அரசியல் செய்தி

தமிழ்நாடு

சட்டசபையில் முதல்வர் கேள்வி: ஸ்டாலின் திணறல் ஏன்?

Updated : பிப் 23, 2020 | Added : பிப் 22, 2020 | கருத்துகள் (49)
Share
Advertisement
 சட்டசபை,முதல்வர், கேள்வி,சொதப்பல்,ஸ்டாலின், திணறல்,

'குடியுரிமை திருத்த சட்டத்தால், யாருக்கு பாதிப்பு ஏற்பட்டது?' என, சமீபத்தில், சட்டசபையில் முதல்வர் கேட்ட கேள்விக்கு, தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தரப்பில், எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. 'சட்டம் பற்றிய புரிதல், ஸ்டாலினுக்கு இல்லை என்பதால் சொதப்பி விட்டார்' என, சமூக ஊடக கருத்தாளர்கள், காய்ச்சி எடுக்கின்றனர்;அரசியல் வல்லுனர்களோ, 'அடிப்படை விஷயங்களில், நன்கு சிந்தித்து ஆழ்ந்த கருத்து கொள்ள வேண்டும் என்பதை, ஸ்டாலின் இன்னும் புரிந்து கொள்ளவில்லை' என்கின்றனர்.

தமிழக சட்டசபையில், 14ம் தேதி,பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் மீதான விவாதம், 17ம் தேதி முதல், 20ம் தேதி வரை நடந்தது. பட்ஜெட்டில், மக்களை கவரும் திட்டங்கள் இல்லை. வருவாய் பற்றாக்குறை அதிகரித்துள்ளது.மாநிலத்தின் மொத்த கடன், 4.56 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. எனவே, பட்ஜெட் விவாதத்தில், தி.மு.க.,வினரின் கேள்விகளுக்கு, பதில் அளிக்க முடியாமல், அ.தி.மு.க., தடுமாறும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்க்கட்சிகளின் கேள்விகளை, முதல்வர் மற்றும் அமைச்சர்கள்எளிதாக சமாளித்தனர்.


வெளிநடப்பு


சட்டசபை துவங்கிய முதல் நாளில், இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை, திரும்பப் பெற வலியுறுத்தி, தீர்மானம் நிறைவேற்றும்படி, தி.மு.க., தரப்பில் வலியுறுத்தப்பட்டது; சபாநாயகர் ஏற்கவில்லை. அதை கண்டித்து, எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.மறுநாள், தி.மு.க., - எம்.எல்.ஏ., மனோ தங்கராஜ் பேசுகையில், 'மத்திய அரசுக்கு பயந்து, குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக, தீர்மானம் நிறைவேற்ற பயப்படுகிறீர்கள்' என, அ.தி.மு.க.,வை குற்றம் சாட்டினார்.

அதற்கு பதில் அளித்த முதல்வர், 'இதையே சொல்லி, நாட்டு மக்களை ஏமாற்றுகிறீர்கள். இதனால், யார் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்; சொல்லுங்கள். நாங்கள் பதில் சொல்கிறோம். யாராவது ஒருவர் பாதிக்கப்பட்டிருந்தால் சொல்லுங்கள்' என்றார், ஆவேசமாக.


பாதிப்புதி.மு.க., தரப்பில், எந்த பதிலும் இல்லை. மறுநாள், சமூக வலைதளங்களில், 'இந்த வாய்ப்பை, தி.மு.க., தவற விடக் கூடாது. 'தி.மு.க., தலைவர் ஸ்டாலின், சட்டசபையில், குடியுரிமை திருத்த சட்டத்தால் ஏற்படும் பாதிப்புகளை, முதல்வருக்கு விளக்க வேண்டும்' என, பலரும் பதிவிட்டனர். ஆனால், எதிர்க்கட்சி தரப்பில் பேசிய அனைவரும், 'சட்டத்தைதிரும்பப் பெற வேண்டும்' என்று வலியுறுத்தினரே தவிர, அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசவில்லை.

சட்டசபையில், இறுதி நாளில், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசுகையில், 'குடியுரிமை திருத்த சட்டத்தால், யாராவது பாதிக்கப்பட்டு இருக்கின்றனரா என, முதல்வர் கேட்டார். 'காரணங்களை பட்டியலிட, தயாராக இருக்கிறேன். இந்த சட்டம், இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது. அது ஒன்றே போதும், இந்த சட்டத்தை திரும்ப பெற' என்றார்.

ஆனால், என்ன பாதிப்பு; யாருக்கு பாதிப்பு என்பதை விளக்க வில்லை.அதற்கு பதிலாக, 'தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பை, தமிழகத்தில் நடத்த மாட்டோம்' என, உறுதி அளிக்கும்படி, அரசை வலியுறுத்தினார்.அதற்கு பதில் அளித்த அமைச்சர் உதயகுமார், 'தி.மு.க., ஓட்டு வங்கிக்காக, தவறான தகவலைக் கூறுகிறது' எனக் கூறியதுடன், 'தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு, தி.மு.க., - காங்., கூட்டணி அரசு, மத்தியில் இருந்தபோது துவக்கப்பட்டது' என்றார்.


முற்றுப்புள்ளி


மேலும், பதிவேடு கணக்கெடுப்பு தொடர்பாக, சில விபரங்களைக் கேட்டு, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறி, ஸ்டாலின் எழுப்பிய பிரச்னைக்கு, முற்றுப்புள்ளி வைத்தார். குடியுரிமை திருத்த சட்டத்தால், யாருக்கும் பாதிப்பில்லை என்பதை, அ.தி.மு.க., அழுத்தம் திருத்தமாக கூறியது. பாதிப்பு என்ன என்பதை கூறாமல், கிடைத்த வாய்ப்பை, தி.மு.க., தவற விட்டது.சட்டசபையில், தி.மு.க., - எம்.எல்.ஏ., பழனிவேல் தியாகராஜன், சில புள்ளி விபரங்களோடு, பட்ஜெட்டில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டினார்.

அதற்கு பதில் அளித்த, துணை முதல்வர், 'உங்கள் ஆட்சியிலும் இப்படி தான் இருந்தது' என, கூறியே சமாளித்தார். குறைபாடுகளை களைய, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை, கடைசி வரை சொல்லவில்லை.எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், ஆட்சிக்கு எதிராக, பல்வேறு கேள்விகளை எழுப்பிய போதெல்லாம், தி.மு.க., ஆட்சியில் நடந்தவற்றை சுட்டிக்காட்டி, ஆளும் கட்சியினர் அவரை மடக்கினர். அதாவது, தி.மு.க.,வினரை எளிதாக சமாளித்தனர்.


அடிப்படை


இது குறித்து, அரசியல் வல்லுனர்கள் கூறும்போது, 'குடியுரிமை திருத்த சட்டத்தில் என்ன உள்ளது என்பது பற்றிய அடிப்படை புரிதல், ஸ்டாலி னுக்கு இல்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது.

'போராட்டம் நடத்துவது, எதிர்குரல் கொடுப்பது ஆகியவை மட்டும் தான், எதிர்க்கட்சியின் பணி என நினைத்து விட்டார் போலும். ஆனால் அதைத் தாண்டி, அடிப்படை விஷயங்களில் ஆழ்ந்த கருத்து வேண்டும் என்பதை, இன்னும் அவர் புரிந்து கொள்ளவில்லை' என்கின்றனர்.'இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, இரண்டு கோடி பேரிடம் கையெழுத்து வாங்கிய, தி.மு.க.,வினருக்கு, அதனால் ஏற்படும் பாதிப்பை, சட்டசபையில் கூறத் தெரியவில்லையே' என, சமூக வலைதளங்களில், கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
28-பிப்-202020:22:39 IST Report Abuse
skv srinivasankrishnaveni கூமுட்டைகளா CAA சட்டம்னாலே இங்கேயே வமிசாவளியா பிறந்துவளந்து செத்தால் பிழைத்தால் கூட இங்கேயே தான் இருக்காங்க பலர் கிறிஸ்துவால் முஸ்லீம்களும் என்பது 10000000000000%உண்மைடா பேக்குகளா கல்லமவந்து வோட்டுப்போடவே ஆதார் ஐடி எல்லாம் வழங்கி இருக்காளே மமதபேனேர்ஜி போன்றவற் தான் நம்ம நாட்டுப்பிரஜைகளே இல்லென்னும் சொல்லலாம் ஒரு இழவும் தெரியாது சுடாலினுக்கு ஒண்ணாம் நம்பர் உலரள்திலகம் ராகுல் ஒன்னம்நம்பர் புளுகன் பிரியங்காவோ உலகமகா பிராடுங்க இவள் பிற்கால பண்ணும் எல்லோரும் வடிகட்டின முழு முட்டாளுங்க இந்தக்குடியுரிமை சட்டம் நாளே பாதிப்பு கள்ளமா வந்து குடியேறும் சோ CALLED அகதிகள் எந்தஒரு உரிமையும் இல்லாமல் நம்மநாட்டுலே நுழைஞ்சுட்டு நம்மளையே கொள்ளைஅடிச்சுகொலையும் செய்றானுக இவள் தூண்டிவிட்டுட்டு பாலையை பிஜேபி மீதுபோதும் பொறுக்கிகளேதான் இந்தக்கூட்டம்
Rate this:
Share this comment
Cancel
kumzi - trichy,இந்தியா
26-பிப்-202014:13:47 IST Report Abuse
kumzi மூர்க்கனின் ஓட்டு பிச்சைக்கான சுடலை கானுக்கும் அறிவுக்கும் என்ன சம்பந்தம்
Rate this:
Share this comment
Cancel
K.Muthuraj - Sivakasi,இந்தியா
26-பிப்-202009:57:04 IST Report Abuse
K.Muthuraj நம் நாட்டில் நிர்வாக அதிகாரங்கள் அனைத்தும் மாநில அரசாங்கத்தாலேயே நடத்தப்படுகின்றது. ஒரு நல்ல அரசாங்கம் என்பது ஒரு குழந்தை பிறந்தது முதல் அதற்கான அனைத்து விபரங்களையும் சரிவர வைத்திருக்க வேண்டும். அது நமது நாட்டில் கிடையாது. பிறப்பு சான்றிதழ்க்கே அல்லாட வேண்டியிருக்கின்றது. நமது மக்களுக்கும் பொறுப்பு கிடையாது. குடிமக்கள் விபரம் மத்திய அரசாங்கம் கேட்டவுடன் மாநில அரசு உடனே கொடுக்கும் அளவிற்கு நிர்வாகம் இருந்தால் நல்ல மக்கள் நல அரசாங்கம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X