பொது செய்தி

இந்தியா

காஷ்மீரில் 7 மாதங்களுக்கு பின் இன்று பள்ளிகள் திறப்பு

Updated : பிப் 24, 2020 | Added : பிப் 23, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
Kashmir, School, Reopen, 370Article, காஷ்மீர், பள்ளி, திறப்பு, 370பிரிவு, ரத்து,

ஸ்ரீநகர்: காஷ்மீரில் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்ட 7 மாதங்களுக்கு பின்னர் இன்று (பிப்.,24) அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுகிறது.

கடந்தாண்டு ஆகஸ்ட் 5ம் தேதி, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த அரசியலமைப்பு சட்டத்தின் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டதுடன் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு மக்களுக்கு கடும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டன. பல்வேறு பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டன. தற்போது நிலைமை சீராகி வருவதால் கட்டுபாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.


latest tamil news



3 மாதம் குளிர்கால விடுமுறை உட்பட மொத்தம் 7 மாதங்கள் விடுப்பு விடப்பட்ட பள்ளிகள், இன்று முதல் திறக்கப்படுகிறது. காஷ்மீரில் 810 நடுநிலை பள்ளிகள், 247 உயர்நிலைப்பள்ளிகள், 37 மேல்நிலைப்பள்ளிகள் உட்பட, மொத்தம் 11,633 கல்வி நிலையங்கள் உள்ளன. இவற்றில் 5.29 லட்சம் மாணவர்களும், 4.74 லட்சம் மாணவிகளும் பயில்கின்றனர். இந்த 10.03 லட்சம் மாணவர்களும் 7 மாதத்திற்கு பிறகு சீருடை அணிய உள்ளனர். பள்ளி திறப்பற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருப்பதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-பிப்-202005:54:11 IST Report Abuse
இவன் சபாஷ் இனிமே தான் ஜம்மு காஷ்மீர் நிம்மதியா இருக்கும்
Rate this:
Cancel
அவர்கள் உண்மைகள் - East Brunswick,யூ.எஸ்.ஏ
23-பிப்-202023:34:23 IST Report Abuse
அவர்கள் உண்மைகள் அமெரிக்க அதிபர் ட்ரெம்பின் வருகையை ஒட்டி காஷ்மீரில் 7 மாதங்களுக்கு பின் நாளை பள்ளிகள் திறப்பு ட்ரெம்ப் சார் நாங்க ரொம்ப நல்லவங்க
Rate this:
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
23-பிப்-202022:42:45 IST Report Abuse
Pannadai Pandian மொதல்ல முக்காட்டை கயட்டுங்க…..இந்த மத சின்னம் தான் உங்களை முட்டாளாக்கி மத வெறி கொண்டு திரிய செய்கிறது பெரும்பான்மை சமூகம் உங்கள் மீது வெறுப்புற்ற காரணம் புர்கா, பெரிய தாடி, லுங்கி…...etc ...etc ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X