கோர்ட் தீர்ப்பே அனைத்திற்கும் மேல்: மோடி

Updated : பிப் 22, 2020 | Added : பிப் 22, 2020 | கருத்துகள் (33)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: நாட்டில் அனைத்திலும் சட்டமே மேலானது என டில்லியில் நடந்த சர்வதேச நீதித்துறை மாநாட்டில் பங்கேற்று பிரதமர் மோடி பேசுகையில் குறிப்பிட்டார்.



latest tamil news


அவர் மேலும் பேசுகையில், இந்த நாட்டில் எத்தனையோ துறைகளில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இது போல் நீதித்துறையிலும் மாற்றங்கள் கொண்டு வர நாங்கள் பழம் பெறும் ஆயிரக்கணக்கான சட்டங்களை நீக்கினோம். சட்டமே சமூகத்தின் முக்கிய அங்கம். சமீபத்திய முக்கிய தீர்ப்புகள் நமது மக்களால் ஏற்று கொள்ளப்பட்டடன. சட்டம் நம் அனைவராலும் மதிக்கப்படக்கூடியதாக உள்ளது. சட்டம் அனைத்திலும் மேலானது.


latest tamil news


உண்மை, சேவைக்காக வாழ்ந்த காந்தியின் வாழ்க்கை நீதித்துறையின் அடித்தளமாக கருதப்படுகிறது. காந்தியின் முதல் வழக்கு குறித்து அவரது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். உலக அளவில் விவாதிக்கப்பட்ட சில முக்கிய விஷயங்களில் சமீபத்தில் தீர்ப்புகள் வழங்கப்பட்டன. தீர்ப்புகள் வரும் முன்னதாக பெரும் கவலைகள் எழுப்பப்பட்டன. ஆனால் தீர்ப்பு வந்த பின்னர் 130 கோடி மக்களால் ஏற்று கொள்ளப்பட்டது.


latest tamil news


வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையிலான சமநிலையின் தீவிரத்தை புரிந்து கொண்ட இந்திய நீதித்துறைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு மோடி பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PANDA PANDI - Aththipatti,இந்தியா
22-பிப்-202023:57:09 IST Report Abuse
PANDA PANDI காவேரி தீர்ப்பு. சபரிமலை தீர்ப்பு, இதற்கு அனைத்திற்கும் எங்கு உள்ளதோ.
Rate this:
Cancel
Babu -  ( Posted via: Dinamalar Android App )
22-பிப்-202023:49:28 IST Report Abuse
Babu அந்த சட்டம் தலைவனுக்கும், தொண்டனுக்கும் ஒரே மாதிரி செயல்படுத்தப்படுவதே மக்களாட்சி.
Rate this:
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
22-பிப்-202023:19:06 IST Report Abuse
Rafi கொலிஜியம் முறை கை கொடுக்கலாம். நீதிகள் எப்படி வழங்க வேண்டும் என்ற வரையறை இருந்தும், சில வித்தியாசமான தீர்ப்பு என்று வழங்கப்பட்டுள்ளதை தீர ஆராய்ந்தால் தீர்ப்புகள் மாறக்கூடும். மூத்த வழக்கறிஞர்கள் சிலர் சமீபத்தில் வழங்கிய முக்கிய தீர்ப்பில் உள்ள முரண்பாடுகளை சுட்டி காட்டியதையும் நினைவில் கொள்ள வேண்டும். தீர்ப்பு அனைவராலும் ஏற்க கூடிய தீர்ப்பை நம்மை படைத்த இறைவன் வழங்குவேன் , அப்போது பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமல்ல பாதிப்பை ஏற்படுத்தியவர்களும் உணருவார்கள், அப்போது குற்றவாளிகளின் முகம் கருத்திருக்கும். நன்மையை அதிகம் கொண்டு வந்தவர்களின் முகம் பிரகாசமாக இருக்கும் என்று கூறுகின்றான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X