பொது செய்தி

இந்தியா

பைக் டாக்ஸி திட்டத்தில் ரூ. 4 ஆயிரம் கோடி மோசடி?

Updated : பிப் 22, 2020 | Added : பிப் 22, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement

புதுடில்லி: பைக் டாக்ஸி திட்டத்தில் ரூ. 4 ஆயிரம் கோடி அளவிற்கு மோசடி செய்தது குறித்து, டில்லி, உ.பி., மாநிலங்களில் 12 இடங்களில் அமலாகத்துறை சோதனை மேற்கொண்டுள்ளது.



latest tamil news




உ.பி., ம.பி., ராஜஸ்தான், ஹரியானா, உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கால் டாக்ஸி சேவையை போன்று பைக் போட் டாக்ஸி திட்டத்தை, கிரேட்டர் நொய்டாவை தலைமையிடமாக கொண்ட நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இந்நிறுவனம் பைக் போட் டாக்ஸி சேவைக்கு முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.62 ஆயிரத்து100ஐ பணமாக பெற்றது. மேலும் அவர்களுக்கு ஒரே ஆண்டில் இரட்டிப்பாக பணம் திரும்ப தரப்படும் என்றும் மாதந்தோறும் உறுதியான வருமானம் கிடைக்கும் எனவும் உறுதி அளித்தது. சுமார் 2.25 லட்சம் பேர்களிடம் இருந்து சுமார் ரூ.3 ஆயிரம் கோடி முதல் ரூ. 4 ஆயிரம் கோடி வரையில் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், உறுதியளித்தபடி பணத்தை அளிக்கவில்லை.


latest tamil news



கிரேட்டர் நொய்டாவில், இந்த நிறுவனத்தின் மீது முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து நடந்த விசாரணையில் நிறுவனத்தை நடத்தியவர் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த சஞ்சய் என்பது தெரிய வந்தது. அவர் கைது செய்யப்பட்டார். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 12 பேர் தலைமைறைவாக உள்ளனர்.

இந்நிலையில், டில்லி , உ.பி., மாநிலங்களில் இந்நிறுவனத்திற்கு சொந்தமான 12க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
23-பிப்-202019:41:48 IST Report Abuse
S.Baliah Seer ஒரே வருடத்தில் இரட்டிப்பு மோசடி போலீசாருக்கு தெரியாமல் எப்படி நடக்கும்.ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுக்காரர்கள் இருக்கத்தான் செய்வார்கள்,திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது போன்ற பழைய பல்லவிகளைப் பாடுவதால் எப்பயனும் இல்லை.
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
23-பிப்-202016:58:01 IST Report Abuse
Endrum Indian இந்த நிறுவனத்தை நடத்தியவன் ஒரு அரசியல்வாதி???அரசியல்வாதியின் தர்மம் "பொய் சொல்வது, மற்றவர்களின் பணம், பெண்களை கொள்ளை அடிப்பது தானே, அதைத்தானே செய்திருக்கின்றான். இவனுக்கு வக்காலத்து வாங்கும் நமது ஜல்லடை ஓட்டை சட்டமும் அநீதிபதிகளும்????
Rate this:
Share this comment
Cancel
23-பிப்-202013:55:48 IST Report Abuse
ஆப்பு இதெல்லாம் ராஜீவ் காந்தி காலத்துலே, இந்திரா காந்தி காலத்துலே கொடுக்கப்பட்ட கடன்கள். இல்லேன்னா நேரு செஞ்ச சதி. எது புடிக்குதோ அதையே காரணமா வெச்சுக்கோங்க. எங்க ஆட்சியில் மோசடி என்ற பேச்சுக்கே இடமில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X