ஷாஹீன் பாக்., போராட்டம் குறித்து சுப்ரீம்கோர்ட்டில் அறிக்கை தாக்கல்

Updated : பிப் 24, 2020 | Added : பிப் 24, 2020 | கருத்துகள் (17)
Share
Advertisement

புதுடில்லி : 'டில்லி, ஷாஹீன் பாக் பகுதியில் நடந்து வரும் போராட்டத்தால் ஏற்பட்டுள்ளபோக்குவரத்து சிக்கலுக்கு, போராட்டக்காரர்கள் காரணமல்ல; போலீசார் தான் காரணம்' என, உச்ச நீதிமன்றத்தில், முன்னாள் தலைமை தகவல் கமிஷனர் வஜாஹத் ஹபிபுல்லாதெரிவித்தார்.latest tamil newsகுடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து, டில்லி ஷாஹீன் பாக் பகுதியில், இரண்டு மாதங்களுக்கு மேலாக, தொடர் போராட்டம் நடந்து வருகிறது. 'இந்தப் போராட்டத்தால், ஷாஹீன் பாக் பகுதி யில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 'அதனால், போராட்டக்காரர்களை, அங்கிருந்து அகற்ற வேண்டும்' என, கோரி, மூத்த வழக்கறிஞர் அமித் சஹானி, பா.ஜ.,வைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., நந்த் கிஷோர் கார்க் ஆகியோர், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.


latest tamil newsஉத்தரவு


இந்த மனுக்கள் மீதான விசாரணை, நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர்அடங்கிய அமர்வு முன் நடந்தது. 'அமைதியாக, சட்டத்துக்குட்பட்டு போராட்டம் நடத்த,யாருக்கும் உரிமை உள்ளது. ஆனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தாமல், போராட்டம் நடக்க வேண்டும்' என, நீதிபதிகள் கூறினர். பின், ஹாஹீன் பாக் போராட்டக்காரர்களுடன் பேசி, போக்குவரத்து இடையூறு பற்றி அறிக்கை தாக்கல் செய்ய, முன்னாள் தலைமை தகவல்கமிஷனர் வஜாஹத் ஹபிபுல்லாவுக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையடுத்து, ஷாஹீன் பகுதிக்கு சென்று, போராட்டக்காரர்களுடன் ஹபிபுல்லா பேசினார். இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஷாஹீன் பகுதியில் போராட்டம் அமைதியாக நடக்கிறது. போக்குவரத்து இடையூறுக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், எந்த சம்பந்தமும் இல்லை. போராட்ட பகுதியுடன் தொடர்பில்லாத சாலைகளில், தடுப்புகளை ஏற்படுத்தி, போக்குவரத்து இடையூறுகளைபோலீசார் தான் ஏற்படுத்தியுள்ளனர். ஷாஹீன் பகுதியை சுற்றியுள்ள, ஐந்து இடங்களில் தடுப்புகளை போலீசார் அகற்றினால், போக்குவரத்து சீராகிவிடும்.


விசாரணை


அதனால், போக்குவரத்து இடையூறுக்கு, போலீசார் தான் காரணம்; போராட்டக்காரர்கள்காரணமல்ல. இவ்வாறு, அறிக்கையில் கூறியுள்ளனர். இதேபோல், சமூக சேவகர் சையத் பகதுார் அப்பாஸ் நக்வி, பீம் சேனா தலைவர் சந்திர சேகர ஆசாத் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுக்களில், 'போக்குவரத்து இடையூறுக்கு, போலீசாரே காரணம்' என, கூறியுள்ளனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை, இன்று நடக்கிறது.


latest tamil news
போராட்டத்தில் வன்முறை


டில்லியில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி, ஷாஹீன் பாக் பகுதியில், கடந்த, 70 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், ஜாப்ராபாத் மெட்ரோ ரயில் நிலையம் அருகில், நேற்று முன்தினம் இரவு முதல், 200க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல், சந்த்பாக், மவுஜ்பூர் பகுதியிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, அந்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன், துணை ராணுவப்படையினரும் குவிக்கப்பட்டனர். மவுஜ்பூர் பகுதியில் நடந்த போராட்டத்தின் போது, இரண்டு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் மீதும் கற்களை வீசி, தாக்குதல் நடத்தினர். தாக்குதலில் ஈடுபட்டவர்களை கலைக்க, கண்ணீர் புகை குண்டுகளை வீசி கட்டுப்படுத்த,போலீசார் முயற்சித்தனர். இதனால், பதற்றம் ஏற்பட்டது. மோதலை தொடர்ந்து, மவுஜ்பூர்,பாபர்பூர் இடையேயான மெட்ரோ ரயில் நிலையங்களும் மூடப்பட்டன.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s t rajan - chennai,இந்தியா
24-பிப்-202012:57:58 IST Report Abuse
s t rajan அந்த த்ரீ மஸ்கட்டீயர்ஸ் சமாதானத் தூதுவர்களா..... இலலை சரண்டரானக் கைக்கூலிகளா..... நீதிமன்றம் இவ்வளவு தரம் தாழ்ந்தவர்களை அனுப்பலாமா ?
Rate this:
Share this comment
Cancel
24-பிப்-202012:35:57 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் நாட்டை இவர்கள் கலவர பூமியாக மாற்றுவதை மற்ற சமூக மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்களை புறக்கணிக்க ஆரம்பித்தால் அது இவர்களுக்கு தான் இழப்பு.
Rate this:
Share this comment
Cancel
தமிழ் வேந்தன் - சென்னை,இந்தியா
24-பிப்-202010:25:45 IST Report Abuse
தமிழ் வேந்தன் போராட்ட பகுதியுடன் தொடர்பில்லாத சாலைகளில், தடுப்புகளை ஏற்படுத்தி, போக்குவரத்து இடையூறுகளை போலீசார் தான் ஏற்படுத்தியுள்ளனர். ஷாஹீன் பகுதியை சுற்றியுள்ள, ஐந்து இடங்களில் தடுப்புகளை போலீசார் அகற்றினால், போக்குவரத்து சீராகிவிடும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X