அரசியல் செய்தி

தமிழ்நாடு

குடியுரிமை சட்ட போராட்டம்: பிரசாந்த் கிஷோர் கைங்கர்யமா?

Updated : பிப் 24, 2020 | Added : பிப் 22, 2020 | கருத்துகள் (20)
Share
Advertisement
குடியுரிமை, சட்டபோராட்டம், பிரசாந்த்கிஷோர், கைங்கர்யம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, தமிழகம் முழுவதும், இஸ்லாமிய அமைப்புகள் நடத்திய போராட்டங்களுக்கு, தி.மு.க., அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை தான் காரணம் என்ற, பேச்சு எழுந்து உள்ளது.

இந்த போராட்டங்களை, தி.மு.க., துாண்டி விடுகிறது என்று, தமிழக பா.ஜ., தலைவர்கள் குற்றம் சாட்டியதால், சென்னையில் இஸ்லாமியர்கள் நடத்திய பேரணியில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பங்கேற்காமல் தவிர்த்து விட்டார் என்றும் கூறப்படுகிறது.


புதுக்கட்சி



குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்திற்காக, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் பொதுச்செயலர் பதவியில்இருந்து, பிரசாந்த் கிஷோர் நீக்கப்பட்டார். தற்போது, அவர் தனிக் கட்சி துவக்க திட்டமிட்டுள்ளார். பீஹார் மாநிலத்தில், வரும் அக்டோபர் மாதத்தில், சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில், பிரசாந்த் கிஷோர் துவக்க உள்ள புதுக்கட்சியும் போட்டியிட வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு, தீவிர எதிர்ப்பு உணர்வை துாண்டி விட வேண்டும் என்பதில், பிரசாந்த் கிஷோர் குழு காய் நகர்த்தி வருகிறது. அ.தி.மு.க., ஆட்சியின் ஊழல் குற்றச்சாட்டுக்களை, தி.மு.க., முன்னிலைப்படுத்தி, அரசியல் செய்வதை விட, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு, தி.மு.க., முக்கியத்துவம் தருகிறது.

இதனால், தி.மு.க.,வில் உள்ள ஹிந்துக்கள், அதிருப்தி அடைந்துள்ளனர். குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, தமிழகம் முழுவதும், இஸ்லாமிய அமைப்புகள் போராட்டங்கள் நடத்துவதற்கு, பின்னணியில் பிரசாந்த் கிஷோர், 'டீம்' இருக்கும் என, தகவல் வெளியாகி உள்ளது.


பார்முலா



டில்லியில், சட்டசபை தேர்தல் நடப்பதற்கு முன், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, இஸ்லாமிய அமைப்புகள் தொடர் போராட்டங்களை நடத்தியதால், அங்கு ஆம்ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. அதே, 'பார்முலா'வை தமிழகத்தில் செயல்படுத்தி, தி.மு.க.,வை வெற்றி பெற வைக்கலாம் என, பிரசாந்த் கிஷோர், 'டீம்' கருதுகிறது. 'இஸ்லாமியர்கள் நடத்தும் போராட்டங்கள், ஸ்டாலின் துாண்டி விட்டு தான் நடக்கின்றன' என, தமிழக பா.ஜ., தலைவர்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டுகின்றனர்.

இதற்கு, ஸ்டாலின் தரப்பில், எந்த பதிலடியும் தரவில்லை. இதற்கிடையில், சென்னையில், இஸ்லாமியர் அமைப்புகள் நடத்திய பேரணியில், ஸ்டாலின் பங்கேற்று, ஆதரவு தெரிவிக்க வேண்டும் என, அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.ஆனால், பேரணியில் பங்கேற்றால், பா.ஜ., குற்றச்சாட்டுக்கு ஆதாரமாகி விடும் என்பதால், பேரணியில் பங்கேற்பதை, ஸ்டாலின் தவிர்த்துள்ளார்.

இதுகுறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:தமிழகம் முழுவதும், கட்சி அமைப்பு ரீதியாக உள்ள மாவட்டங்களில், பிரசாந்த் கிஷோர் டீம் களப் பணிகளில் இறங்கிஉள்ளது.மாவட்டச் செயலர்களுக்கு தொடர்பு இல்லாமல், தனி அலுவலகம் அமைத்து, இயங்கி வருகின்றனர். தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களில், யார் மீதெல்லாம் பொது மக்களுக்கும், கட்சியினருக்கும் வெறுப்பு ஏற்பட்டுள்ளது என்ற, பட்டியலை தயாரிக்க உள்ளனர்.


மார்க்கெட்டிங்


ஒட்டுமொத்தமாக உள்ள, 234 தொகுதிகளில், தி.மு.க., வேட்பாளராக யாரை நிறுத்தினால் வெற்றி என, தொகுதிக்கு தலா, மூவர் பட்டியலையும் தயாரிக்க உள்ளது. இப்படி பல்வேறு பணிகளில், ஸ்டாலின் முதல்வராவதற்கான, 'மார்க்கெட்டிங்' வேலையை, பிரசாந்த் கிஷோர் டீம் கச்சிதமாக செய்து வருகிறது.இவ்வாறு, அக்கட்சி வட்டாரங்கள் கூறின.

தி.மு.க.,வினர் சந்தேகம்!தி.மு.க.,வுக்கு தேர்தல் பணிகள் செய்ய, பிரசாந்த் கிஷோர் அமர்த்தப்படுவதற்கு, லாட்டரி தொழில் அதிபரின் வாரிசு ஒருவர் முக்கிய காரணமாக இருந்துள்ளார். தி.மு.க., பத்தாண்டுகளாக ஆட்சியில் இல்லை. வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., வெற்றி பெற்றாக வேண்டும்.

ஆனால், நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசம், தி.மு.க., வெற்றியை பாதிக்குமா என்ற, கேள்வி எழுந்துள்ளது. எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக, பிரசாந்த் கிஷோரிடம், ஸ்டாலின் ஒப்பந்தம் செய்துள்ளார்.அடுத்த ஆண்டு மே மாதம், தமிழகத்துடன் சேர்த்து மேற்கு வங்கத்திற்கும் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது.

மேற்கு வங்கத்தில், தற்போதைய முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், பிரசாந்த் கிஷோர் பணியாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. ஒரே நேரத்தில், தமிழகம், மேற்கு வங்கம் ஆகிய, இரு மாநிலங்களில், பிரசாந்த் கிஷோரால் வெற்றி தேடி தர முடியுமா என்ற சந்தேகம், தி.மு.க.,வினருக்கு ஏற்பட்டுள்ளது. - நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
24-பிப்-202013:02:19 IST Report Abuse
இந்தியன் kumar இந்த கிஷோர் தான் உபியில் சமாஜவாதி இத்தாலி காங்கிரஸ் கூட்டணிக்கு வேலை பார்த்தார் என்ன நடந்தது தோல்விதான் , மக்கள் எண்ணங்களுக்கு நேராக செயல்பட்டால் தான் வெற்றி கிடைக்கும் ஒரு மதத்தை ஆதரித்து இன்னொரு மதத்துக்கு எதிராக திரும்பி உள்ளார்கள் இந்த ஒண்டு போதும் திமுக ஆட்சியை பிடிக்காமல் இருக்க , திமுக வில் இருக்கும் இந்துக்கள் யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள்,
Rate this:
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
24-பிப்-202012:58:47 IST Report Abuse
இந்தியன் kumar பத்து ஆண்டுகள் ஆட்சியில் இல்லாமல் காய்ந்து போய் கிடக்கிறது எப்படியாவது ஆட்சியை பிடிக்க துடிக்கிறது மக்கள் சக்தி அதை நிராகரிக்கும்.
Rate this:
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
24-பிப்-202012:56:57 IST Report Abuse
இந்தியன் kumar பணத்தால் வெற்றி பெற துடிக்கும் திமுக அதிமுக வை மக்கள் விரட்டி அடிக்கும் காலம் விரைவில் வரும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X