பீஹார் தேர்தலில் பா.ஜ.,- ஐக்கிய ஜனதா தள கூட்டணி தொடருமா?

Updated : பிப் 24, 2020 | Added : பிப் 22, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
பீஹார், தேர்தல்,பாஜ, ஐக்கிய ஜனதா தளம், கூட்டணி,

பீஹார் சட்டசபைக்கு விரைவில் நடைபெறவுள்ள தேர்தலில், ஆளும் ஐக்கிய ஜனதா தளம், தே.ஜ., கூட்டணியில் தொடருமா என்ற பரபரப்பு எழுந்துள்ளது. பல்வேறு மாநில சட்டசபை தேர்தல்களில், பா.ஜ.,வின் தோல்வி, குடியுரிமை திருத்த சட்டம், இட ஒதுக்கீடு விவகாரம், வேலையில்லா திண்டாட்டம் உட்பட, பா.ஜ.,வுக்கு எதிராக அடுக்கப்படும் பல்வேறு குற்றச்சாட்டுகள், ஐக்கிய ஜனதா தளம் தரப்பில் பீதியை ஏற்படுத்தி உள்ளன.

பீஹாரில், 1996 முதல் கைகோர்த்த பா.ஜ., - ஐக்கிய ஜனதா தள கூட்டணி, 2013ல் முடிவுக்கு வந்தது. கடந்த, 2014 லோக்சபா தேர்தலின் போது, பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டதை ஏற்றுக் கொள்ள முடியாமல், ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார், கூட்டணியை முறித்துக் கொண்டார். இதையடுத்து, 2014 லோக்சபா தேர்தலில், பீஹாரில் தனித்துப் போட்டியிட்ட ஐக்கிய ஜனதா தளம், இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்நிலையில், 2015 பீஹார் சட்டசபை தேர்தலின் போது, தன் பரம எதிரியாக கருதப்படும் லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரசுடன், நிதிஷ்குமார் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தார்.


சரிசமம்ஆனால், இரண்டாண்டுகள் முடிவடைவதற்குள், ராஷ்ட்ரீய ஜனதா தளம், கூட்டணியிலிருந்து விலகியது. இந்நிலையில், பா.ஜ., ஆதரவு தர, நிதிஷ் ஆட்சி தப்பியது. அதன் பின், பீஹாரில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி, தொடர்கிறது. கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில், பீஹாரின், 40 லோக்சபா தொகுதிகளில், பா.ஜ., 17 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 17 இடங்களிலும், சரிசமமாக போட்டியிட்டன. ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி, ஆறு இடங்களில் போட்டியிட்டது.

இதில், பா.ஜ., அனைத்து இடங்களிலும் வென்றது. ஐக்கிய ஜனதா தளம், 16 இடங்களிலும், லோக் ஜனசக்தி ஆறு இடங்களிலும் வென்றன. இந்நிலையில், பீஹாரின், 243 சட்டசபை தொகுதிகளுக்கும், வரும் அக்டோபரில், தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதில், பா.ஜ., - ஐக்கிய ஜனதா தள கூட்டணி தொடருமா அல்லது நிதிஷ் குமார் தனித்து போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தொகுதிப் பங்கீடு உடன்படிக்கையை பொறுத்தே, நிதிஷ் குமாரின் முடிவு அமையும் என, கூறப்படுகிறது.

இதற்கிடையில், டில்லி சட்டசபை தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், பீஹார் சட்டசபை தேர்தலை, பா.ஜ., அணுகாது என கூறப்படுகிறது. காரணம், பீஹார் மற்றும் கிழக்கு உ.பி.,யை சேர்ந்த பஞ்சாபி, பூர்வாஞ்சலி இன மக்கள் மற்றும் உள்ளூர் சிறு வியாபாரிகளின் ஓட்டுகள், டில்லி தேர்தலில் முக்கிய பங்கு வகித்தன.

பீஹாரை பொறுத்தவரை, ஹரியானா, மஹாராஷ்டிரா, ஜார்க்கண்டை போல ஜாதி அரசியல் தான், ஆட்சியாளர்களை முடிவு செய்வதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.மேலும், மாட்டு தீவன ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள லாலுவுக்கு, தேர்தலுக்கு முன் ஜாமின் கிடைத்தால், வியூகங்களில் பல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

பீஹாரில் ஐக்கிய ஜனதா தள அரசின் சாதனைகளை கூறி ஓட்டு கேட்க வேண்டும் என்றும், ராமர் கோவில், குடியுரிமை திருத்த சட்டம், ஜம்மு - காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, முத்தலாக் ஆகிய விவகாரங்களை கூறி ஓட்டு கேட்பதை பா.ஜ., தவிர்க்க வேண்டும் என, நிதிஷ் தரப்பு எதிர்பார்க்கிறது.காரணம், சமீபத்தில் நடந்த பல மாநில சட்டசபை தேர்தலில், பா.ஜ., தோல்வி அடைந்ததற்கு, இது போன்ற பிரசார உத்திகளே காரணம் என, ஐக்கிய ஜனதா தளம் கருதுகிறது.

மேலும், இட ஒதுக்கீடு விவகாரத்தில், மத்திய அரசின் நடவடிக்கைகளால், தலித் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் ஆதரவை பா.ஜ., இழந்துள்ளதாக, பா.ஜ.,வின் மற்றொரு கூட்டணி கட்சியான லோக் ஜனசக்தி கட்சி தலைவரும், மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.மேலும், மற்ற மாநிலங்களை போல, பீஹாரிலும், வேலையில்லா திண்டாட்டம் இளைஞர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருப்பதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.


அதிகரிப்புமேலும், குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தால், பீஹாரில் சிறுபான்மையினர் மத்தியில், பா.ஜ.,வுக்கு எதிர்ப்பு அதிகரித்துள்ளது. அதோடு, பீஹாரின் தர்பங்கா மற்றும் மதுபானி பகுதிகளில், கடந்த வாரம் நடந்த போராட்டத்தின் போது, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ், போராட்டக் களத்துக்கு சென்று, முஸ்லிம்களுக்கு ஆதரவு தெரிவித்தது, நிதிஷ் தரப்பை பீதியடைய செய்துள்ளது.

கூட்டணியையும் தாண்டி, தன் வளர்ச்சி பணிகளால், மக்கள் ஆதரவு நிதிஷ்குமாருக்கு இருந்தாலும், இந்த சி.ஏ.ஏ., போராட்டம், சட்டசபை தேர்தலில் கடுமையாக எதிரொலிக்கும் என்ற அச்சம், தே.ஜ., கூட்டணி கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது.

இவை அனைத்தும் ஒருபுறம் இருக்க, டில்லியில், மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சகம் சார்பில், சமீபத்தில் நடைபெற்ற, 'ஹுனார் ஹாத்' என்ற கைவினைப் பொருட்கள் மற்றும் பாரம்பரிய உணவு கண்காட்சிக்கு, பிரதமர் நரேந்திர மோடி, திடீரென வருகை தந்தார். அங்கு, பீஹார் மாநிலம் சார்பில் அமைக்கப்பட்டு இருந்த உணவகத்தில், அவர், 'லிட்டி சோக்கா' என்ற உணவை சாப்பிட்ட புகைப்படம், அனைத்து ஊடகங்களிலும் வெளியானது.

இதையடுத்து, பீஹார் சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்கான வியூகங்களை, பா.ஜ., அரசு வகுக்க துவங்கி விட்டதாகவும், பிரதமரின் இந்த அதிரடி, 'விசிட்' கூட, அதை மனதில் கொண்டே அமைந்ததாகவும் அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.தேர்தல் ஆட்டத்தை பா.ஜ., துவங்கிவிட்டதை அடுத்து, பீஹார் அரசியல் களத்தில், இப்போதே அனல் அடிக்க துவங்கிவிட்டது.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
24-பிப்-202013:08:50 IST Report Abuse
இந்தியன் kumar மக்களுக்கு நல்லது செய்திருந்தால் நிதிஷ் குமார் அவர்கள் மீண்டு வெற்றி கனியை பறிப்பார்.
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
24-பிப்-202013:06:49 IST Report Abuse
இந்தியன் kumar நான்காவது முறையும் வெற்றி பெற்றால் அது நிதிஷ் குமார் அவர்களின் சாதனை தான்
Rate this:
Share this comment
Cancel
Anandan - chennai,இந்தியா
23-பிப்-202023:34:33 IST Report Abuse
Anandan பிஜேபி காலை நன்றாக ஊன்றும் வரை கூட்டணிதான் அப்புறம் நிதிஷ் கட்சிக்கு ஆப்பு வரும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X