பொது செய்தி

இந்தியா

ரூ.2000 செல்லாதா?: வதந்திகளை நம்ப வேண்டாம்

Updated : பிப் 22, 2020 | Added : பிப் 22, 2020 | கருத்துகள் (33)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : ரூ.2000 நோட்டு செல்லாது என்பது குறித்து சமூக வலைதளங்களில் பரவும் செய்தியை நம்ப வேண்டாம் எனவும், பொதுமக்கள் வழக்கம் போல் பயன்படுத்தலாம் எனவும் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



latest tamil news



மார்ச் 1 முதல் இந்தியன் வங்கி ஏடிஎம்-ல் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் வைக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்படலாம் என்ற வதந்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனிடையே இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் தரப்பில், இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளின் பயன்பாட்டை படிப்படையாக அரசு குறைக்க உள்ளதாக தெரிவித்தது மேலும் அச்சத்தை அதிகரித்தது.


latest tamil news



இந்நிலையில், இது குறித்து பேசியுள்ள ரிசர்வ் வங்கி அதிகாரிகள், இரண்டாயிரம் ரூபாய் நோட்டை தடை செய்வதற்கான எண்ணம் தற்போது வரை மத்திய அரசிடம் இல்லை. இதனால் அச்சமின்றி மக்கள் ரூ.2000 நோட்டுக்களை பயன்படுத்தலாம். ஏடிஎம்.மில் குறிப்பிட்ட வங்கியில் மட்டும் ரூ.2000 நோட்டுகள் வராது என்பதால், வங்கிக் கிளையில் தங்களிடம் உள்ள குறைந்த மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை அளித்து, ரூ.2000 நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
24-பிப்-202006:08:30 IST Report Abuse
skv srinivasankrishnaveni ATM களிலே 2000 ரஸ் நோட்டுகள் என்று தெளிவாக சொல்லிருக்காங்க ரெண்டாயிரம் சங்கே வாங்க மக்கள் அவஸ்தைப்படுறதையும் குறிப்பாக சொல்லிருக்காங்களே சே இதுலே குத்தம் காணலாம் என்று அலையும் கூட்டம்களேதான் வதந்திகளையும் வம்புகளைப்பரப்புதுங்க
Rate this:
Cancel
தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா
23-பிப்-202013:22:35 IST Report Abuse
தஞ்சை மன்னர் ப்ளீஸ்
Rate this:
Cancel
தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா
23-பிப்-202012:52:47 IST Report Abuse
தஞ்சை மன்னர் என்றைக்கு ஆட்சி கட்டிலில் ஏறினார்களோ அன்றிலிருந்து நாட்டின் நாணயத்திற்கு கூட மரியாதை இல்லாமல் போய் விட்டது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X