கூர் நியூஸ் போட்டு தினம் தினம் பாரா பரப்பாக வைத்து கொள்ள பார்க்கிறது
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
23-பிப்-202003:56:47 IST Report Abuse
Mani . V எனக்கு ஒரு சந்தேகம். குஜராத்காரங்க எல்லோருமே முட்டாள்களாகத்தான், காட்டு மிராண்டிகளாகத்தான் இருப்பார்களா? கடந்த வாரம் பள்ளி பிள்ளைகளின் உள்ளாடையை கழட்டச் சொல்லி சோதனை. இந்த வாரம் இது. இனி அடுத்த வாரம் என்னவோ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X