பொது செய்தி

இந்தியா

அமுல்யாவுக்கு நக்சல்களுடன் தொடர்பு

Updated : பிப் 22, 2020 | Added : பிப் 22, 2020 | கருத்துகள் (56)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

பெங்களூரு : பெங்களூருவில் நடந்த சிஏஏ.,வுக்கு எதிரான போராட்டத்தின் போது 'பாக்.,ஜிந்தாபாத்' என முழக்கமிட்டதற்காக தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமுல்யாவுக்கு நக்சல் அமைப்புக்களுடன் தொடர்புடையதாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.



latest tamil news



பெங்களூருவில் ஓவைசி தலைமையில் நடைபெற்ற சிஏஏ.,வுக்கு எதிரான போராட்டத்தின் போது திடீரென மேடை ஏறிய அமுல்யா என்ற இளம்பெண், பாக்., ஜிந்தாபாத் என முழக்கமிட்டார். ஓவைசி உள்ளிட்ட பலர் தடுத்தும் அவர் பேசுவதை நிறுத்த மறுத்து, தொடர்ந்து முழக்கமிட்டார்.

இதனால் அவர் தேச துரோக வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. இதற்கிடையில் அமுல்யாவின் வீடு, மர்ம நபர்களால் கல்வீசி தாக்கப்பட்டது. சிக்மகளூரு மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


latest tamil news



இது தொடர்பாக பேசிய முதல்வர் எடியூரப்பா, 19 வயதாகும் எப்பெண் பாக்.,க்கு ஆதரவாக முழக்கமிட்டதால் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார். அவருக்கு நக்சல்களுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அமுல்யா போன்றவர்களின் பின்னால் இருக்கும் அமைப்புக்கள் அவர்களை தவறாக தூண்டி விட்டு வருகின்றன. அத்தகைய அமைப்புக்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இது போன்ற நிகழ்வுகளுக்கு முடிவு ஏற்படாது என்றார்.

மேடையில் இருந்து இறக்கப்பட்டு, கைது செய்யப்படுவதற்கு முன் பேசிய அமுல்யா, தான் தனி ஆள் இல்லை எனவும், ஏராளமானவர்களின் முகமாகவே தான் இங்கு வந்துள்ளதாகவும் கூறி இருந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அமுல்யாவின் இந்த பேச்சு, சமூக விரோத அமைப்புக்களுடன் அவருக்கு தொடர்பு இருப்பதை காட்டுகிறது என கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
25-பிப்-202004:13:27 IST Report Abuse
 nicolethomson அமுல்யா லியோனை வளர்ந்த ஊரு கோப்பை என்றொரு நகரத்தின் பக்கத்தில் இருக்கும் கிராமம் , நக்சல்களின் கோட்டை என்று கூட அழைப்பார்கள் , இவளை பாகிஸ்தானுக்கு இந்து அல்லது கிருத்துவ பெண்ணாக ஒருவருடம் டூர் அனுப்பி வையுங்க திரும்பி வருகையில் இவளின் வாழ்க கோஷத்தை கேட்கவேண்டும்
Rate this:
Share this comment
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
26-பிப்-202005:07:38 IST Report Abuse
 nicolethomsonஅமுல்யா லியோனா , கோப்பா என்று படியுங்கள் தவறாக பிரசுரம் ஆகிவிட்டதது...
Rate this:
Share this comment
Cancel
mohan - chennai,இந்தியா
24-பிப்-202013:55:11 IST Report Abuse
mohan பாகிஸ்தானுக்கு நாடு கடத்துங்க, எல்லாம் சரியாய் போய்விடும்....
Rate this:
Share this comment
Cancel
Ramalingam Shanmugam - mysore,இந்தியா
24-பிப்-202013:38:37 IST Report Abuse
Ramalingam Shanmugam பப்லிசிட்டிக்காக மேடையில் எதுவும் பேச இதுபோன்ற நிறைய அரைகுறைகள் அலைகின்றன.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X