உருவ கேலியால் கதறிய குவாடனுக்கு வழங்கப்பட்ட கவுரவம்

Updated : பிப் 23, 2020 | Added : பிப் 23, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
பிரிஸ்பேன் : போதிய வளர்ச்சி இல்லாததால், உடன் படிக்கும் மாணவர்களின் கேலிக்கு ஆளானதால், மனமுடைந்து, தன்னை கொன்றுவிடுமாறு தாயிடம் கெஞ்சிய சிறுவன் குவாடன் பெய்ல்சுக்கு, ஆஸ்திரேலியாவின் புகழ் பெற்ற உள்ளூர் 'ரக்பி சாம்பியன்ஷிப்' போட்டியை துவக்கி வைக்கும் கவுரம் அளிக்கப்பட்டது.ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரை சேர்ந்த 9 வயது சிறுவன் குவாடன் பெய்ல்ஸ். பிறப்பிலேயே
kuvatan, australia, boy,உருவகேலி, குவாடன், கதறல், ஆஸ்திரேலியா, சிறுவன், கவுரவம்

இந்த செய்தியை கேட்க

பிரிஸ்பேன் : போதிய வளர்ச்சி இல்லாததால், உடன் படிக்கும் மாணவர்களின் கேலிக்கு ஆளானதால், மனமுடைந்து, தன்னை கொன்றுவிடுமாறு தாயிடம் கெஞ்சிய சிறுவன் குவாடன் பெய்ல்சுக்கு, ஆஸ்திரேலியாவின் புகழ் பெற்ற உள்ளூர் 'ரக்பி சாம்பியன்ஷிப்' போட்டியை துவக்கி வைக்கும் கவுரம் அளிக்கப்பட்டது.

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரை சேர்ந்த 9 வயது சிறுவன் குவாடன் பெய்ல்ஸ். பிறப்பிலேயே மிகவும் அரிதான நோயினால் பாதிக்கப்பட்ட குவாடனின் கை கால்கள் போதிய வளர்ச்சி இன்றி குட்டையாகவும், தலை மட்டும் பெரிதாகவும் உள்ளது.இதனால், பள்ளியில் உடன் படிக்கும் மாணவர்களின் கேலிக்கு ஆளானான். இதை எதிர் கொள்ள முடியாமல், தினமும் தனது தாய் யராக்கா பெய்ல்சிடம் வந்து அழுதான்.ஒரு கட்டத்தில், கேலி கிண்டல்களை பொறுக்க முடியாமல், தன்னை கத்தியால் குத்தி கொன்றுவிடுமாறு, தாயிடம் கதறி அழுதான். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த யராக்கா, சிறுவனின் அழுகையை, தனது 'மொபைல் போனில்' படம்பிடித்து, அதை சமூகவலைதளங்களில் பதிவிட்டார்.


latest tamil news


அதில், 'இது போன்ற வளர்ச்சி குறைவான குழந்தைகளை உருவ கேலி செய்து, மனதை புண்படுத்தாதீர்கள்' என, வேண்டுகோள் விடுத்தார்.இந்த 'வீடியோ' சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது. சிறுவன் குவாடனுக்கு, உலகம் முழுவதும் ஆதரவு குவிந்தது. பல 'ஹாலிவுட்' சினிமா நட்சத்திரங்கள், குவாடனுக்கு ஆதரவாக குரல் எழுப்பினர்.குவாடனை போலவே, குள்ள உருவ அமைப்பு கொண்ட ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் பிராட் வில்லியம்ஸ், சிறுவனுக்கு ஆதரவாக, 'டுவிட்டர்' மூலம் நிதி திரட்டும் அறிவிப்பை வெளியிட்டார்.

இதன் மூலம், மூன்று கோடி ரூபாய் நிதி கிடைத்தது. சிறுவன் குவாடன் மற்றும் அவனது தாயாரை, அமெரிக்கா வரவழைத்து, நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்து, அவர்களை 'டிஸ்னி லேண்ட்' எனப்படும், பொழுது போக்கு பூங்காவை சுற்றிக் காட்டப் போவதாக, பிராட் வில்லியம்ஸ் அறிவித்துள்ளார்.


latest tamil newsஇந்நிலையில், ஆஸ்திரேலியாவின் புகழ் பெற்ற, உள்ளூர் 'ரக்பி சாம்பியன்ஷிப்' விளையாட்டு போட்டியை துவக்கி வைக்கும் கவுரவும், சிறுவன் குவாடனுக்கு அளிக்கப்பட்டது. மைதானத்திற்குள் சிறுவன் குவாடன் பந்துடன் நடந்து வருகையில், திரண்டிருந்த கூட்டத்தினர், கைதட்டி ஆரவாரம் செய்தனர். உருவ கேலி காரணமாக மனமுடைந்து போயிருந்த சிறுவனுக்கு, இந்த சம்பவம், பெரும் உற்சாகத்தை அளித்ததாக, அவனது தாயார் தெரிவித்தார். இதற்கிடையில், சிறுவன் குவாடனுக்கு வயது 18 என்றும், இவை அனைத்துமே, கவன ஈர்ப்புக்காக, அவனது தாயால் ஜோடிக்கப்பட்ட பொய் என்றும், சமூகவலைதளங்களில் ஒரு பிரசாரம் வலம் வருகிறது.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pathirikai - KAILASH,இந்தியா
24-பிப்-202004:05:33 IST Report Abuse
pathirikai மனிதர்களை மனிதர்கள் மனிதர்களாக மதிக்க,,,
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
23-பிப்-202023:25:58 IST Report Abuse
Vena Suna இது ஒரு நெஞ்சை நெகிழ வைக்கும் கதை..பாவம் குழந்தை.. பள்ளிக்கூட குழந்தைகள் கிண்டல் செய்வதில் கேவலமானவர்கள்...இது பலப் பேருக்கு தெரியாது... குழந்தைகள் கள்ளம் கபடமற்றவர்கள் என்பது ஏட்டளவில் தான் ..
Rate this:
Cancel
23-பிப்-202016:56:04 IST Report Abuse
Arunachalam, Chennai Broad பிராட் வில்லியம்ஸ் (பிராட் Fraud) ,இதை வைத்து கல்லா கட்டி விட்டார்.
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
23-பிப்-202020:16:12 IST Report Abuse
Sanny இதுவரை நீ என்ன பண்ணினாய், நல்லது செய்யும்போது பாராட்டுங்க, எரிச்சல், பொறாமை கூடாது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X