'அரச பரம்பரை' அடைமொழி முழுமையாக கைவிடுகிறார் ஹாரி

Updated : பிப் 23, 2020 | Added : பிப் 23, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
'அரச பரம்பரை' # அடைமொழி  முழுமை,  ஹாரி

லண்டன் : 'இளவரசர் ஹாரி-மேகன் தம்பதியர், தங்கள் வர்த்தகம் உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளிலும், 'அரச பரம்பரை' என்ற அடைமொழியை, இனி, பயன்படுத்த மாட்டார்கள்' என, அவர்களின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் மகன், சார்லஸ் - மறைந்த- டயானா தம்பதிக்கு, வில்லியம்ஸ், ஹாரி என, இரண்டு மகன்கள் உள்ளனர்.


latest tamil news


இதில் ஹாரி, அமெரிக்க முன்னாள் நடிகையான மேகன் மார்க்கல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில், ஹாரி-மேகன் தம்பதி, அரச குடும்ப வாழ்க்கையில் இருந்து வெளியேறி, சாமான்ய மக்களைப் போல, சுயமாக வாழ விரும்புவதாக அறிவித்தனர். அதற்கு, ராணி இரண்டாம் எலிசபெத்தும் அனுமதி வழங்கினார்.
இந்நிலையில், ஹாரி-மேகன் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது:
மார்ச் இறுதியுடன், ஹாரி-மேகன் தம்பதியரின், அரச குடும்ப வாழ்க்கை, முறைப்படி, முடிவடைகிறது. அவர்கள், ஏப்.,1 முதல், ராணியின் சார்பில் எந்தவொரு அரச குடும்ப பொறுப்பையோ, பணிகளையோ மேற்கொள்ள மாட்டார்கள். அத்துடன், 'அரச பரம்பரை' என்ற அடைமொழியையும் பயன்படுத்த மாட்டார்கள். அவர்கள் துவங்க உள்ள, தொண்டு நிறுவனத்திற்கும் இது பொருந்தும்.இவ்வாறு, அவர் கூறினார்.

இதையடுத்து, ஹாரி-மேகன் தம்பதியின், 'இன்ஸ்டகிராம்', புதிய வலைதளம் மற்றும் பல்வேறு வர்த்தகங்களில் பயன்படுத்தும் அரச பரம்பரையை குறிக்கும் அடைமொழி விரைவில் நீக்கப்படும் என, தெரிகிறது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sriram - chennai,இந்தியா
23-பிப்-202018:15:45 IST Report Abuse
Sriram பாகுபலி
Rate this:
Cancel
dandy - vienna,ஆஸ்திரியா
23-பிப்-202016:28:53 IST Report Abuse
dandy இது மாதிரி நிகழ்வுகள் முன்னாள் நேபாள ..தாய்லாந்து அரச குடும்பங்களில் நடந்து உள்ளது ..
Rate this:
Cancel
Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா
23-பிப்-202015:55:22 IST Report Abuse
Subramanian Arunachalam இங்கிலாந்து அரச குடும்பத்தை பிடித்த சனி கிரகத்தின் தாக்கம் முழுமையாக விலகியது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X