அரசியல் செய்தி

தமிழ்நாடு

இம்ரான்கானின் கைப்பாவை ஸ்டாலின்: முரளிதர ராவ்

Updated : பிப் 23, 2020 | Added : பிப் 23, 2020 | கருத்துகள் (73)
Share
Advertisement

கிருஷ்ணகிரி : ''பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் கைப்பாவையாக, ஸ்டாலின் உள்ளார்,'' என, பா.ஜ., தேசிய பொதுச் செயலர் முரளிதர ராவ் பேசினார்.



latest tamil news



கிருஷ்ணகிரியில், பா.ஜ., சார்பில் நடந்த, மாற்று கட்சியினர் இணையும் விழாவில், அவர் பேசியதாவது:மத்திய அரசையும், பிரதமர் மோடியையும், ஸ்டாலின் குறை கூறிக்கொண்டே இருக்கிறார். ஸ்டாலின் அதிஷ்டம் இல்லாதவர். 1947ல், பாகிஸ்தானில், 24 சதவீத இருந்த ஹிந்துக்கள், தற்போது, 1 சதவீதமே உள்ளனர்.இந்தியாவில், மசூதிகளின் எண்ணிக்கையை நினைத்து பார்க்க வேண்டும்.


latest tamil news




தேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவால், முஸ்லிம்களுக்கு பாதிப்பு இல்லை. இருப்பதாக, ஸ்டாலின் நிரூபித்தால், அரசியலை விட்டு விலக தயார். பா.ஜ., இருக்கும் வரை, ஸ்டாலின் முதல்வராக முடியாது.முஸ்லிம்கள் ஆபத்தில் இருப்பதாக, ஸ்டாலின் பொய் கூறுகிறார். பா.ஜ.,வின் கைப்பாவையாக, அ.தி.மு.க., உள்ளதாக, ஸ்டாலின் கூறுகிறார். ஆனால், அவர் தான், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு கைப்பாவையாக உள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.சந்தன வீரப்பன் மகள்பா.ஜ.,வில் ஐக்கியம்கிருஷ்ணகிரியில், மாற்று கட்சியினர், பா.ஜ.,வில் இணையும் விழா, நேற்று நடந்தது.

பா.ஜ., தேசிய பொதுச் செயலர் முரளிதரராவ், முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில், சந்தன கடத்தல் வீரப்பனின் மூத்த மகள் வித்யா ராணி, பா.ஜ.,வில் இணைந்தார்.வித்யா ராணி பேசுகையில், ''மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது தான், என் தந்தையின் எண்ணம். அவர் தவறான வழியை தேர்வு செய்தாலும், மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே அவரது எண்ணமாக இருந்தது. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கில், பா.ஜ.,வில் இணைந்துள்ளேன்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (73)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JIVAN - Cuddalore District,இந்தியா
25-பிப்-202011:39:27 IST Report Abuse
JIVAN ஐயோ மூளைக்கெட்ட கூட்டம் வேற சிந்தனையே கிடையாதா நாட்டுல எவ்வளவோ பிரச்ச இருக்கு உங்களுக்கு பாகிஸ்தானை விட்ட ஒண்ணுமே தெரியாதா
Rate this:
Cancel
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
24-பிப்-202001:02:37 IST Report Abuse
Ramesh R நீ ராவணனின் கைப்பாவை
Rate this:
Cancel
SaiBaba - Chennai,இந்தியா
23-பிப்-202022:53:18 IST Report Abuse
SaiBaba கருணாநிதியின் தந்தை ஒரு இஸ்லாமியர் என்று அக்காலத்தவர் சொல்லிக்கேள்வி.
Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
24-பிப்-202011:50:36 IST Report Abuse
Malick Rajaஉனது தந்தையும் ஒரு இஸ்லாமியனாகவே இருந்திருக்கமுடியும் .. உண்மையால் சொல்லவும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X