ராமர் மிக பெரிய சோஷலிஸ்ட்: சமாஜ்வாதி தலைவர்

Updated : பிப் 22, 2020 | Added : பிப் 22, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement

புதுடில்லி: ராமர், அவர் காலத்தில் மிக பெரிய சோஷலிஸ்ட்டாக இருந்துள்ளார் என சமாஜ்வாதி கட்சியின் செய்தி தொடர்பாளர் ஐ.பி.,சிங் கூறி உள்ளார்.latest tamil newsஇது குறித்து அவர் கூறியதாவது: முதல்வர் ஆதித்யநாத் சோஷலிசத்திற்கு பதில் ராமராஜ்யத்தை விரும்புவதாக கூறுகிறார். அவர் ராமரின் வாழ்க்கையையும் நேரத்தையும் புரிந்து கொண்டிருந்தால், அவர் இதைச் சொல்லியிருக்க மாட்டார். ராமர் அவர் காலத்தில் மிகப் பெரிய சோஷலிஸ்ட் ஆக திகழ்ந்துள்ளார். அவர் அயோத்தியில் ஆட்சியில் அமர்ந்த பின்னர், சுகாதாரம், கல்வி மற்றும் வரி போன்றவற்றில் பல்வேறு கொள்கைகளை வகுத்தார், இது பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்தது. சோஷலிஸ்ட்டாக இருந்த ராமரை முதல்வர் ஆதித்யநாத், புரிந்து கொள்ளவில்லை. முற்றிலும் அறியாதவராக இருக்கிறார் என சிங் கூறியுள்ளார்.


latest tamil newsகடந்த சில தினங்களுக்கு முன்னர் நடந்த முடிந்த டில்லி சட்டசபை தேர்தலில் அனுமன்பக்தி குறித்து பரபரப்பாக பேசப்பட்டது. தற்போது ராமர் மிக பெரியசோஷலிஸ்ட் என துளசிதாசரின் ராமயணத்தை மேற்கோள் காட்டி கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
23-பிப்-202013:53:44 IST Report Abuse
Sampath Kumar ராமன் சோசலிஸ்ட் ?? அப்படினா ராவணன் யாரு ? கம்யூனிஸ்டா? உங்க அற்பபுத்தியை ஆராந்து பார்க்காத அறிவை உளறல்களை எல்லாம் நாங்க கேக்கணும் என்பது எங்க தலை எழுத்து
Rate this:
Share this comment
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
23-பிப்-202010:54:03 IST Report Abuse
mindum vasantham Ram was a socialist and samjadi were a goondaist
Rate this:
Share this comment
Cancel
Dr Kannan - Yaadum Voorae,யூ.எஸ்.ஏ
23-பிப்-202004:25:11 IST Report Abuse
Dr Kannan தலித் யோகி சம்பூகனை கொலை செய்தவன் ராமன்... ராமாயணத்தை படிக்காமல் சும்மா உளறுவதால் எந்த பயனுமில்லை மூதறிஞர் ராஜாஜி அவர்கள் ராம் விஷ்ணுவின் அவதாரம் இல்லை என்று எழுதிவுள்ளார். ராம் ஒரு ஷத்திர்ய அரசர் மட்டுமே. இராவணன் ஒரு சிறந்த சிவபக்தர், ராம் ஒரு வைஷ்ணவர். எனவே ராமாயணத்தை சைவ - வைணவ சண்டையாகத்தான் சிலர் பார்க்கின்றனர். மற்றவர்கள் தேவா-அசுரர் போர் காவியமாகவும் பார்க்கிறார்கள். ராமனை தேவா (கடவுள்) என்றும், ராவணனை அசுரன் (பாவி) என்றும் சித்தரிக்கப்பட்டுளர்கள். அனால் ஆர்யன் (ஈரான்/Persian) மொழியில் தேவா என்றால் பாவி என்றும் அசுரர் (Ahura Mazda - Persian God) என்றால் கடவுளர் என்றும் பொருள். எனவே யார் சொல்வது உண்மை அல்லது சரியானது ? தமிழ் சித்தர் திருமூலர் எழுதியபடி ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது தன சரியான விளக்கம். மேலும் ராமாயணம் ஆர்யன் (ராம்) திராவிடன் (ராவண)போர் என்றும் கருத்து நிலவுகிறது. திராவிடன் ராவணனிடம் விமானம் இருந்தது (சீதையை விமானத்தில் தூக்கி சென்றான் என்கிறது ராமாயணம் ) ஆனால் ராமனிடம் விமானம் கிடையாது. எனவே ஆர்யன் ராம் தாழ்ந்தவன் என்று பொருளா? மேலும் ராமன் கர்ப்பிணியான சீதாவை தனியாக கொடிய காட்டில் விட்டுவிடுகிறான். லட்சுமண் இளம் பெண் சூர்ப்பனகையின் மூக்கு / மார்பகங்களை அறுத்துவிடுகிறான். இந்தமாதிரி நமது மகளுக்கோ அல்லது உடன் பிறந்தவளுக்கோ நடந்திருந்தால், நாம் அத்தககை கொடுமை செய்தொரை வணங்குவோமா ? சிந்தித்து செயல் படவேண்டும். நமது இளைய தலைமுறை இம்மாதிரி கேள்வி கணைகளை தொடுத்து கொன்டே இருக்கிறார்கள். இந்து மதத்தை அரசியல் வாதிகள் தங்கள் அரசியல் செல்வாக்குக்காகவும் மற்றும் சிலர் இந்து கோவில்களை வியாபார நோக்கோடும் தவராக பயன் படுத்துவதால் இந்து மதத்தின் புனிதத்தையும் சிறப்பையும் சிதைக்கிறார்கள். உண்மையான இந்துக்கள் கட்சி பாகுபாடு இன்றி இந்து மதத்தை தவறாக அரசியல் ஆக்குவதை தடுக்க வேண்டும். அன்று ஜெர்மானியர்கள் நாஜி ஹிட்லர் இனவெறி மற்றும் போர்வெறி போன்றவற்றை தட்டி கேட்க்காமல் போனதால் தான் இரண்டாம் உலகப்போர் ஏற்பட்டு பேரழிவை சந்தித்தித்தது என்பது வரலாறு. எப்பொருள் யார் யார் வாய் கேட்பீனும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு .
Rate this:
Share this comment
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
23-பிப்-202012:16:44 IST Report Abuse
Dr. Suriyaஇருக்கிறது இந்தியா சார், கருணாநிதி இந்துன்னா திருடன்னு வேறுமொழியில கூறுவதை வைத்து சொண்ணேன்னு சொன்ன மாதிரி இருக்கு நீங்க சொல்லறது. ஈரான் மொழியில சொல்றதவச்சி மொழி பெயர்ப்பு செய்தால் தப்பான விளக்கம் தான் கிடைக்கும். நம்ப மொழியில சொல்லறதை நம்ப மொழிலில உள்ள அர்த்தம்தான் பார்க்கவேண்டும் தவிர நம்மமொழியின் வார்த்தைக்கு அடுத்த மொழியில் விளக்கத்தை பார்க்கக்கூடாது என்கிற அடிப்படை அறிவு கூட இல்லாதது வருத்தம்தான்.......
Rate this:
Share this comment
mindum vasantham - madurai,இந்தியா
23-பிப்-202019:50:56 IST Report Abuse
mindum vasanthamஒரு மன்னன் பிற மானிடம் போர் புரிவது இயல்பு இதில் இராவணன் ப்ராஹ்மணன்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X