டிரம்ப் நிகழ்ச்சியில் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு இல்லை

Added : பிப் 22, 2020 | கருத்துகள் (28)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு வழங்கப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.வரும் 24 மற்றும் 25 தேதிகளில் டிரம்ப் அவரது குடும்பத்தினருடன் இந்தியா வருகிறார்.



latest tamil news


இவர் வருகைக்ககான ஏற்பாடுகள் தடல், புடலாக நடந்து வருகின்றன. பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் டிரம்ப் மனைவி மெலனியா டில்லியில் ஒரு பள்ளியில் மாணவ, மாணவிகளுடன் சந்திக்கும் நிகழ்ச்சி நடக்கவுள்ளது. இந்த பள்ளி டில்லி அரசு மேற்பார்வையில் செயல்படுவதாகும். இந்த பள்ளி நிகழ்ச்சிக்கு தங்களை அழைக்கவில்லை என முதல்வர் கெஜ்ரிவாலும், துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

காங்கிரஸ் தரப்பில் கூறப்படுவதாவது: டிரம்ப் வருகையில் எதிர்கட்சியினரையும் அழைக்க வேண்டும். மத்திய அரசு சில குறிப்பிட்ட நபர்களை மட்டும் அழைத்துள்ளது. இது போன்ற அரசியல் கீழ்த்தரமானது என்று குற்றம்சாட்டி உள்ளது.


latest tamil news


இதற்கு பா.ஜ., தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஏதும் உள்நோக்கம் இல்லை என்று கூறியுள்ளனர். டில்லியில் உள்ள அமெரிக்க துாதகரம் தான் யார், யார் டிரம்ப் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


என்ன ஒப்பந்தங்கள் ?


டிரம்ப் வருகையின் போது இந்தியா, அமெரிக்கா இடையில் வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
23-பிப்-202014:20:45 IST Report Abuse
Aarkay அவ்வளவு பெரிய நிகழ்ச்சிக்கு மாநகர மேயருக்கெல்லாம் எதற்கு அழைப்பு விடுக்கவேண்டும்?
Rate this:
Share this comment
Cancel
23-பிப்-202011:46:03 IST Report Abuse
Ganesan Madurai அந்த விழாக்கு போய் .........
Rate this:
Share this comment
Cancel
??????? - Thiruvaiyaru,இந்தியா
23-பிப்-202010:21:21 IST Report Abuse
??????? அறிவாளிகள் ஒதுக்கப்படுகிறார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X