பொது செய்தி

தமிழ்நாடு

கைலாஷ் 'ரெடி'- நித்தி 'வெடி'

Updated : பிப் 23, 2020 | Added : பிப் 23, 2020 | கருத்துகள் (49)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

சென்னை: தேடப்படும் குற்றவாளியான நித்தியானந்தா, கைலாசத்தை கட்டி அமைக்கும் பணிகள் முடிவடைந்ததாகவும், இனி தனக்கும் தமிழகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.



latest tamil news



பல்வேறு வழக்குகளில் சிக்கி இருக்கும் சர்ச்சைக்குரிய நித்தியானந்தாவிற்கு, கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு போலீசார் தேடி வருகின்றனர். ஆனால், யார் கையிலும் சிக்காத நித்தியானந்தா, யூடியூப்பில் மட்டும் வருகிறார். பக்தர்களுக்கு சொற்பொழிவு ஆற்றி வரும் அவர், தன் மீதான குற்றச்சாட்டுகளை கேலி செய்தும் வருகிறார். ஓரிரு மாதங்களுக்கு முன்னதாக 'கைலாசா' என்னும் நாட்டை உருவாக்கப்போவதாக அறிவித்து ஆச்சரியப்படுத்தினார். அதற்கு அடுத்தடுத்த வீடியோக்களில், கைலாசாவை அமைத்தே தீருவேன், இதுவரையில் கைலாசாவில் குடியுரிமை கேட்டு 40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என பேசினார்.


latest tamil news



இந்நிலையில், சமீபத்தில் நித்தியானந்தா வெளியிட்ட வீடியோவில் அவர் பேசியதாவது: தேவையில்லாமல் எதிரிகள், எதிர்ப்புகள் என நேரத்தை வீணடிப்பதை தவிர்க்க நான் என்னுடைய செயலை செய்து கொண்டிருக்கிறேன். நான் உருவாக்கி கொண்டிருக்கும் கைலாசா, உலகிற்கே பெரும் பங்களிப்பாக இருக்கும். கைலாசத்தை கட்டி அமைக்கும் பணிகள் முடிவடைந்து விட்டன. இனி, எனக்கும் தமிழகத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. என் வாழ்நாள் முழுவதும் தமிழில் பேசுவேனே தவிர வேறு எந்த சம்பந்தமும் இல்லை.


latest tamil news



நான் புலம் பெயர்ந்த தமிழன் என பெருமையாக சொல்வேன். அவர்கள் ஓடிப்போன நித்தி என சொல்வார்கள். தமிழக ஊடகத்தை பொறுத்தவரை நான் இறந்துவிட்ட மனிதனை போன்றவன். இனி நான் தமிழகத்திற்கு வரப்போவது இல்லை, உலகின் ஏதோ ஒரு மூலையில் இருக்க போகிறேன். நான் இறந்தபிறகு கர்நாடக ஆசிரமத்தில் உள்ள தியான பீடத்தில் தான் என் உடல் அடக்கம் செய்ய வேண்டும் என எழுதி வைத்துவிட்டேன். சொத்து முழுவதும், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், மதுரை ஊர்களில் உள்ள குரு பரம்பரைக்கு எழுதி வைத்து விட்டேன். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S Ramkumar - Tiruvarur,இந்தியா
26-பிப்-202012:11:53 IST Report Abuse
S Ramkumar இவனை எல்லாம் இன்னமும் நம்பிகிட்டு இருக்குறவங்களை என்னவென்று சொல்ல. இந்துவாக இருந்தாலும், தமிழனாக இருந்தாலும் நித்தி ம்ம்ம்ம். ஒரு வணங்க படவேண்டிய ஒருவராக சொன்னால் அவர் வடிகட்டிய முட்டாளாகத்தான் இருக்க முடியும்.
Rate this:
Share this comment
Cancel
venkatesaperumal - sivakasi,இந்தியா
24-பிப்-202012:24:38 IST Report Abuse
venkatesaperumal இந்துக்களுக்கு என ஒரு நாடு அமைத்த தமிழ் சந்நிதான குருவுக்கு வாழ்த்துகள்,
Rate this:
Share this comment
Cancel
SASI - திருபுர்,இந்தியா
24-பிப்-202011:57:07 IST Report Abuse
SASI கைலாஷ் ரெடியோ இல்லியோ, நம்ம ஊருல சட்டமும் நீதியும் சரியில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X