பொது செய்தி

இந்தியா

டிரம்ப்பின் இந்திய வருகை: நிகழ்ச்சி விபரம்

Updated : பிப் 22, 2020 | Added : பிப் 22, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement

புதுடில்லி : இந்தியா வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப் 36 மணி நேரத்திற்கும் குறைவான நேரங்களே இந்தியாவில் இருப்பார் என அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.latest tamil news


பிப்.,24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் இருநாள் அரசு பயணமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வர உள்ளார். இது இவரது முதல் இந்திய வருகை என்பது குறிப்பிடத்தக்கது. பிப்., 24 ம் தேதி பகல் 12.30 மணியளவில் டிரம்ப், ஆமதாபாத் வருகிறார். விமான நிலையத்தில் பிரதமர் மோடி அவருக்கு வரவேற்பு அளிக்க உள்ளார்.

பின்னர் இருவரும் ஒன்றாக ஆமதாபாத்தில் கட்டப்பட்டுள்ள உலகின் பெரிய கிரிக்கெட் மைதானமான மோதிரா கிரிக்கெட் மைதானத்திற்கு பகல் 2.20 மணியளவில் வந்தடைகின்றனர். இங்கு நடக்கும் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் மோடி, டிரம்ப் உரையாற்றுகின்றனர். இந்த நிகழ்ச்சியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.


latest tamil news
பிப்.,24 அன்று மாலையே குடும்பத்தினருடன் ஆமதாபாத்தில் இருந்து ஆக்ரா செல்ல உள்ளார். தாஜ்மஹாலை பார்வையிட டிரம்ப் வர உள்ளதால் அன்று பகல் 12 மணி முதல், சுற்றுலா பயணிகள் வருகைக்கு தடை விதிக்கப்படுகிறது. பிப்.,25ம் தேதி காலை டில்லியில் டிரம்ப் மற்றும் அவரது மனைவிக்கு, ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

தொடர்ந்து அவர்கள் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்த உள்ளனர். பிறகு ஐதராபாத் இல்லத்தில் டிரம்ப் மற்றும் மோடி இடையேயான அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
23-பிப்-202018:20:34 IST Report Abuse
Krishnamurthy Venkatesan tajmahal is a monument and it is a graveyard of mumtaz, wife of shah jahan. This tajmahal does not reflect any of our customs and heritage. officials who fix the places for foreign dignitaries visit, should give more importance to indian culture and heritage.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
23-பிப்-202013:34:54 IST Report Abuse
Natarajan Ramanathan தாஜ்மகாலை பார்ப்பதைவிட தஞ்சை பெரியகோவிலை பார்க்கும்படி யாராவது ட்ரம்புக்கு எடுத்து சொன்னால் நல்லது.
Rate this:
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
23-பிப்-202007:52:27 IST Report Abuse
Matt P . அவ்வளவு பாசமானவர் நம்ம பிரதமர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X