முஸ்லிம் தத்தெடுத்த பெண்ணுக்கு ஹிந்து முறைப்படி திருமணம்: குவியும் பாராட்டு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

முஸ்லிம் தத்தெடுத்த பெண்ணுக்கு ஹிந்து முறைப்படி திருமணம்: குவியும் பாராட்டு

Updated : பிப் 23, 2020 | Added : பிப் 23, 2020 | கருத்துகள் (30)
Share

இந்த செய்தியை கேட்க

காசர்கோடு: கேரளாவில் காசர்கோடு அருகே, வளர்ப்பு மகள் திருமணத்தை கோவிலில் நடத்தி வைத்து, முஸ்லிம் பெற்றோர் கண்ணீருடன் வாழ்த்தியது, பலராலும் பாராட்டப்படுகிறது.latest tamil newsகேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், காசர்கோடைச் சேர்ந்தவர் அப்துல்லா. இவரது மனைவி கதீஜா. இந்த தம்பதிக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.


வளர்ப்பு மகள்இந்நிலையில், அப்துல்லா தம்பதி, தங்கள் வளர்ப்பு மகள் ராஜேஸ்வரி, 22, திருமணத்தை, 16ம் தேதி, மன்மோட்டு பகவதி அம்மன் கோவிலில், ஹிந்து முறைப்படி சிறப்பாக நடத்தியுள்ளனர். ராஜேஸ்வரியின் தந்தை சரவணன், தஞ்சாவூரைச் சேர்ந்தவர். இவர், காசர்கோடு பகுதியில் கூலி வேலை பார்த்துள்ளார். அப்துல்லாவின் பண்ணையில் வேலை பார்த்த அவர், இறந்து போகவே, அவருடைய, 8 வயது மகள் ராஜேஸ்வரியை, அப்துல்லா தம்பதி, தங்கள் வளர்ப்பு மகளாக ஏற்றுக் கொண்டனர்.


latest tamil newsராஜேஸ்வரிக்கு, 22 வயதான நிலையில், அவருக்கு திருமணம் முடிவு செய்தபோது, மணமகன் விஷ்ணுபிரசாதின் பெற்றோர், திருமணத்தை இந்து முறைப்படி கோவிலில் நடத்த விரும்பினர். அதற்கு, அப்துல்லா தம்பதி சம்மதித்தனர்.அனைத்து மதத்தினரும் வந்து செல்ல அனுமதி உள்ள மன்மோட்டு கோவிலை அவர்கள் தேர்வு செய்தனர். திருமணத்திற்கு அப்துல்லாவின் தாய் சரயும்மா, 84, உள்ளிட்ட உறவினர்கள் அனைவரும் வந்திருந்து, மணமக்களை வாழ்த்தினர்.


latest tamil news
பாராட்டு


இது குறித்து, அப்துல்லா கூறும்போது, ''பெற்றோர் இறந்த பின், ராஜேஸ்வரி எங்கள் வளர்ப்பு மகளாக இருந்தாலும், ஹிந்துவாகவே வளர்ந்தார் என்பதால், திருமணமும் ஹிந்து முறைப்படியே நடந்துஉள்ளது,'' என்றார்.திருமணம் முடிந்த நிலையில், அப்துல்லா தம்பதி கண்ணீர் மல்க, மணமக்களை ஆசிர்வாதம் செய்யும், 'வீடியோ' சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதுடன், பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X