'சீனாவில் தவிக்கும் இந்தியர்களை காப்பாற்றுங்கள்!'

Added : பிப் 22, 2020
Share
Advertisement
 'சீனாவில் தவிக்கும் இந்தியர்களை காப்பாற்றுங்கள்!'

'கொரோனா' வைரஸ் பாதிப்பதற்குள் எங்களைக் காப்பாற்றுங்கள் என, 'தினமலர்' இணையதளத்திற்கு, 'இ - மெயில்' மூலம் இளைஞர் ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரகாஷ்ராஜ் என்பவர் இந்த மெயிலை, நமக்கு அனுப்பியுள்ளார்.
அதில், 'சீனாவில் உள்ள நிஞ்சபோ ஜீஜியாங் என்ற இடத்தில் இருந்து பேசுகிறேன். இ - மெயில்நாங்கள், 10 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் இங்கு இருக்கிறோம். கொரோனா வைரசால், இங்கு நிலைமை மோசமாகிக் கொண்டேயிருக்கிறது. தயவு செய்து எங்களது நிலையை, நம் அரசிடம் எடுத்துச் சொல்லி காப்பாற்றுங்கள்.இவ்வாறு, அவர் எழுதியுள்ளார்.

இ - மெயில் அனுப்பியவரிடம் மேற்கொண்டு, இது தொடர்பாக தொடர்பு கொள்ள முடியாத நிலையில், சீனாவின், செங்கோவ் என்ற இடத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வேலை பார்த்த நாகூர் கனி என்பவரை தொடர்பு கொண்டோம்.சில மாதங்களுக்கு முன், தன் சொந்த ஊரான, சிவகங்கை மாவட்டம், தேவகோட்டைக்கு திரும்பியிருந்த அவரிடம், இந்த, இ - மெயில் வந்துள்ளது பற்றி பேசினோம்.
அவர் கூறியதாவது:
சாப்பாடு இல்லை
இந்த இடம் எனக்கு தெரியும். இந்தியாவில் இருந்து, தகவல் தொழில்நுட்பம் எனப்படும், ஐ.டி., துறையினர் சீனா வரும் போது, பெரும்பாலும் இங்கு தான் வருவர். பத்து பேர் இங்கு இருக்கிறோம் என அவர் குறிப்பிட்டுள்ளது, அவரது குழுவைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம். ஆனால், இந்த பகுதியில், 1,000த்திற்கும் அதிகமான இந்தியர் இருப்பர். இவ்வாறு, அவர் கூறினார்.
அதுபோல, சீனாவில் வேலை பார்த்து, தமிழகம் திரும்பியுள்ள சிலர் கூறியதாவது:அங்கே, 'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' போன்ற சமூக வலைதளங்கள், கிரிக்கெட் கிடையாது. அந்த நாட்டிற்கு என, தனி தகவல் தொடர்பு மொபைல் போன் ஆப் உள்ளது. அதில், எல்லா தகவல்களையும் பதிந்து இருப்பதால், அரசுக்கு முரணான ஒரு விஷயத்தை யாராவது பதிந்தால், அடுத்த நிமிடமே நம் வீட்டு வாசலில் போலீஸ் வந்து நிற்கும்.நோய் பாதிப்பு பீதியால், பள்ளி, கல்லுாரிகள், வேலை பார்க்குமிடங்கள் என அனைத்தையும் மூடி விட்டனர்.
மக்கள் நெருக்கமாக புழங்கும் மார்க்கெட் பகுதிகளும் மூடப்பட்டு விட்டன.இந்தியர்கள் அறை எடுத்து தான் தங்கி இருக்கின்றனர்; அவர்களுக்கு சரியான சாப்பாடு கிடைக்கவில்லை. வேலை பார்ப்பவர்களுக்கு வேலை இல்லை; வருமானம் இல்லை; ஊருக்கு திரும்ப விமானங்கள் இல்லை. இதனால், இந்தியாவில் உள்ள அவர்களது குடும்பத்தினரின் கவலை அதிகரித்துள்ளது. எனினும், 'சார்ஸ்' என்ற இது போன்ற கொடிய நோயிலிருந்து மீண்டவர்கள் சீனர்கள்.

அதனால், கொரோனாவில் இருந்தும் மீண்டு விடுவர் என்ற நம்பிக்கை அங்கிருப்போருக்கு உள்ளது. வூகான் மாகாணத்தில் இருந்த இந்தியர்களை காப்பாற்றியது போல, சீனாவில் உள்ள மற்ற இந்தியர்களையும் காப்பாற்ற வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர். - நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X