பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை ; பாக்.,கிற்கு அமெரிக்கா கண்டிப்பு

Updated : பிப் 23, 2020 | Added : பிப் 23, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
வாஷிங்டன் : 'இருதரப்பு பிரச்னை பற்றி இந்தியாவுடன் பேச, முதலில், பாகிஸ்தான், பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அமெரிக்கா தெரிவித்துள்ளது.ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை, மத்திய அரசு ரத்து செய்ததில் இருந்தே, இந்தியா - பாகிஸ்தான் உறவு மிகவும் சீர்கெட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீர் சிறப்புஅந்தஸ்து ரத்து குறித்து, ஐ.நா., சபை மற்றும்

வாஷிங்டன் : 'இருதரப்பு பிரச்னை பற்றி இந்தியாவுடன் பேச, முதலில், பாகிஸ்தான், பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அமெரிக்கா தெரிவித்துள்ளது.latest tamil newsஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை, மத்திய அரசு ரத்து செய்ததில் இருந்தே, இந்தியா - பாகிஸ்தான் உறவு மிகவும் சீர்கெட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீர் சிறப்புஅந்தஸ்து ரத்து குறித்து, ஐ.நா., சபை மற்றும் பல நாடுகளிடம், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் புலம்பினார். ஆனால், அது, இந்தியாவின் உள்விவகாரம் எனக்கூறி, பல நாடுகள் ஒதுங்கி கொண்டன. 'காஷ்மீர் பிரச்னையில், இந்தியா - பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய தயார்' என, அமெரிக்க அதிபர் டிரம்ப், இருமுறை தெரிவித்தார்.

'இந்தியா, இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், 'இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பிரச்னையில், மூன்றாவது நாடு தலை யிட தேவையில்லை' என, உறுதியாக தெரிவித்தது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், இரண்டு நாள் பயணமாக, இந்தியாவுக்கு நாளை வருகிறார். 'காஷ்மீர் பிரச்னையில் மத்தியஸ்தம் செய்வது பற்றி, இந்தியாவிடம் டிரம்ப் பேசுவார்' என, பாகிஸ்தான், தன் நப்பாசையை வெளிப்படுத்தியது.


latest tamil newsஇது குறித்து, அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில், வெள்ளை மாளிகையை சேர்ந்த உயர்அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்திய - பாகிஸ்தான் எல்லையில், அமைதி நிலவ வேண்டும் என்பது தான் அதிபர் டிரம்பின் விருப்பம். பிரச்னை களுக்கு தீர்வு காண, இரு நாடுகளும் பேச்சை துவக்க வேண்டும் என, விரும்புகிறார். எனினும், இந்தியாவுடன் பேச்சை துவக்க வேண்டும் என்றால், முதலில், பாகிஸ்தான், பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான், பேச்சு வெற்றி பெறும். இதை பாகிஸ்தான் புரிந்து கொண்டு செயல்படவேண்டும் என, அமெரிக்கா எதிர்பார்க்கிறது. இவ்வாறு, அவர் கூறினார்.


Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Charles - Burnaby,கனடா
24-பிப்-202001:39:38 IST Report Abuse
Charles நீ என்ன பழைய மஹாராஜாவா கண்ணா? நம் மக்களுக்கு எதிராக செயல் படுகிறாய் ? இரானிலோ அல்லது பாகிஸ்தானிலோ வேலையா??
Rate this:
Cancel
Milirvan - AKL,நியூ சிலாந்து
23-பிப்-202003:33:48 IST Report Abuse
Milirvan பழைய கிழிச்செறியப்பட்ட சட்டப்படி கஷ்மீரி முஸ்லிமாவை பக்கி'பசங்களுக்கு நிக்கா வச்சிட்டா அவனுங்களும் கஷ்மீருக்குள்ள குடிமகனா ரைட்ராயல்லா வந்து பூந்துக்கலாம்.. ஆனா பாரதத்திலிருக்குற எவனும் எந்த கஷ்மீரி பெண்ணை கண்ணாலம் கட்டினாலும் அவனுக்கு கஷ்மீரி அந்தஸ்து நஹி.. பழைய்ய ஷரத்துப்படி ஒருமுறை பக்கி கஷ்மீரி'யாயிட்டான்னா அவன் அதுக்கப்புறம் இந்தியாவுல எங்கேயும் வரலாம், சொத்து வாங்கலாம்.. குண்டு வச்சி ஜிக்காத்தி பண்ணலாம்.. இப்போ அதுக்கும் ஆப்படிச்சிட்டாங்கோ.. குல்லாபாய்ஸ் மற்றும் இம்மு'பாய்க்கி இதெல்லாம்தான் மொளகா அரைச்சு அப்புனா மாதிரி இருக்குது.. இப்போ இருக்குற நெலவரப்படி மறுபடி ஒருதடவ பக்கி'பசங்க சண்ட'க்கின்னு வந்தான்னாக்கா கபரிஸ்'தானாயிடுவாங்கோ.. அதுக்காகவாவது குள்ளநரி முஷாரப்பு பக்கிகளுக்கு தலையாவணும்'னு ஆசை...
Rate this:
Cancel
Dr Kannan - Yaadum Voorae,யூ.எஸ்.ஏ
23-பிப்-202002:44:12 IST Report Abuse
Dr Kannan மகிழ்ச்சி அப்படியே ஹிந்துத்துவ தீவீரவாதிகளுக்கு எதிராக பிஜேபி அரசுக்கும் எச்சரிக்கை விட்டால் மிக மகிழ்ச்சி
Rate this:
Pannadai Pandian - wuxi,சீனா
23-பிப்-202007:45:01 IST Report Abuse
Pannadai Pandianநீ கண்ணனா இல்லா கபார் கானா ???...
Rate this:
Prabu.KTK - Coimbatore,இந்தியா
23-பிப்-202010:09:22 IST Report Abuse
Prabu.KTKகண்ணா, தேச துரோகி, ஹிந்து பேரை வெச்சுகிட்டு ஏமாத்தரையா எச்ச கலை ? நீ எல்லாம் எதுக்கு உயிரோட இருக்கே ? உன்னைய பெத்தத்துக்கு, உங்க குடும்பமே தூக்குல தொங்கணும். உன்னயெல்லாம் நாடு கடத்தணும். ஜெய் ஹிந்த்...
Rate this:
வல்வில் ஓரி - தயிர் வடை, நரசொலி,இந்தியா
23-பிப்-202010:53:45 IST Report Abuse
வல்வில் ஓரிஇதுல மருத்துவராம்?...
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
23-பிப்-202013:23:16 IST Report Abuse
madhavan rajanகண்ணன் அவர்கள் இந்து தீவிரவாதிகள் எந்த நாட்டில் சென்று குழப்பம் விளைவித்தார்கள் என்று கூறவில்லை. பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவிலும் மற்றும் பல நாடுகளிலும் தற்கொலைப் படை அனுப்பி பிரச்சினை செய்தது உலகமே அறியும்....
Rate this:
Nallavan Nallavan - நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் ,இந்தியா
23-பிப்-202013:24:01 IST Report Abuse
Nallavan Nallavanபாண்டியன் உங்களுக்குத் தெரிஞ்சு போச்சே இந்தப் பசங்க ஏமாத்து, பம்மாத்து எல்லாமே ........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X