இந்திய விமானத்திற்கு அனுமதி வழங்க தாமதித்த சீன அரசு

Updated : பிப் 22, 2020 | Added : பிப் 22, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

பீஜிங் : சீனாவின் வூஹானில் இருந்து இந்தியர்களை மீட்டு வருவதற்கான இந்திய விமானப்படை விமானத்திற்கு சீனா வேண்டுமென்றே அனுமதி வழங்காமல் தாமதப்படுத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.



latest tamil news



இந்திய விமானப்படையின் மிகப்பெரிய விமானமான C-17 Globemaster மருந்து, மாத்திரைகளுடன் சென்று வூஹான் நகருக்கு வழங்குவதோடு, அங்கு மீதமுள்ள இந்தியர்களையும் மீட்டு வரும் என கடந்த 17ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த விமானத்திற்கு சீனா வேண்டுமென்றே அனுமதி வழங்காமல் தாமதித்து வருவதாகக் கூறப்படுகிறது.நிவாரண உதவி வழங்கும் விமானத்தை அனுமதிக்க மறுப்பதன் மூலம், இந்தியாவின் ஆதரவுக் கரத்தை சீனா ஏற்க மறுக்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


latest tamil news



ஆனால், வூஹானில் மீதமுள்ள 80 இந்தியர்களையும் அனுப்பி வைப்பதற்கு, இரு நாடுகளின் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பேசி வருவதாகவும், இந்திய மீட்பு விமானத்திற்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏதும் இல்லை என்றும் சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கெங் ஷுவாங் (Geng Shuang) தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்திய விமானம் செல்ல அனுமதி அளிக்கப்படாமல் தாமதிக்கப்படுவதால், பிரதமர் மோடி, சீன அதிபருக்கு மீண்டும் கடிதம் எழுதி உதவிக்கரம் நீட்ட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
23-பிப்-202014:38:51 IST Report Abuse
தமிழ்வேல் சீனா வைரஸ் பாதிப்பு இல்லாதவர்களை மட்டும்தான் அனுப்பி வைக்கும். அதற்கான சீனாவின் சர்டிபிகேட் இல்லாமல் வெளியே வர இயலாது.
Rate this:
Cancel
23-பிப்-202011:48:29 IST Report Abuse
Ganesan Madurai இங்குள்ள கம்மி கூலிகளின் கருத்து என்ன?
Rate this:
Cancel
Nallavan Nallavan - கோல்கத்தா ,இந்தியா
22-பிப்-202018:59:35 IST Report Abuse
Nallavan Nallavan சீனாவின் அல்ப புத்தியைக் காட்டுகிறது ....
Rate this:
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
23-பிப்-202014:02:30 IST Report Abuse
pradeesh parthasarathyசென்னையில கூட்டிகிட்டு வந்து என்னமா சீன போட்டீங்க.. அப்பவே சொன்னோம் சீன கரணை நம்பாதீங்கன்னு... கேட்டீங்களா .... என்னமா அவனுக்கு ஆதரவு தெரிவிச்சு சங்கிகள் பதிவு போட்டீங்க ... இப்போ என்ன ஆச்சு ......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X