அரசியல் செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : பிப் 23, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 இதே நாளில் அன்று

பிப்ரவரி 24, 1948
ஜெ.ஜெயலலிதா: கர்நாடக மாநிலம், மேல்கோட்டை எனும் கிராமத்தில், ஜெயராமன் -- சந்தியா தம்பதிக்கு மகளாக, 1948 பிப்., 24ல் பிறந்தார்; தமிழ், தெலுங்கு, ஹிந்தி என, பல்வேறு மொழிகளில், 115 படங்களில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆரால், அரசியலுக்குள் அழைத்து வரப்பட்ட இவர், அ.தி.மு.க., கொள்கை பரப்புச் செயலரானார்; ராஜ்யசபா, எம்.பி.,யாக இருந்தார். எம்.ஜி.ஆர்., மறைவுக்கு பின், அ.தி.மு.க., பொதுச் செயலரானார்; ஆறு முறை முதல்வராக இருந்தவர். இவர் உள்ளிட்ட நான்கு பேர் மீது தொடரப்பட்ட, சொத்து குவிப்பு வழக்கில், குற்றவாளிகள் என, தண்டனை வழங்கப்பட்டது. அதை எதிர்த்து, ஜெயலலிதா மேல்முறையீடு செய்தார். 2015 மே 11ல், அவர்களை விடுவித்தது, கர்நாடக உயர் நீதிமன்றம். விடுதலையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், கர்நாடக அரசு மேல் முறையீடு செய்தது. 2017 பிப்., 14ல், ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரும் குற்றவாளிகள் என, தீர்ப்பு அளிக்கப்பட்டது. தீர்ப்பு வருவதற்கு முன், 2016 டிச., 5ல் காலமானார்.அவர் பிறந்த தினம், இன்று.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krish - Chennai ,இந்தியா
24-பிப்-202003:47:51 IST Report Abuse
Krish தமிழக அரசியலில் சிறந்த பெண் சிங்கம். படிப்பில் மாநிலத்தில் முதலாக வந்தவர். தொட்டில் குழந்தை இவர் பேர் சொல்லும். தவறுகளை தவிர்த்திருந்தால் அனைவராலும் விரும்ப பட்டிருக்க்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X