அரசியல் செய்தி

தமிழ்நாடு

மக்களிடம் மன்னிப்பு கேளுங்கள்: ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்.,க்கு ஸ்டாலின் வேண்டுகோள்

Updated : பிப் 23, 2020 | Added : பிப் 23, 2020 | கருத்துகள் (44)
Share
Advertisement
stalin, ops, eps, Sorry, ஸ்டாலின், மன்னிப்பு, வேண்டுகோள், பழனிசாமி, முதல்வர்

சென்னை:'குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து, மாபெரும் தவறு செய்து விட்டோம் என்று, நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டு, கூட்டறிக்கை வெளியிடுங்கள்' என, முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், கோரிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை:குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து ஓட்டளித்து, நாட்டை கிளர்ச்சி களமாக்கியுள்ள, முதல்வர் இ.பி.எஸ்., 'சமூக நல்லிணக்கம் காப்பாற்றப்பட வேண்டும்; சிறுபான்மையினருக்கு எதிரான, எந்த செயலையும், அ.தி.மு.க., அரசு செய்யாது' என, ஓ.பி.எஸ்.,சுடன் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளார். இது, குதிரை கீழே தள்ளியது மட்டுமின்றி, குழியும் பறித்த கதையாக உள்ளது.

'பொய் பிரசாரங்களை துாண்டிவிட்டு, முஸ்லிம் மக்கள் இடையே, குழப்பம் ஏற்படுத்த, தி.மு.க., முயற்சிக்கிறது' என, கடைந்தெடுத்த பிரசாரத்தை, முதல்வர் துவக்கியிருப்பது கண்டிக்கத் தக்கது.தேசிய மக்கள்தொகை பதிவேடு எனப்படும், என்.பி.ஆர்., விவகாரத்தில், முதல்வருக்கும், அமைச்சர் உதயகுமாருக்கும் கருத்தொற்றுமை இல்லை. நாடு எதிர்கொண்டுள்ள பிரச்னையில், விளையாட்டுத்தனமாக அறிக்கை வெளியிடுகின்றனர்.

மத்திய அரசிடம் விளக்கம் கேட்டிருப்பது, உண்மை என்றால், அந்தக் கடிதத்தை வெளியிட வேண்டியது தானே! குடியுரிமை திருத்த சட்டத்தை, திரும்பப் பெற வேண்டும்; தேசிய மக்கள்தொகை பதிவேட்டை அனுமதிக்கக் கடாது என்ற, கோரிக்கையை ஏற்க மறுத்து, இப்போது, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறோம் என்பது, யாரை ஏமாற்றுவதற்கான நாடக ஒத்திகை?

சிறுபான்மையினர் நலனில், அக்கறை இருப்பதுபோல, பா.ஜ., போர்வையை போர்த்தி, நீலிக் கண்ணீர் வடிப்பதை, எந்த சிறுபான்மையின மக்களும் ஏற்க மாட்டார்கள். அந்த சட்டத்தை ஆதரித்தவர்களை, மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள்.சட்டத்தை ஆதரித்த துரோகத்திற்கு, பிராயசித்தம் தேட, 'தேசிய மக்கள்தொகை பதிவேட்டை, தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம்' என்று, உடனடியாக அறிவியுங்கள்.

அமைச்சரவையை கூட்டி, 'குடியுரிமை திருத்த சட்டத்தை, திரும்பப் பெற வேண்டும்' என்று, தீர்மானம் நிறைவேற்றுங்கள்.இல்லையென்றால், 'குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து, மாபெரும் தவறு செய்து விட்டோம்' என, நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டு, கூட்டறிக்கை வெளியிடுங்கள்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராமதாசன் - chennai,இந்தியா
24-பிப்-202007:40:32 IST Report Abuse
ராமதாசன் எதுக்குங்க - உங்களை தினம் வெளி நடப்பு செய்ய அனுமதித்திற்காகவா
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
24-பிப்-202005:45:15 IST Report Abuse
skv srinivasankrishnaveni முகவின் மகனே ப்ளீஸ் ஸ்டாப் யுவர் நான்சென்ஸ் பேச்சுக்கள் புரிஞ்சுண்டுதானே பேசுறீங்க ஐயா கள்ளமா வந்துகுடியேறி இங்கே நம்மளை படுத்தும் so CALLED அகதிகள் தான் என்று எவ்ளோக்ளியரா மதில் எல்லோரும் சொல்றாங்க இங்கேயே முகலாயர்களால் மதம் மாற்றப்பட்டு இந்தியாலே பிறந்து வளந்த எந்த முஸ்லீம்களையும் அரசு ஒன்னும் சொல்லலீங்க அவாளுக்கு எல்லாம் ஆதார் கார்டு ஐடி கார்டு எல்லாம் இருக்கே கூலிக்குறைவா கொடுக்கலாம் என்று பல பணக்கார முதலைகளேதான் இந்தமாதிரி அநாதரைஸ்ட் வந்தேறிகளை (அகதிகளை) பங்களா தேஷ் பாகிஸ்தான் அபிகானிஸ்தான் பர்மா ஸ்ரீலங்கா லெந்து அந்த நாட்டு அரசாள வெரைட்டி அடிக்கப்படும் ஏழைகள் பலரும் தான் பாதிக்கப்பட்டுருக்காங்க இருக்குற இடம் சொத்துக்கு திண்டாடடம் என்று இருக்கும் சிறு சொத்துக்களையும் இளந் நம்ம நாட்டிலே வந்து அடைக்கலமா பி=நுழைந்து ஒரு ஆதார் இல்லாம நம்மளை ஏமாத்தும் மக்களையேதான் CAA சட்டம் தாக்கும் என்பதைஎவ்ளோதெளிவாக சொன்னாலும் ...க்கு மூணுகால் என்று அப்பாவிகளை தூண்டிவிட்டு க்ளாடிட செய்யும் உங்களையெல்லாம்தான் சிறையிலே தள்ளனும் உன் ஒரே குறி சி எம்குர்சித்தான் ஆளும் திறமை ஜீரோ பேசும் திறமை பெரிய ஜீரோ கம்னுஇருங்க போறதுக்கு உனக்கும்=பதேசம் விளங்கிடும்
Rate this:
Cancel
Aarkay - Pondy,இந்தியா
24-பிப்-202000:42:44 IST Report Abuse
Aarkay அவர்கள் என்ன ஒட்டகங்கள் தயவில் திருடர் முன்னேற்றக்கழகத்தவரைப்போல் ஹவாலா முதலீடுகளா செய்துள்ளனர் அந்நிய நாட்டு தீவிரவாதிக்கு வெட்கமின்றி காவடி தூக்க?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X