பொது செய்தி

இந்தியா

அறிவியலில் ஆர்வம் செலுத்தும் இளைஞர்கள்: மோடி

Updated : பிப் 23, 2020 | Added : பிப் 23, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
MannKiBaat, Modi, PmNarendramodi,  PmModi, youth, science, technology, பிரதமர்மோடி, மோடி, நரேந்திரமோடி, இளைஞர்கள், தொழில்நுட்பம்

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: நமது இளைஞர்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஆர்வம் செலுத்தி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்றும் 'மன் கி பாத்' நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்கள் இடையே பிரதமர் மோடி உரையாற்றுவார்.

இன்று(பிப்.,23) ஒளிபரப்பான அந்த நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி பேசியதாவது: நம் நாட்டில் உள்ள பல்லுயிர் தொகுப்பு ஆனது மனித இனத்திற்கான மதிப்புமிக்க சொத்து. அவற்றை நாம் பாதுகாப்பதுடன், ஆராய்ச்சியும் மேற்கொள்ள வேண்டும். அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்து நமது இளைஞர்கள் ஆர்வத்துடன் பேசி வருகின்றனர்.சந்திரயான்-2 விண்கலம் ஏவப்பட்ட நிகழ்ச்சியை பார்க்க இஸ்ரோ சென்ற போது, குழந்தைகளின் உற்சாகத்தை காண முடிந்தது. நமது இளைஞர்கள் மத்தியில், அறிவியல் ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் வகையில், புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ராக்கெட் ஏவப்படுவதை, ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து நீங்கள் நேரடியாக பார்க்கலாம். இதற்காக 10 ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.


புலம் பெயர்ந்த உயிரினங்கள்latest tamil newsகேரளாவின் கொல்லத்தில் வசித்து வரும் பகீரதி என்ற பெண், 10 வயதாகும் போது பள்ளிப்படிப்பை பாதியில் விட்டார். தற்போது 105 வயதில், தனது படிப்பை மீண்டும் துவங்கியதுடன், 4ம் நிலை தேர்வில் 75 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளார். அனைவருக்கும் முன்மாதிரியாக உள்ள அவருக்கு நான் எனது மரியாதையை செலுத்துகிறேன். புலம்பெயர்ந்த உயிரினங்களுக்கான நிலையான வாழ்விடங்களை அமைக்க இந்தியா முயற்சி செய்கிறது. இதற்காக மேகாலயாவில், தனித்துவமான இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏன் 32 ரக விமானம், லே மாவட்டத்தில் குஷோக் பகுலா ரிம்போக்கி விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய போதுவரலாறு படைக்கப்பட்டது. இந்த போர் விமானத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 10 சதவீத உயிரி எரிபொருள் பயன்படுத்தப்பட்டது.

பழைய அணுகுமுறைகளை இன்னும் பின்பற்ற நமது புதிய இந்தியா விரும்பவில்லை.புதிய இந்தியாவில் நமது சகோதரிகளும், தாய்மார்களும் முன்னேறி செல்வதுடன், சவால்களை தங்களது கைகளில் எடுத்து கொள்கின்றனர். இவ்வாறு மோடி பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
gurubala - mumbi,இந்தியா
23-பிப்-202020:00:43 IST Report Abuse
gurubala tharpozhudu oru muslim liggayt pita thipadi gadagil enna hindutvam ivar peesugirar
Rate this:
Share this comment
Cancel
MANITHAN -  ( Posted via: Dinamalar Android App )
23-பிப்-202015:46:35 IST Report Abuse
MANITHAN மோடி சார்! பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே பிளாஸ்ட்டிக் சர்ஜரியில் இந்திய விஞ்ஞானி தேர்ச்சி பெற்றிருந்தை நீங்கள் கூறியதையும் மேகத்தின் மேல் மறைந்து விமானம் பறந்து சென்றால் ரேடார்களுக்கு தெரியாமல் மறையலாம் என்ற உங்கள் விஞ்ஞான அறிவுக்கு முன் இது எல்லாம் சாதரணம்!
Rate this:
Share this comment
Cancel
GMM - KA,இந்தியா
23-பிப்-202015:18:57 IST Report Abuse
GMM அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தில் இந்திய இளைஞர் ஆர்வம் அதிகம். அன்று algebra is a cobra என்பர் பயத்தில். தாயின் வளர்ப்பில் குழந்தை. மத குரு மூலம் வாரம் ஒருமுறை ஒழுக்க கல்வி. 6 மாதம் ஒருமுறை உடலை சுத்தம் செய்யும் மருந்து. NCC யில் ஆண்டுக்கு ஒருமுறை பயிற்சி. பள்ளி கல்வியில் ஒரு மாணவர் ஒரு தொழில் பயிற்சி. கோடை விடுமுறை நாட்களில் பள்ளி ஆசிரியருக்கு கல்லூரி ஆசிரியர் மூலம் தற்போதைய கல்வி போதனை மற்றும் தேர்வு. கல்வி சான்றுபோல் தலைமை ஆசிரியர்/முதல்வர் வழங்கும் நன்நடத்தை சான்று அவசியம். அது இன்றி உள்நாட்டு தனியார் நிறுவனங்கள் எந்த வேலையும் தரக்கூடாது. கட்சிகள் JNU கலவர மாணவரை உருவாக்க முடியாது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X