அமுல்யாவுக்கு நக்சல்களுடன் தொடர்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

அமுல்யாவுக்கு நக்சல்களுடன் தொடர்பு

Updated : பிப் 22, 2020 | Added : பிப் 22, 2020 | கருத்துகள் (56)
Share

இந்த செய்தியை கேட்க

பெங்களூரு : பெங்களூருவில் நடந்த சிஏஏ.,வுக்கு எதிரான போராட்டத்தின் போது 'பாக்.,ஜிந்தாபாத்' என முழக்கமிட்டதற்காக தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமுல்யாவுக்கு நக்சல் அமைப்புக்களுடன் தொடர்புடையதாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.



latest tamil news



பெங்களூருவில் ஓவைசி தலைமையில் நடைபெற்ற சிஏஏ.,வுக்கு எதிரான போராட்டத்தின் போது திடீரென மேடை ஏறிய அமுல்யா என்ற இளம்பெண், பாக்., ஜிந்தாபாத் என முழக்கமிட்டார். ஓவைசி உள்ளிட்ட பலர் தடுத்தும் அவர் பேசுவதை நிறுத்த மறுத்து, தொடர்ந்து முழக்கமிட்டார்.

இதனால் அவர் தேச துரோக வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. இதற்கிடையில் அமுல்யாவின் வீடு, மர்ம நபர்களால் கல்வீசி தாக்கப்பட்டது. சிக்மகளூரு மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


latest tamil news



இது தொடர்பாக பேசிய முதல்வர் எடியூரப்பா, 19 வயதாகும் எப்பெண் பாக்.,க்கு ஆதரவாக முழக்கமிட்டதால் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார். அவருக்கு நக்சல்களுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அமுல்யா போன்றவர்களின் பின்னால் இருக்கும் அமைப்புக்கள் அவர்களை தவறாக தூண்டி விட்டு வருகின்றன. அத்தகைய அமைப்புக்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இது போன்ற நிகழ்வுகளுக்கு முடிவு ஏற்படாது என்றார்.

மேடையில் இருந்து இறக்கப்பட்டு, கைது செய்யப்படுவதற்கு முன் பேசிய அமுல்யா, தான் தனி ஆள் இல்லை எனவும், ஏராளமானவர்களின் முகமாகவே தான் இங்கு வந்துள்ளதாகவும் கூறி இருந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அமுல்யாவின் இந்த பேச்சு, சமூக விரோத அமைப்புக்களுடன் அவருக்கு தொடர்பு இருப்பதை காட்டுகிறது என கூறப்படுகிறது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X