பொது செய்தி

இந்தியா

கர்ப்பிணிகளுக்கு புதிய பாடத்திட்டம்: உ.பி.,யில் அறிமுகம்

Updated : பிப் 23, 2020 | Added : பிப் 23, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
UP, LucknowUniversity, GarbhaSanskar, Course, உத்தரபிரதேசம், லக்னோ, பல்கலைகழகம், பல்கலை, கர்ப்பிணி, பாடத்திட்டம், அறிமுகம்

இந்த செய்தியை கேட்க

லக்னோ: நாட்டிலேயே முதன்முறையாக கர்ப்ப காலத்தில் உள்ள பெண்களுக்கு என பிரத்யேக பாடத்திட்டத்தை லக்னோ பல்கலை அறிமுகப்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தில் உள்ள லக்னோ பல்கலையில், 'கர்ப் சன்ஸ்கர்' என்ற புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கர்ப்பிணி பெண்களுக்கு உதவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பாடத்திட்டத்தின் கீழ், கர்ப்ப காலத்தில் என்ன உடை அணியவேண்டும், என்ன சாப்பிடுவது, எப்படி நடந்து கொள்வது, என்ன மாதிரியான இசை நல்லது உள்ளிட்ட தாய்மை பற்றிய பாடங்கள் கற்பிக்கப்படும். மேலும், இந்த பாடத்தினை ஆண் மாணவர்களும் தேர்வு செய்து படிக்கலாம் என பல்கலை அறிவித்துள்ளது.


latest tamil news



இது குறித்து பல்கலை செய்தி தொடர்பாளர், துர்கேஷ் ஸ்ரீவாஸ்தவா கூறியதாவது: மாநில கவர்னரான ஆனந்திபென் படேல், தாய்மார்களாகும் பெண்களுக்கு பயிற்சி அளிப்பது தொடர்பாக நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டதால், பாடத்திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் 16 மதிப்புகள் குறித்து மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news



பல்கலை.,யின் இந்த நடவடிக்கையை மாணவர்கள் மற்றும் மகப்பேறு மருத்துவர்கள் வரவேற்றுள்ளனர். பல்கலை.,யை சேர்ந்த ஆண் மாணவர் கூறுகையில், பாடத்திட்டம் அருமையாக உள்ளது, வரவேற்கிறோம். இது ஒரு முக்கியமான பிரச்சினை. மாணவர்களுக்கும் தாய்மை பற்றி பயிற்சி அளிக்கப்படுமானால், அது ஒரு தம்பதியினருக்கு ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க உதவும். நம் நாட்டின் ஆரோக்கியமான எதிர்காலம் தான் இது, என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
23-பிப்-202019:54:26 IST Report Abuse
A.George Alphonse இந்த பாடத்திட்டதால் பெண்களுக்கு ஒரு பயனும் இல்லை.UP மாநிலத்தில் பெரும்பாலான பெண்கள்கிராமத்தில் வசிப்பவர்கள்.அவர்கள் வந்து இங்கு படிக்கவா போகிறார்கள்.waste and useless பாடத்திட்டம்.பயனற்றது.
Rate this:
Share this comment
Cancel
Vetri - Chennai,இந்தியா
23-பிப்-202019:36:21 IST Report Abuse
Vetri Ivaru kumbudura samy ivara kapathatha?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X