அதிபர் டிரம்பிற்கு சிறப்பான வரவேற்பு !

Updated : பிப் 24, 2020 | Added : பிப் 23, 2020 | கருத்துகள் (23)
Share
Advertisement
புதுடில்லி:அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இரண்டு நாள் பயணமாக, இன்று இந்தியா வந்தார். அவரை வரவேற்க, குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரம் விழாக்கோலம் பூண்டது. வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விமான நிலையத்தில் இருந்து, 22 கி.மீ.,க்கு நடைபெறும் வரவேற்பு பேரணியில், பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்றார்.அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இரண்டு நாள்
US_President,Trump,India_visit,விழாக்கோலம்,அதிபர்,டிரம்ப்,ஆமதாபாத்,

புதுடில்லி:அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இரண்டு நாள் பயணமாக, இன்று இந்தியா வந்தார். அவரை வரவேற்க, குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரம் விழாக்கோலம் பூண்டது. வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விமான நிலையத்தில் இருந்து, 22 கி.மீ.,க்கு நடைபெறும் வரவேற்பு பேரணியில், பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்றார்.


அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இரண்டு நாள் பயணமாக இன்று வந்தார். அவருடைய மனைவி மெலீனா டிரம்ப், மகள் இவாங்கா உள்ளிட்டோரும் உடன் வந்தனர். உயர்நிலை குழுவும் வந்தது. பயணத்தின் முதல் நாளான இன்று,குஜராத்தின் ஆமதாபாதுக்கு டிரம்ப் வந்தார். விமான நிலையத்தில் பிரதமர் மோடி, குஜராத் முதல்வர் ரூபானி ஆகியோர் டிரம்ப் குடும்பத்தினரை வரவேற்றனர். பிரதமர் மோடி, டிரம்ப்பை ஆரத்தழுவி வரவேற்றார். பாரம்பரிய முறையில் சங்கொலி இசைத்து, பாரம்பரிய இசைக்கருவிகள் இசைத்தும், பல்வேறு நடனங்கள் ஆடியும் டிரம்ப்பிற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
விமான நிலையத்தில் இருந்து டிரம்ப் மற்றும் மோடி, சபர்மதி ஆசிரமத்திற்கு சென்றனர். அதைத் தொடர்ந்து, மோடிராவில் கட்டப்பட்டுள்ள, உலகிலேயே மிகப் பெரிய கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும், 'நமஸ்தே டிரம்ப்' நிகழ்ச்சியில் பங்கேற்றார். தொடர்ந்து டிரம்ப், அவரது குடும்பத்தினர் தாஜ்மகாலை பார்வையிட்டனர். பின்னர் டில்லியில் தங்கினர்.
விமான நிலையத்தில் இருந்து, மைதானம் வரையிலான, 22 கி.மீ., தூரத்தை கடக்கும்போது, அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆங்காங்கே மேடைகள் அமைக்கப்பட்டு, நாட்டின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் வரவழைக்கப்பட்டுள்ள கலைஞர்களின், கலை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. மேலும், வழியெங்கும், மக்கள் அவருக்கு வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்தாண்டு செப்டம்பரில், பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டார். அங்கு, 'ஹவ்டி மோடி' என்ற, அமெரிக்க வாழ் இந்தியர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. அதில், 50 ஆயிரம் பேர் பங்கேற்றனர். அதுபோன்ற ஒரு நிகழ்ச்சி, மோடிராவில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடத்தப்பட உள்ளது. டிரம்பை வரவேற்கும் வகையில், 'நமஸ்தே டிரம்ப்' என்று இந்த நிகழ்ச்சிக்கு பெயரிடப்பட்டுள்ளது. ஒரு லட்சம் பேர் இதில் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில், டிரம்ப் மற்றும் மோடி பேச உள்ளனர்.முன்னதாக, அங்கு பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதற்கிடையே, அவர் மஹாத்மா காந்தி வாழ்ந்த சபர்மதி ஆசிரமத்துக்கும் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.


தாஜ்மஹால்அதைத் தொடர்ந்து, ஆக்ரா செல்லும் டிரம்ப் மற்றும் அவருடைய குடும்பத்தார், உலக அதிசயங்களில் ஒன்றான, தாஜ்மஹாலை பார்வையிடுகின்றனர். அங்கும், விமான நிலையத்தில் இருந்து, தாஜ்மஹால் வரையிலான, 13 கி.மீ., தூர சாலையில், டிரம்பை வரவேற்கும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஆங்காங்கே மேடைகள் அமைக்கப்பட்டு, கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இதற்காக நாடு முழுவதிலும் இருந்து கலைஞர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

மாநிலத்தின் பாரம்பரியம், கலாசாரத்தை குறிக்கும் வகையிலான கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.டிரம்பின் வருகையையொட்டி, ஆமதாபாத், ஆக்ராவில் சாலைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. பயண பாதையில் உள்ள சுவர்களில், டிரம்ப், மோடியின் படங்களுடன், இரு நாட்டு உறவை குறிப்பிடும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. டிரம்ப் குடும்பத்தாரை வரவேற்று, பதாகைகளும் வைக்கப்பட்டுள்ளன.சாலை தடுப்புகள் உள்ளிட்டவை, புது வர்ணம் பூசப்பட்டுள்ளன. ஆங்காங்கே, மலர் செடிகள் வைத்து அலங்கரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இவ்விரு நகரங்களும், அழகுபடுத்தப்பட்டுள்ளன.


டில்லியில் தங்குகிறார்ஆமதாபாத், ஆக்ரா நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, டிரம்ப், இரவு வருகிறார். ஐ.டி.சி., மவுரியா ஓட்டலில் அவர் தங்குகிறார். டிரம்ப் மற்றும் அவருடைய குடும்பத்தார் மற்றும் அதிகாரிகளுக்காக, இந்த ஓட்டலில் உள்ள, 438 அறைகளும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்ற விருந்தினர்களுக்கு அனுமதி இல்லை.


வரலாறு காணாத பாதுகாப்புடிரம்ப் முதல் முறையாக அரசு முறை பயணமாக இந்தியா வருகிறார். அதையடுத்து அவர் பயணம் செல்லும் இடங்களில், வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டில்லியில் அவர் தங்கும் ஓட்டல் உள்ளிட்ட இடங்களிலும், ஆமதாபாத், ஆக்ராவிலும் பாதுகாப்பு பலத்தப்பட்டுள்ளன.அமெரிக்க அதிபரின் சிறப்பு பாதுகாப்புப் படையினர் கட்டுப்பாட்டில் நிகழ்ச்சி நடைபெறும் இடங்கள் உள்ளன.

என்.எஸ்.ஜி., எனப்படும் தேசிய பாதுகாப்புப் படை, 'ஸ்வாட்' எனப்படும் அதிரடிப் படையினர், 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா உளவு விமானங்களை வீழ்த்தும் படை என, நாட்டின் உயர் திறனுள்ள அனைத்துப் படைகளும், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.இதைத் தவிர, மோப்ப நாய் படை, நீண்ட தூரத்தில் உள்ள இலக்கையும் துல்லியமாக சுடும் வீரர்களுடன், உள்ளூர் போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, போக்குவரத்து சீரமைக்கப்பட்டுள்ளது.


பாகுபலியாக டிரம்ப்சமூக வலை தளத்தில் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், 'அமெரிக்க அதிபரை வரவேற்க இந்தியா காத்திருக்கிறது. ஆமதாபாத்தில் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியில் அவருடன் பங்கேற்பதில் பெருமை அடைகிறேன்' என, பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.இந்த நிலையில், டிரம்பும், சமூக வலைதளத்தில், 'வீடியோ' ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் வெளியான, 'பாகுபலி' சினிமா படத்தின் சில காட்சிகள் அடங்கிய அந்த வீடியோவில், ஹீரோவுக்கு பதிலாக, டிரம்பின் முகம் பொருத்தப் பட்டு உள்ளது. 'இந்தியாவில் உள்ள என்னுடைய சிறந்த நண்பர்களை சந்திக்க ஆவலாக உள்ளேன்' என, அந்த வீடியோவுடன் தனது செய்தியையும் டிரம்ப் வெளியிட்டுள்ளார்.


சிறப்பு காற்றாடிபஞ்சாப் மாநிலம் அமிர்தசரசை சேர்ந்த, காற்றாடி தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள ஜக்மோகன் கனோஜியா, சிறப்பு காற்றாடியை வடிவமைத்துள்ளார். மோடி மற்றும் டிரம்ப் படங்களுடன் கூடிய அந்த காற்றாடியில், டிரம்பை வரவேற்கும் வாசகங்களும் இடம்பெற்று உள்ளன.


எல்லாம் நவீன மயம்!அமெரிக்க அதிபர், 28 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, 'ஏர்போர்ஸ் ஒன்' விமானத்தில்இந்தியா வருகிறார். இது, 'போயிங் 747 - 200 பி' நவீன வகையை சேர்ந்தது. இது, 12 ஆயிரத்து, 552 கி.மீ., இடைவிடாமல் பறக்கும். விமானத்தில் பொருத்தப்பட்டுள்ள, 'ஜாமர்' கருவிகள், எதிரி களின் ஏவுகணைகளை திசை திருப்பி விடும். வெள்ளை மாளிகையில் இருப்பது போன்ற, 'ஓவல் அலுவலகம்' இந்த விமானத்தில் உள்ளது.
* விமான நிலையத்தை விட்டு வெளியேறிய பின், குறைந்த துாரத்துக்கு கார், நீண்ட துாரத்துக்கு ஹெலிகாப்டரை பயன்படுத்துகிறார்.
* இப்பயணத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப், 'தி பீஸ்ட் 2.0' காரை பயன்படுத்துகிறார். இதன் ஜன்னல் கண்ணாடிகளை வெடிகுண்டுகளால் கூட தகர்க்க முடியாது. இதில், சேட்டிலைட் தொலைபேசி, மருத்துவ வசதிகள் உள்ளன.
* காரை ரசாயன ஆயுதங்களால் கூட தகர்க்க முடியாது.
* அதிபரின் அதிகாரப்பூர்வ ஏர்போர்ஸ் ஒன் விமானத்துடன் தொடர்புடைய ஹெலிகாப்டரின் பெயர், 'மரைன் ஒன்!'
* அமெரிக்காவின் கப்பல் படையைச் சேர்ந்த பைலட்கள் இந்த ஹெலிகாப்டரை இயக்குகின்றனர்.
* இதில், 14 பேர் அமரலாம். புறப்படும், தரையிறங்கும் போது ஏற்படும் சத்தம், அதிபரின் கேபினில் கேட்காது. கேபினில் அமர்ந்து, சாதாரண ஒலி அளவிலேயேஅதிபர் பேசலாம். இதில், ஏவுகணை தடுப்பு கருவிகள் உள்ளன.

Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thirumurugan - Kuala Lumpur,மலேஷியா
24-பிப்-202022:49:33 IST Report Abuse
Thirumurugan அடிமை மோகம்...இந்திய பிரதமர் யுஎஸ் க்கு போகும்போது இது மாதிரி அலப்பறைகள் இருக்காது. யுஎஸ் ல் நடைபெற்ற ஹௌடி மோடி நிகழ்ச்சியும் தனியாரால் நடத்தப்பெற்றது.
Rate this:
Cancel
ரவிச்சந்திரன் முத்துவேல் (தோழர் சே பீனிக்ஸ்) ஒரு மனிதர் மற்றும் அவரது குடும்பத்தினரை வரவேற்று, உபசரித்து அனுப்ப எதற்காக இவ்வளவு ஆடம்பரம்? உள்ளதை உள்ளபடி காண்பிக்க வேண்டும்... கம்மங் கூழ், கேப்பை கழி, அடை தோசை இவற்றை ஒரு கூரை குடிசையில் அமேரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர் ஒரு நாள் தங்கி உணவருந்தி மகிழ்ந்தார்கள் என்றால் ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை... நீங்கள் செய்வது மேற்கத்திய உபசரிப்பு...இந்திய விருந்தும் இல்லை...இந்திய உபசரிப்பும் இல்லை...வருத்தத்துடன் இந்திய மக்கள் சார்பில்...
Rate this:
Cancel
பாலசுப்பிரமணியன் அ. உலகில் இரு பெரிய ஜனநாயக நாடுகளின் தலைவர்கள் சேர்ந்து காண்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. பிரதமர் மோடி உலக அரங்கில் நம் தேசத்தின் பெருமையை உயர்த்தியுள்ளார். வாழ்க பாரதம். ஜெய்ஹிந்த்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X