பெண் பயிற்சியாளர்களை நிர்வாணமாக்கி சோதனை: குஜராத்தில் பகீர்| Dinamalar

பெண் பயிற்சியாளர்களை நிர்வாணமாக்கி சோதனை: குஜராத்தில் 'பகீர்'

Updated : பிப் 22, 2020 | Added : பிப் 22, 2020 | கருத்துகள் (40)
Share

இந்த செய்தியை கேட்க

சூரத் : குஜராத்தின் பூஜ் நகரில் பெண்கள் கல்லூரியில் மாதவிடாய் காலத்தை நிரூபிக்க மாணவிகளை உள்ளாடைகளை அகற்ற வைத்து சோதனையிட்ட சம்பவம் சமீபத்தில் நடந்தது. இந்த சர்ச்சை அடங்குவதற்குள், சூரத்தில் மருத்துவ பெண் பயிற்சியாளர்களை நிர்வாணமாக நிற்க வைத்து சோதனை நடத்திய பகீர் சம்பவம் நடந்துள்ளது.



latest tamil news


சூரத் நகராட்சியின் மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி மருத்துவமனையில் பயிற்சி கிளார்க்குகளாக இருப்பவர்கள், பயிற்சி முடித்து நிரந்தர கிளார்க் பதவிக்கு சேருவதற்கு அவர்களின் உடல் தகுதி சோதிக்கப்படுவது வழக்கம். இதன் காரணமாக பல்வேறு துறைகளில் பயிற்சி பெற்ற 10 பெண் பயிற்சியாளர்கள் உடல்தகுதி பரிசோதனை செய்வதற்காக பெண் மருத்துவரின் அறையில் நிர்வாணமாக நிற்க வைக்கப்பட்டு சோதனை செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் அந்தரங்கமான கேள்விகள் கேட்கப்பட்டதுடன், திருமணம் ஆகாத பெண்களிடமும் கர்ப்பம் தொடர்பான சோதனை நடத்தப்பட்டுள்ளது. 10 பேரும் நிர்வாணமாக நிறுத்தப்பட்டு, ஒருவர் பின் ஒருவராக தனியாக அழைத்து பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.


latest tamil news


பிப்.,20 ம் தேதி நடந்த இச்சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது குறித்து மருத்துவமனை டீன் வந்தனா தேசாயிடம் கேட்ட போது, இது போன்று தனக்கு எந்த புகாரும் வரவில்லை எனவும், இது குறித்து விசாரிக்கப்படும் என தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து 3 நபர் கமிட்டி ஒன்றை அமைத்துள்ளதாகவும், அவர்கள் இந்த சம்பவம் குறித்து விசாரித்து 15 நாட்களில் அறிக்கை அளிப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்திற்கு மருத்துவ துறையை சார்ந்த பலரும் கடும் கண்டனத்தையும், எதிர்ப்பையும் தெரிவித்துள்ளனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X