'பாரத் மாதா கி ஜெய்' கோஷம்: மன்மோகன் கடும் விமர்சனம்

Updated : பிப் 22, 2020 | Added : பிப் 22, 2020 | கருத்துகள் (126)
Share
Advertisement
Nationalism, BharatMataKiJai, Militant, India, ManmohanSingh, மன்மோகன்சிங், நேரு, ஜவஹர்லால்நேரு

புதுடில்லி :''இந்தியாவில் பயங்கரவாத சிந்தனையை வளர்க்க, 'பாரத் மாதா கி ஜெய்' கோஷம் தவறாக பயன்படுத்தப்படுகிறது,'' என, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பேச்சுக்கள், எழுத்துக்கள் அடங்கிய புத்கத்தின் வெளியீட்டு விழா, டில்லியில் நடந்தது. அந்தப் புத்தகத்தை வெளியிட்டு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது: உலகில், மிகப் பெரிய ஜனநாயக நாடாக, இந்தியா மதிக்கப்படுகிறது. நவீன இந்தியாவை உருவாக்கிய சிற்பி, நம் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு தான். இந்திய கலாசாரம், பாரம்பரியம் ஆகிவற்றின் மீது, பெரும் மதிப்பு கொண்டிருந்த நேரு, அவற்றை அடித்தளமாக வைத்து, நவீன இந்தியாவை உருவாக்கினார்.


latest tamil news
பல பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள், கலாசார நிறுவனங்களை துவக்கினார். நேரு இல்லாவிட்டால், இன்று உள்ள நிலையை, இந்தியா எட்டியிருக்க முடியாது. ஆனால், துரதிருஷ்டவசமாக, ஒரு பிரிவினர், நேருவை தவறாக சித்தரிக்க முயற்சிக்கின்றனர். நாடு சந்திக்கும் பிரச்னைகளுக்கு, நேருவை குற்றம் சாட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால், பொய் தகவல்களை, வரலாறு ஏற்காது என்ற நம்பிக்கை, எனக்கு உள்ளது.

இந்தியாவில் பயங்கரவாத சிந்தனையை வளர்க்க, தேசியவாதமும், பாரத் மாதா கி ஜெய் கோஷமும், தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், இந்த புத்தகம் வெளியாகியுள்ளது வரவேற்கத் தக்கது. இவ்வாறு, மன்மோகன் சிங் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (126)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkataraghavan - Chennai,இந்தியா
23-பிப்-202021:22:04 IST Report Abuse
venkataraghavan The leaders of congress that ruled for 70 years at center and the regional parties that ruled at the states did not do even a bit to educate nationalism/patriorism on young minds because school history teaches about Mohammed Gajini, kilji & other mughal emperors & lords of british colony. It does not teach Kattabomman, Prithviraj, Shivaji & other patriots. BJP tries to imbibe the culture of patriotism among young minds for the country to remain together unlike congress which joined hands with separatists group. Our fate that we had MMS as our PM for 10 years.
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
23-பிப்-202020:35:21 IST Report Abuse
Lion Drsekar இவர்களது குடும்ப தேவதைகள் மற்றும் சமோசா போன்றவைகளை மட்டுமே பாராட்டவேண்டும் , நாட்டைப்பற்றி பேசவே கூடாது, அது அண்டைநாட்டினர் என்ன சொல்கிறார்களோ அதை மட்டுமே கேட்கவேண்டும், இதுதான் இவர்களது கொள்கை, வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
K.Muthuraj - Sivakasi,இந்தியா
23-பிப்-202020:32:25 IST Report Abuse
K.Muthuraj இவர் நாட்டிற்கு செய்ய துரோகங்களுள் முதன்மையானது இந்திய இளைஞர்கள் மற்றும் தொழில் முனைவர்கள் தயாராகாத நிலையில் டங்கல் திட்டத்திற்கு அடிமை ஆக்கினார். அதனால் இந்தியா டெக்னாலஜியில் அடிமை நாடாக மாறிவிட்டது. மேலும் இரட்டை குடியுரிமை அறிமுகப்படுத்தியது இதனால் இந்தியாவிற்குள் நிறைய பணம் வரும் என்பது போல் மாயை உருவாக்கினார். அனால் இந்திய பணம் வெளியேறியது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X