டில்லி போராட்டத்தில் வன்முறை: கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு

Updated : பிப் 23, 2020 | Added : பிப் 23, 2020 | கருத்துகள் (57)
Share
Advertisement
Delhi, AntiCAA, Protest, StonePelting, டில்லி, சிஏஏ, குடியுரிமைசட்டம், போராட்டம், வன்முறை, கல்வீச்சு, போலீஸ், கண்ணீர் புகை

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் லேசான வன்முறை வெடித்தது. சட்டத்தை எதிர்ப்போர் மற்றும் ஆதரிப்பவர்கள் என இரு பிரிவினராக மோதிக்கொண்டனர். போலீசார் மீதும் கல்வீசப்பட்டது. தொடர்ந்து போலீசார் லேசான தடியடியும், கண்ணீர் புகையும் வீசி கூட்டத்தினரை கலைத்தனர்.

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி டில்லியின் ஷாஹீன் பாக் பகுதியில் கடந்த 70 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், ஜாப்ராபாத் மெட்ரோ ரயில்நிலையம் அருகில் நேற்று (பிப்.,22) இரவு முதல் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல், சந்த்பாக், மவுஜ்பூர் பகுதியிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அந்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன், துணை ராணுவப்படையினரும் குவிக்கப்பட்டனர்.


latest tamil news



இந்நிலையில், மவுஜ்பூர் பகுதியில் நடந்த போராட்டத்தின் போது இரண்டு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, போலீசார் மீதும் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். தாக்குதல் நடத்தியவர்களை கண்ணீர் புகை குண்டுகளை வீசி கட்டுபடுத்த போலீசார் முயற்சித்தனர். இதனால், போராட்டம் வன்முறையாக மாறியது . மோதலை தொடர்ந்து பாதுகாப்பு கருதி, மவுஜ்பூர்- பாபர்பூர் இடையேயான மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன. நாளை அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவிற்கு வருகை தரும்நிலையில், தலைநகர் டில்லியில் வன்முறை வெடித்ததால், இதனை கட்டுப்படுத்த போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (57)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridhar - Jakarta,இந்தோனேசியா
24-பிப்-202012:08:49 IST Report Abuse
Sridhar என்னைக்கு இருந்தாலும் ஒரு நாள், இவர்களை எதிர்கொள்ளத்தானே வேண்டும்? இதில் காலம்தாழ்த்துதல் எதற்கு? இந்தியா புதிய பாதையில் செல்லவேண்டும். வெள்ளையன் வெளியேறியபோது இருந்த தலைவர்கள் இந்த தேசத்தையும் அதன் மக்களையும் நன்றாகவே ஏமாற்றிவிட்டனர். அந்த தவற்றை திருத்தும் நேரம் வந்துவிட்டது. சிலசமயம் ஒருசில நல்ல விஷயங்களை நடைமுறை படுத்துவது சிரமமாக இருக்கலாம். அதற்காக அவற்றை தள்ளிப்போடவோ அல்லது விளைவுகளை நினைத்து அஞ்சியோ காலம் தாழ்த்தினால், நாடு மிக அறிய வாய்ப்பினை இழந்துவிடும். அரசு JUST DO IT பாலிசியை கடைபிடிக்க வேண்டும். எல்லா தீவிரவாதிகளும் வலிமைக்குத்தான் பயப்படுவார்கள். சகிப்புத்தன்மை மற்றும் பொறுமை போன்ற நல்ல பண்புகள் இயலாமை என்று எடுத்துக் கொள்ளப்பட்டு ஏளனத்துக்குத்தான் உள்ளாகும். இந்தவிதத்தில், சீனாவை பாராட்டி பின்பற்றலாம்
Rate this:
Share this comment
Cancel
C.Elumalai - Chennai,இந்தியா
24-பிப்-202009:06:17 IST Report Abuse
C.Elumalai சாலைமறியல்,யார் செய்தாலும்,எந்த, கட்சி மதம் சம்பந்தமாகவே, ஆதரித்தோ, எதிர்த்தோ சாலைமறியலில் ஈடுபடுவர்களை,கண்டவுடன் தூப்பாக்கி சூடு நடத்தி கலைக்கவேண்டும். சுதந்திரம், ஜனநாயகம், என கூறி பொதுமக்களின், சுதந்திரம்,ஜனநாயகத்தை மறியல்என்ற, போர்வையில் பறிப்பதை ஏற்று கொள்ளமுடியாது.
Rate this:
Share this comment
Cancel
sridhar - Chennai,இந்தியா
24-பிப்-202007:53:30 IST Report Abuse
sridhar இந்த மதம் தோன்றாமலே இருந்திருக்கலாம். மனித குல விரோத , காம சுக மதம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X