பொது செய்தி

இந்தியா

முஸ்லிம் தத்தெடுத்த பெண்ணுக்கு ஹிந்து முறைப்படி திருமணம்: குவியும் பாராட்டு

Updated : பிப் 23, 2020 | Added : பிப் 23, 2020 | கருத்துகள் (30)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

காசர்கோடு: கேரளாவில் காசர்கோடு அருகே, வளர்ப்பு மகள் திருமணத்தை கோவிலில் நடத்தி வைத்து, முஸ்லிம் பெற்றோர் கண்ணீருடன் வாழ்த்தியது, பலராலும் பாராட்டப்படுகிறது.latest tamil newsகேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், காசர்கோடைச் சேர்ந்தவர் அப்துல்லா. இவரது மனைவி கதீஜா. இந்த தம்பதிக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.


வளர்ப்பு மகள்இந்நிலையில், அப்துல்லா தம்பதி, தங்கள் வளர்ப்பு மகள் ராஜேஸ்வரி, 22, திருமணத்தை, 16ம் தேதி, மன்மோட்டு பகவதி அம்மன் கோவிலில், ஹிந்து முறைப்படி சிறப்பாக நடத்தியுள்ளனர். ராஜேஸ்வரியின் தந்தை சரவணன், தஞ்சாவூரைச் சேர்ந்தவர். இவர், காசர்கோடு பகுதியில் கூலி வேலை பார்த்துள்ளார். அப்துல்லாவின் பண்ணையில் வேலை பார்த்த அவர், இறந்து போகவே, அவருடைய, 8 வயது மகள் ராஜேஸ்வரியை, அப்துல்லா தம்பதி, தங்கள் வளர்ப்பு மகளாக ஏற்றுக் கொண்டனர்.


latest tamil newsராஜேஸ்வரிக்கு, 22 வயதான நிலையில், அவருக்கு திருமணம் முடிவு செய்தபோது, மணமகன் விஷ்ணுபிரசாதின் பெற்றோர், திருமணத்தை இந்து முறைப்படி கோவிலில் நடத்த விரும்பினர். அதற்கு, அப்துல்லா தம்பதி சம்மதித்தனர்.அனைத்து மதத்தினரும் வந்து செல்ல அனுமதி உள்ள மன்மோட்டு கோவிலை அவர்கள் தேர்வு செய்தனர். திருமணத்திற்கு அப்துல்லாவின் தாய் சரயும்மா, 84, உள்ளிட்ட உறவினர்கள் அனைவரும் வந்திருந்து, மணமக்களை வாழ்த்தினர்.


latest tamil news
பாராட்டு


இது குறித்து, அப்துல்லா கூறும்போது, ''பெற்றோர் இறந்த பின், ராஜேஸ்வரி எங்கள் வளர்ப்பு மகளாக இருந்தாலும், ஹிந்துவாகவே வளர்ந்தார் என்பதால், திருமணமும் ஹிந்து முறைப்படியே நடந்துஉள்ளது,'' என்றார்.திருமணம் முடிந்த நிலையில், அப்துல்லா தம்பதி கண்ணீர் மல்க, மணமக்களை ஆசிர்வாதம் செய்யும், 'வீடியோ' சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதுடன், பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
adalarasan - chennai,இந்தியா
23-பிப்-202022:26:27 IST Report Abuse
adalarasan பாராட்ட வேண்டிய விஷயம்தான்
Rate this:
Share this comment
Cancel
sam - Bangalore,இந்தியா
23-பிப்-202022:11:15 IST Report Abuse
sam Mr. சுடலை where are you , where are you... Your input is really wanted. Will your Tamil Muslim like this... tell me your though..
Rate this:
Share this comment
Cancel
SENTHIL - tirumalai,இந்தியா
23-பிப்-202019:25:27 IST Report Abuse
SENTHIL இந்த "ஒரு" விஷயம் முக்கியத்துவம் பெறுகிறது என்றால், அவர்கள் மேல் என்ன ஒரு பார்வை அவர்கள் ஏற்படுத்தி வைத்து இருக்கிறார்கள் என்பது தெரிகிறது... ஆனால் (பெரும்பான்மை) நம் மக்கள் இவ்வளவு காலம் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டு வந்திருக்கிறோம், இனிமேலும் அவ்வாறே இருப்போம் என்பது மட்டும் அவர்களுக்கு (அவர்களில் வெகு பலருக்கு) புரியவே மாட்டேன் என்கிற போது வரும் ஆற்றாமை, நம் மனதில் மாற்றத்தை நோக்கி கொண்டு செல்லும் என்பது திண்ணம். இனிமேலும் அடிவாங்க மற்றும் நம் சந்ததியினரை படு குழியில் தள்ளி விட்டு செல்வது நியாயம் இல்லை. அவரவர் மார்க்கம் அவரவருக்கு என்பது வேண்டும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X