பொது செய்தி

இந்தியா

கற்றது கைமண்ணளவு... கல்லாதது உலகளவு!: அவ்வையார் பாடலை மேற்கோள் காட்டி பிரதமர் பேச்சு

Updated : பிப் 25, 2020 | Added : பிப் 23, 2020 | கருத்துகள் (27)
Share
Advertisement
புதுடில்லி:'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் பல்லுயிர் தன்மை பற்றி பேசும்போது, தமிழ் பெண் புலவரான அவ்வையாரின், 'கற்றது கைமண்ணளவு; கல்லாதது உலகளவு' என்ற பாடலை மேற்கோள் காட்டி பேசினார். பிரதமர் நரேந்திர மோடி, ஒவ்வொரு மாதமும், கடைசி ஞாயிற்றுக் கிழமையில், நாட்டு மக்களுக்காக, அகில இந்திய ரேடியோவில் உரை நிகழ்த்தி வருகிறார். சமூக
Modi, Trump, பிரதமர் ,மோடி, அவ்வையார் பாடல், ரேடியோ, சுதந்திரம்

புதுடில்லி:'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் பல்லுயிர் தன்மை பற்றி பேசும்போது, தமிழ் பெண் புலவரான அவ்வையாரின், 'கற்றது கைமண்ணளவு; கல்லாதது உலகளவு' என்ற பாடலை மேற்கோள் காட்டி பேசினார்.

பிரதமர் நரேந்திர மோடி, ஒவ்வொரு மாதமும், கடைசி ஞாயிற்றுக் கிழமையில், நாட்டு மக்களுக்காக, அகில இந்திய ரேடியோவில் உரை நிகழ்த்தி வருகிறார். சமூக பிரச்னைகள், மாணவர்களுக்கான தேர்வு ஆலோசனை, முக்கிய நிகழ்வுகள், நாட்டு நடப்புகள் பற்றி, 'மனதின் குரல்' என்ற தலைப்பில், இந்த உரையை பிரதமர் ஆற்றி வருகிறார்.


ல்லுயிர் தன்மைஇந்த மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று, பிரதமர் மோடி பேசியதாவது:தமிழ் பெண் புலவரான அவ்வையார், 'கற்றது கைமண்ணளவு; கல்லாதது உலகளவு' என, பாடியுள்ளார். நாம் பல விஷயங்களை கற்றிருக்கலாம்; அதற்காக, எனக்கு எல்லாம் தெரியும் என கருதக் கூடாது; நமக்கு தெரியாத, அறியாத பல விஷயங்கள், உலகளவுக்கு உள்ளன.மணலை கையில் அள்ளினால், கைப்பிடிக்குள் எவ்வளவு மண் இருக்குமோ, அந்த அளவுக்கு தான், நாம் கற்றுள்ளோம் என கருத வேண்டும்; இதைத் தான், அவ்வையார் பாடியுள்ளார்.

நம் நாட்டில் உள்ள பல்லுயிர் தன்மையும், இதே போன்றது தான். நம் நாட்டில் உள்ள பல்லுயிர் தன்மை என்பது, ஒட்டுமொத்த மனித சமுதாயத்துக்கும் பொக்கிஷமாக விளங்குகிறது; அதை பாதுகாத்து, பராமரிக்க வேண்டும். நமக்கென, மிகவும் சிறப்பான பாரம்பரியங்கள் உள்ளன. இவற்றை, நம் முன்னோர்கள், நமக்கு விட்டுச் சென்றுள்ளனர். ஒவ்வோர் உயிரிடத்திலும் அன்பு காட்டுவது, இயற்கையிடம் காட்டும் நேசம் போன்றவை, நம் கலாசாரத்தின் சிறப்புஅம்சங்கள்.

ஒவ்வோர் ஆண்டும், உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து, ஏராளமான பறவைகள் நம் நாட்டுக்கு வருகின்றன. இந்த பறவைகளுக்கு, நம் நாட்டின் பல்வேறு பகுதிகள் புகலிடமாக விளங்குகின்றன. வட கிழக்கு மாநிலமான மேகாலயாவில் உள்ள குகைக்குள் வசிக்கும், புதிய மீன் இனத்தை, அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.

நீருக்கு அடியில் வாழும் உயிரினங்களில், இந்த மீன்களே மிகப் பெரியது என கூறப்படுகிறது. நம் நாட்டின் பல்லுயிர் சூழலுக்கு, இது ஒரு புதிய அடையாளத்தை கொடுத்துள்ளது. இது போன்ற அரிய பல உயிரினங்களுக்கு மத்தியில் தான், நாம் வசிக்கிறோம். இன்னும் கண்டுபிடிக்கப் படாத, அறியாத உயிரினங்கள் எத்தனையோ உள்ளன.

சமீபத்தில், டில்லியில், 'ஹுனார் கட்' என்ற கண்காட்சிக்கு சென்றிருந்தேன். அந்த கண்காட்சி, நம் நாட்டின் பன்முகத் தன்மையை பிரதிபலிக்கும் அடையாளமாக திகழ்ந்தது. நம் கலாசாரம், பாரம்பரியம், உணவு பழக்க வழக்கங்கள் என, எல்லாவற்றையுமே அங்கு காண முடிந்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் தயாரிக்கப்படும் அழகிய ஓவியங்கள், கைவினை பொருட்கள் அங்கு உள்ளன. வாய்ப்பு கிடைக்கும்போது, இது போன்ற கண்காட்சிகளுக்கு அனைவரும் செல்ல வேண்டும். நம் கலாசாரத்தையும், பன்முகத் தன்மையையும் அறிவதற்கு, அது ஒரு வாய்ப்பாக இருக்கும்.


சிறுமி சாதனைமும்பையில் படிக்கும் காம்யா கார்த்திகேயன், 12, என்ற சிறுமி, தென் அமெரிக்காவின் அர்ஜென்டினாவில் உள்ள, 6,962 மீட்டர் உயரமுள்ள, அகொன்காகுவா என்ற மலைச் சிகரத்தில் ஏறி, சாதனை படைத்துள்ளார். ஆரோக்கியமான உடல் நலன் இருந்தால் மட்டுமே, இது போன்ற சாதனைகளை நிகழ்த்த முடியும். காம்யாவின் இந்த சாதனை யால், நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும், தங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டு உள்ளது.
இந்திய விமானப் படை விமானங்களில், சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிபொருள் பயன்படுத்தப் படுகிறது. இதன் மூலம், விமானங்கள் பறப்பதால் ஏற்படும் காற்று மாசு மிகவும் குறையும். இவ்வாறு, அவர் பேசினார்.


பாட்டிக்கு பாராட்டு!

மனதின் குரல் நிகழ்ச்சியில், பிரதமர் மோடி மேலும் பேசியதாவது:கேரளாவில், 9 வயதில் பள்ளி படிப்பை நிறுத்திய, பாகீரதி அம்மாவுக்கு, 105 வயதில் கல்வி கற்கும் ஆசை வந்தது.இதில், நான்காம் வகுப்பு தேர்வு எழுதி, 75 சதவீத மதிப்பெண்கள் பெற்று, அவர் தேர்ச்சி பெற்றார்; இது போன்ற சாதனையாளர்களின் முயற்சி, படிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை அனைவருக்கும் ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவப்படும்போது, அதை அருகிலிருந்து பார்ப்பதற்கு, பார்வையாளர் மாடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் அமர்ந்து, ராக்கெட் ஏவுவதை பார்க்க, இஸ்ரோ இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். மாணவர்களிடமும், இளைஞர்களிடமும், அறிவியல் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்காக, இது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு, அவர் பேசினார்.


மோதல்களை தடுக்க நடவடிக்கைமக்களிடம் மோதல்கள் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கும் படி, பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து, மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:

அனைத்து மாநில போலீஸ் உயர் அதிகாரிகள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, பல்வேறு அறிவுரைகளை அளித்தார். நாட்டின் பல்வேறு பகுதிகளில், வேறு மாநிலங்களில் இருந்து குடிபெயர்ந்து வசிப்பவர்கள், தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து, அப்போது பிரதமர் வலியுறுத்தினார்.

மக்களின் சுதந்திரம் மற்றும் கவுரவத்தை காக்கும் நடவடிக்கையாக, அது தொடர்பான சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டிய அவசியம் குறித்தும், அவர் விளக்கினார். இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement
வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
24-பிப்-202020:54:20 IST Report Abuse
Darmavan சமஸ்க்ரிதம் ஒரு சிரஞ்சீவி மொழி அதற்கு சாவு இல்லை.மேலும் நலிந்தவனுக்குத்தான் ஆதரவு தேவை கொழுத்தவனுக்கு அல்ல.எனவேதான் நலிந்த சமஸ்கிருதத்துக்கு ஆதரவு நீ இட ஒதுக்கீடு வாங்குவது போல்.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
24-பிப்-202020:30:19 IST Report Abuse
RajanRajan அவ்வையின் தமிழ் புலமையின் ஆழ்ந்த கருத்தை மோடி வெளிப்படுத்தியுள்ளார். எங்கே சுடலை நாடக குழுவின் போலி தமிழ் பற்றும் ஒட்டு வங்கி சித்தாந்தமும். திருட்டு முன்னேற்ற கழக தமிழ் தேசத்திற்கே ஒரு அவமானம்.
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
24-பிப்-202016:26:51 IST Report Abuse
Endrum Indian இப்படி இவர் தமிழில் அப்போ அப்போ சொல்றதை பார்த்தால் நம்ம சுடலை ஒரு தடவை கூட இப்படி தமிழ் தமிழ் என்று கூவிக்கொண்டிருக்கும் ஒரு தெலுங்கன் ஏன் சொல்லவில்லை என்று என்னுள் கேள்வி எழுகின்றது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X