நடைபாதையில் பைக் ஓட்டியவருக்கு பாடம் புகட்டிய 'சூப்பர் லேடி'

Updated : பிப் 22, 2020 | Added : பிப் 22, 2020 | கருத்துகள் (47)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

புனே: புனேயில் நடைபாதையில் பைக் ஓட்டி, பாதசாரிகளுக்கும், மூத்த குடிமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தி வந்தவர்களுக்கு வயதான பெண் ஒருவர் துணிச்சலுடன் பாடம் கற்றுக் கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



latest tamil news



புனே எஸ்என்டிடி கல்லூரி அருகே உள்ள நடைபாதையில் பலரும் தங்களின் பைக்குகளை நிறுத்திச் செல்வதும், சிக்னல் அருகில் உள்ள இந்த நடைபாதையில் பலர் பைக்களை வேகமாக ஓட்டி வருவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். இதைத் தடுக்க முயன்றும் புனே போக்குவரத்து போலீசாரின் முயற்சிகள் தோல்வி அடைந்து விட்டன. பைக் ஓட்டிகளால் நடைபாதையில் நடக்க முடியாமல் அவதிப்பட்டவர்களில் நிர்மலா கோகலேவும் ஒருவர்.

வயதான இவர் சமீபத்தில், நடைபாதையின் குறுக்கே நின்று கொண்டு, எதிரே வேகமாக பைக்கில் வந்தவரிடம், தொடர்ந்து நடைபாதையில் செல்ல வேண்டுமானால் என்னை மோதி விட்டு செல். இல்லாவிட்டால் கீழே இறங்கி, சாலையில் பைக்கை ஓட்டிச் செல் என சத்தமாகவும், கடுமையாகவும் பேசினார். இதனை எதிர்பார்க்காத அந்த இளைஞர், நடைபாதையை விட்டு இறங்கி, பைக்கை ஓட்டிச் சென்றார்.


latest tamil news


நிர்மலாவில் இந்த செயலைக் கண்டு, அங்கிருந்த பலரும் அவருடன் சேர்ந்து பைக் ஓட்டிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். நிர்மலாவின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். அதிகாரிகள் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையும் வலுப்பெற்றுள்ளது. நிர்மலா, பைக் ஓட்டி வந்த இளைஞரை கண்டித்த வீடியோ சமூக வலைதளங்களில், சூப்பர்லேடி என குறிப்பிட்டு வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh M - COIMBATORE,இந்தியா
28-பிப்-202010:50:53 IST Report Abuse
Ramesh M வெரி குட். போலீஸ் கண்டிப்பாக இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பைக் காற்றை பிடுங்கி விட்டு வண்டியை இறங்கி தள்ளிக்கொண்டு போக செய்யவேண்டும். நடை பாதை என்பதே நடப்பவர்கள் பாதுகாப்பாக நடந்து செல்ல தான். அதேபோல் சில இடங்களில் எதிர்திசையில் வண்டியை ஓட்டி வந்து ட்ராபிக் ஏற்படுத்துகிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
26-பிப்-202012:10:06 IST Report Abuse
skv srinivasankrishnaveni இதேபோல பைக் ரெஸ்லெவரும் கழிசடைகளையும் திருத்த பைக்கை காற்று புடுங்கிவிடுங்கோ அப்போதான் திருந்துவானுக எல்லா இடத்ததுலேயும் இந்த ரவுசு தங்கவேமுடியலீங்க குறுகலான கிராம வீதிகளில் சிறுபஞ்சங்களும் 2வீலெர் ஒட்டிண்டுவரானுக என்பதுமஹாகொடூரமான கொடுமை நாசமாப்போக போறதுக்கு பின்னாடி தன பாட்டி ஆர் தாத்தாவையும் நச்சுனு ஒட்டுதுங்களே சாமி பயமாயிருக்கு பைகமொத்தி விழுந்து லோயர் பேக் லே அடிபட்டு இன்னம் நடக்கமுடியாமல்தவிக்கும் நான் ஒரு கிழவி
Rate this:
Share this comment
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
24-பிப்-202020:20:06 IST Report Abuse
Sampath Kumar என்ன செய்வது ?? இப்படிதான் நாம் செயல் பட வேண்டிய கட்டாயம் உள்ளது இருந்தாலும் அவரை பின்பற்றி துணிவுடன் மற்றவர்கள் செயல் பட்டாள் நல்லதே விளையும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X