பொது செய்தி

இந்தியா

வாரணாசியில் சிவ வழிபாடு நடத்தும் முஸ்லிம் பெண் வக்கீல்

Updated : பிப் 22, 2020 | Added : பிப் 22, 2020 | கருத்துகள் (41)
Share
Advertisement

வாரணாசி: உ.பி., மாநிலம் வாரணாசியில் பெண் வக்கீல் ஒருவர் சிவன் கோயிலை கட்டியதுடன் தினந்தோறும் சிவவழிபாட்டை நடத்தி வருகிறார்.



latest tamil news




உ.பி., மாநிலத்தை சேர்ந்த பெண் வக்கீல் நூர் பாத்திமா. முஸ்லீம் மதத்தை சேர்ந்த இவர் கடந்த2004 ம் ஆண்டில் இருந்து வாரணாசியில் குடியிருந்து வருகிறார். தன்னுடைய சொந்த வீட்டில் வசித்து வரும் இவர் தனது வீட்டில் தினந்தோறும் சிவ வழிபாட்டை மேற்கொண்டு வருகிறார்.மேலும் சிவனுக்கு அபிஷேகமும் செய்து வருகிறார்.

இது குறித்து அவர் கூறுகையில், நான் சிவன் இருப்பதை ஏற்றுக்கொண்டேன். அவர் காசியின் ஆத்மாவாக இருக்கிறார். இந்த புனித நகரத்தின் நெறிமுறைகளின் ஒரு பகுதியாக இருக்கிறார். மேலும் தினந்தோறும் ஹர் ஹர் மகாதேவ் ஸ்லோகத்துடன் அன்றைய தின வாழ்க்கையை துவங்குகிறேன். இதற்காக நான் முஸ்லிம் மதத்தை விட்டு வெளியேறி விட்டேன் என்று அர்த்தமல்ல என கூறினார்.


latest tamil news




ரயில்வே துறையில் பணி புரிந்த வந்த கணவருடன் கடந்த 2004 ம் ஆண்டில் வாரணாசிக்கு குடிபெயர்ந்த நூர் பாத்திமா அங்கேயே சொந்த வீடு கட்டி உள்ளார். அப்பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்னர் பலர் மர்மமான முறையில் இறந்தனர். அவர்களில் பெண் வக்கீல் நூர் பாத்திமாவின் கணவரும் ஒருவர். தனது கணவர் மறைவை தொடர்ந்து ஆறுதலுக்கான தேடலில் சிவ வழிபாட்டை மேற்கொண்டாக கூறி உள்ளார். தொடரந்து ஹிந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றாக வாழ்ந்தால் தான் நாடு அபிவிருத்தி அடையும் என்றும் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
23-பிப்-202017:26:37 IST Report Abuse
Endrum Indian இதுக்காக்கத்தான் நான் சொல்வது இந்தியாவின் பெயரை இந்துஸ்தான் என்று மாற்ற வேண்டும் எல்லா மசூதிகளிலும் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபடவேண்டும் எல்லா சர்ச்சுகளிலும் கிருஷ்ணர் சிலையை வைத்து வழி படவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Fardhikan - Rajakambeeram,இந்தியா
23-பிப்-202015:32:31 IST Report Abuse
Fardhikan காவிகளின் அடுத்த குறி
Rate this:
Share this comment
Cancel
Vaduvooraan - Chennai ,இந்தியா
23-பிப்-202013:06:08 IST Report Abuse
Vaduvooraan அந்த பெண்மணிதான் ஏதோ ஒரு நம்பிக்கையில் சிவபெருமானை வழிபடுகிறார் என்றால் அவர் படத்தோடு அதை செய்தியாக வெளியிடவேண்டுமா என்ன?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X