பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய கொடுஞ்சாலை... 19 பேர் பலிக்கு இதுவும் காரணமா?

Updated : பிப் 23, 2020 | Added : பிப் 23, 2020 | கருத்துகள் (55)
Share
Advertisement
அவினாசி, கேரளபஸ், கண்டெய்னர், மோதல், விபத்து, தேசியநெடுஞ்சாலை, காரணம்

இந்த செய்தியை கேட்க

''என்ட மோனே, இனி எந்து காணும்?'' மேத்யூவின் கதறல், அவிநாசி அரசு மருத்துவமனை பிணவறையில் நான்கு புறமும் எதிரொலித்தது. சூழ்ந்திருந்த உறவினர்கள், எவ்வளவோ சமாதானப்படுத்த முயன்றும், அவரை கட்டுப்படுத்த முடியவில்லை. ஒரு கட்டத்தில், அவரின் நெருங்கிய உறவினரான ஜோஸ் மேத்யூ அவரை கட்டிப்பிடித்து, அழுது சமாதானம் செய்தார். இந்த காட்சி பலரது கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது.

இந்த கொடூரத்தின் பின்னணியை நினைத்து பார்க்கவே முடியாது. ஒரேயொரு நொடியில், 19 பேரின் வாழ்க்கை கனவு தகர்ந்து போனது. முதல்நாள், இரவு, பெங்களூருவில், இரவு, 8:00 மணிக்கு புறப்பட்ட அந்த கேரள பஸ்சில், பயணித்த, 48 பேரும், இப்படியொரு விபரீதம் ஏற்படும் ஒரு நொடி கூட எண்ணியிருக்க மாட்டார்கள்!அடுத்த நாள் அதிகாலை, அவிநாசி அருகே பைபாஸ் ரோட்டில், லாரி ரூபத்தில் வந்த எமன், 19 பேரின் உயிரை பறித்து கொண்டான். டிரைவர் பைஜூவின் உடல், கன்டெய்னரில் சிக்கி சிதைந்திருக்க, அவருக்கு நேர் பின், இருக்கையில் அமர்ந்த ஐஸ்வர்யாவும், கோபிகாவும் மிகவும் கோரமாக உடல் சிதைந்து உயிரிழந்திருந்தனர்.


latest tamil news


யார், என்னதான் ஆறுதல் சொன்னாலும், நடந்த கோர விபத்து பல பாடங்களை உணர்த்தி உள்ளது. ஆனால், அவை பின்பற்றப்படுகின்றனவா? என்பது 'மில்லியன் டாலர்' கேள்வி. அதேநேரம், ஆறு வழிச்சாலை அமைப்பு பற்றி பலரும் குற்றம் சாட்டுகின்றனர். அதில், முக்கியமானது மையத்தடுப்பு. தமிழகம் தவிர பிற மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலையில் மையத்தடுப்பானது இரண்டு முதல் இரண்டரை அடி உயரத்துக்கு கட்டப்பட்டுள்ளது என்றும், தமிழகத்தில் மட்டும்தான், அரை அடிக்கு கட்டப்பட்டுள்ளது என்ற புகார்.

இதுபற்றி விசாரிக்க, கோவையிலுள்ள தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டு ஆணைய அதிகாரிகளை தொடர்பு கொண்டபோது, யாரும் பதிலளிக்க முன்வரவில்லை. கணியூர் 'டோல்கேட்'டில் தொடர்பு கொண்டபோது, விஜய் என்ற அலுவலர், 'மையத்தடுப்பு, 2 அடி உயரம் உள்ளது. வேறு விவரங்களுக்கு அதிகாரிகளை கேட்டு சொல்கிறேன்,' என்று கூறி இணைப்பை துண்டித்து விட்டார். கன்டெய்னர் லாரி டிரைவர், சேலம் நோக்கி (கிழக்கு திசை) செல்கையில் ஒரு நொடிகள் கண்ணயர்ந்ததால், கட்டுப்பாட்டை இழந்த லாரி, வலது புறம் திரும்பி மையத்தடுப்பில் ஏறி, எதிர்திசையில் செல்ல ஆரம்பித்தது.

அப்போது அதே வழியில் சென்ற கேரள அரசு பஸ் மீது லாரி மோதியுள்ளது. ஒருவேளை, மையத்தடுப்பின் சுவர், குறைந்தபட்சம் இரண்டடி இருந்திருந்தால் கூட இந்த விபத்து நடந்திருக்க வாய்ப்பில்லை என்ற கருத்தையும் மறுப்பதற்கில்லை. இன்னும்கூட கெட்டுப்போகவில்லை, மையத்தடுப்பின் உயரத்தை உயர்த்தினால் வருங்காலங்களில் பாதுகாப்பான பயணத்துக்கு வழி ஏற்படும்.அதேபோல், நீண்ட துாரம் வாகனம் இயக்கும் டிரைவர்களுக்கு உரிய ஓய்வு மிகமிக அவசியம். ஆயிரம் கி.மீ., சென்று விட்டு வந்த உடனேயே, அடுத்த ஓட்டத்துக்கு அதே டிரைவர் நிர்பந்தப்படுத்தப்படுகிறார்.

இதுபோன்ற நேரங்களில்தான், டிரைவரை குற்றம் சொல்லாமல், அந்த வாகனத்தின் உரிமையாளரையும் குற்றவாளியாக சேர்க்க வேண்டும். இது போன்ற கோர விபத்துகள் நிகழ்ந்தால், கொலைக்கு ஈடான சட்டப்பிரிவில் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான், இதுபோன்ற விபத்து குற்றங்கள் குறையும் என்ற கருத்தும் வலுப்பெற்று வருகிறது.

'அசதியினால் ஒரு நொடி கண்ணயர்ந்தேன். லாரி எனது கட்டுப்பாட்டை விட்டு போய்விட்டது,' என்ற ஒரு காரணத்தை ஹேமராஜ் (லாரி டிரைவர்), போலீசாரிடம் கூறியுள்ளார். அந்த ஒரு நொடிதான், 19 பேரின் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டது என்பதை, பல நுாறு 'ஹேமராஜ்'கள் உணர்ந்து, வாகனங்களை இயக்க வேண்டும். இந்த விழிப்புணர்வு மட்டுமே, விபத்தில்லா பயணத்தை உறுதி செய்ய வேண்டும்.

Advertisement
வாசகர் கருத்து (55)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.PERUMAL SWAMY - doha,கத்தார்
26-பிப்-202010:47:55 IST Report Abuse
R.PERUMAL SWAMY கனத்த இதயத்துடன் இந்த பதிவை வெளியிடுகிறேன். நமது இந்திய நாட்டின் சாலை போக்கு வரத்து விதிகளும் சரி ,போக்குவரத்து துறை லட்சணமும் சரி மிக தரம் தாழ்ந்து சென்று கொன்று இருக்கிறது . அணைத்து நெடுஞ்சாலைகளின் கனரக வாகனம் முதல் கட்டமாக இடது புறம் மட்டுமே செல்ல வேண்டும் என்று கண்டிப்பான உத்தரவு வெளியிட வேண்டும் . தேவை படும் பொது மட்டுமே வாகனங்கள் வலது புறம் செல்ல வேண்டும் என்ற கண்டிப்பான உத்தரவு வரும் வரை இது போன்ற பேரழிவுகளை தடுக்க முடியாது . மேலும் நெடுஞ்சாலைகளில் ஓடும் கனரக வாகனங்களில் பின்புறம் மற்றும் பக்கவாட்டில் லைட்டுகள் ஒளிர்வதே கிடையாது .மிக முக்கியமாக கனரக வாகனங்களில் பின் புறம் கனமான பம்பர் தரையில் இருந்து 50 cm உயரத்திற்கு கட்டமைக்க பட வேண்டும் .பெரும்பாலான கன ரக வாகனங்களில் பம்பர் என்பதே கிடையாது. இரவு நேரங்களில் சாலை ஓரங்களில் நிறுத்தம் படும் கன ரக வாகனங்களின் ஓட்டுனர்கள் விதியை பின் பற்றுவதே கிடையாது. நெடுஞ்சாலை பாதுகாப்பு போலீஸாரும் மேற்கண்ண்ட குறைகளை கண்கொண்டு கொள்வதே கிடையாது.
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
24-பிப்-202011:30:09 IST Report Abuse
Mani . V ".....இதுபோன்ற நேரங்களில்தான், டிரைவரை குற்றம் சொல்லாமல், அந்த வாகனத்தின் உரிமையாளரையும் குற்றவாளியாக சேர்க்க வேண்டும்...". - ஸாரி யுவர் ஹானர், பால்குடி மாறாத சிறுவர்களுக்கெல்லாம் பணத்தை பெற்றுக் கொண்டு லைசென்சு வழங்கும் வட்டார போக்குவரத்து அலுவலர்களே இந்த படுகொலைகளுக்கு காரணம். முதலில் இவர்களை தொங்க விட வேண்டும். பல கண்டைனர் லாரி டிரைவர்கள் எப்பொழுதுமே வலத்தடத்திலேயே மிக மெதுவாக ஓட்டிச் செல்கிறார்கள். அவர்களை இடத்தடத்தில் ஓவர்டேக் செய்யும் பொழுது, முன்னர் செல்லும் வாகனத்தை கவனிக்க முடியாமல் பல விபத்துக்கள் நடைபெறுகிறது. வசூலில் தீவிரம் காட்டும் போக்குவரத்து போலீஸ், இதையெல்லாம் கவனிக்க நேரமே இல்லை.
Rate this:
Share this comment
S.Ganesan - Hosur,இந்தியா
24-பிப்-202021:13:21 IST Report Abuse
S.Ganesanஉண்மை. லஞ்சம் கொடுத்து எல்லோரும் லைசென்ஸ் பெறுவதால் , சாலை விதிகளை பற்றிய அடிப்படை அறிவு இல்லை என்பது நிதர்சனம். அதிவேக வண்டிகள் செல்லும் வலது பாதையில் இதை போன்ற கனரக வாகனங்கள் செல்கின்றன. அதுவும் சில லாரிகள், டிப்பர் லாரிகள் கட்டுக்கடங்காத வேகத்துடன் செல்வதை பார்த்து பயமாக உள்ளது....
Rate this:
Share this comment
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
24-பிப்-202005:51:47 IST Report Abuse
D.Ambujavalli முதலில் அருமையான உறவுகளை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் நான் சென்னை பெங்களூரு சாலையில் மாலை 6 மணிக்கு மேல் செல்லும்போது, லாரி டிரைவர்கள் வண்டிகளை ஓரம்கட்டிவிட்டு சில பாயிண்டுகளில் சென்று ‘ஏற்றிக்கொண்டு’ வருவதைக் கண்டிருக்கிறேன். அத்தகையவர்களை எந்த நெடுஞ்சாலை போலீசும் கண்டுகொள்ளாது யமனின் பிரதிநிதிகள் இவர்கள் நெடுஞ்சாலை டாஸ்மாக்குகளை மூடிவிட்டு, நூறடியில் திறந்து வைக்கும் அரசுக்கும் இதில் பங்குண்டு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X