பொது செய்தி

இந்தியா

பென்சன்தாரர்கள் ஆன்லைனில் லைப் சான்றிதழ் அளிக்கும் வசதி

Updated : பிப் 22, 2020 | Added : பிப் 22, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: இபிஎப்ஓ (EPFO - Employees' Provident Fund Organisation) கீழ் பென்சன்தாரர்கள், ஒரு ஆண்டில் எப்போது வேண்டுமானாலும் ஆன்லைனில் லைப் சான்றிதழை சமர்ப்பிக்கும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.latest tamil news
பென்சன்தாரர்கள் லைப் சான்றிதழ் அல்லது ஜீவன் பிரமாண பத்ரா முறையில் கொண்டு வரப்பட்டுள்ள சீர்திருத்தத்தால் 64 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். இது தொடர்பாக இபிஎப்ஓ பதிவிட்டுள்ள டுவீட்டில், ஒரு ஆண்டில் தங்களுக்கு வசதியான எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பென்சன்தாரர்கள் லைப் சான்றிதழை சமர்பிக்கலாம். இந்த சான்றிதழ், சமர்ப்பிக்கப்பட்ட தேதியில் இருந்து அடுத்த ஓராண்டு வரை செல்லும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு வரை, பென்சன்தாரர்கள் ஒவ்வொரு ஆண்டும் நவ.,1 முதல் நவ.,30 ம் தேதிக்குள் லைப் சான்றிதழை சம்பிக்க வேண்டும் என்ற நடைமுறை இருந்தது. அவ்வாறு லைப் சான்றிதழ் சம்பிக்க தவறியவர்களுக்கு அடுத்த ஆண்டு ஜனவரி முதல் ஓய்வூதிய தொகை நிறுத்தப்படும்.

தற்போது கொண்டு வரப்பட்டுள்ள இந்த புதிய முறையால் பென்சன்தாரர்கள் நவம்பர் மாதத்திற்காக காத்திருக்க வேண்டியதில்லை. தங்களுக்கு வசதியான நேரத்தில் சான்றிதழை சமர்பிக்கலாம். ஒருமுறை சமர்ப்பித்தால் அடுத்த 12 மாதங்களுக்கு அந்த சான்றிதழ் செல்லுபடியாகும்.


latest tamil news


டிஜிட்டல் சான்றிதழ் முறை, 2015-16 ம் நிதியாண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி பென்சன்தாரர்கள் பயோமெட்ரிக் முறையில் ஆதார் எண் சரிபார்க்கப்பட்ட பிறகு, அதனை பயன்படுத்தி சான்றிதழை சமர்பிக்கலாம்.

பென்சன்தாரர்கள் லைப் சான்றிதழை வங்கி மேனேஜரின் அல்லது கெசடட் அதிகாரியின் கையொப்பம் அடங்கிய சான்றிதழை நேரடியாக சென்று அளிப்பதற்கு பதில், எந்த இபிஎப்ஓ எலுவலகத்திலோ அல்லது பென்சன் வழங்கப்படும் வங்கியிலோ, UMANG ஆப் மூலமோ அல்லது பொது சேவை மையங்களிலோ இதனை சமர்பிக்கலாம்.

லைப் சான்றிதழை சமர்பிப்பதற்கு இபிஎப்ஓ அலுவலகத்திற்கு எந்த ஆவணத்தை எடுத்துச் செல்ல வேண்டியதில்லை. ஆதார் எண், பென்சன் பேமன்ட் ஆர்டர் எண், வங்கி விபரம், மொபைல் எண் இருந்தாலே பயோமெட்ரிக் முறையில் விபரங்கள் சரிபார்க்கப்பட்டு டிஜிட்டல் லைப் சான்றிதழை சமர்பிக்கலாம்.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
23-பிப்-202014:49:33 IST Report Abuse
S.Baliah Seer முதலில் பென்ஷன் தாரர்களை சமமாக மதிக்க கற்றுக்கொள்ளுங்கள் ஐயா.பென்சன் தாரர்களை முன்னாடி பின்னாடி என்று பிரிப்பது ஆர்டிகள் 14 -நிக்கு எதிரானது.IAS அதிகாரிகள் தங்கள் சுய நலத்துக்காக பென்சன் தாரர்களை பிரிப்பது கண்டிக்க தக்கது.நீதி மன்றங்கள் இவர்களை கூண்டில் எற்றாதவரை இந்த நாடு சுபிட்சம் அடைய முடியாது.
Rate this:
Cancel
Sundararaman Iyer - Bangalore,இந்தியா
23-பிப்-202007:18:36 IST Report Abuse
Sundararaman Iyer it is available only for pensioners based in India. Not for people living abroad.
Rate this:
Cancel
Nallavan Nallavan - கோல்கத்தா ,இந்தியா
22-பிப்-202021:21:11 IST Report Abuse
Nallavan Nallavan மத்திய மாநில அரசுகளின் ஓய்வுத்தொகை வழங்கும் பொறுப்பை ஏற்றுள்ள வங்கிகளே தற்பொழுதெல்லாம் இச்சேவையைச் செய்கின்றன .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X