உணவை வீணாக்குதலை தடுக்க நூதன அபராதம்

Updated : பிப் 24, 2020 | Added : பிப் 24, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement

பெங்களூரு : கர்நாடகாவில் மடிகேரியில் உணவு வீணடிப்பதை தடுப்பதற்காக 10 கிராமுக்கு 100 ரூபாய் அபராதம் வசூலிக்கும் நடைமுறையை மடிகேரி தனியார் சொகுசு விடுதி ஒன்று கட்டாயமாக்கியுள்ளது.



latest tamil news



கர்நாடக மாநிலத்தின் குடகு மாவட்டம் மடிகேரியில் இப்பனி என்ற தனியார் சொகுசு விடுதி உள்ளது. வனப்பகுதியை ஒட்டியுள்ளதால் மடிகேரிக்கு வரும் பெரும்பாலான சுற்றுலா பயணியர் இந்த விடுதியில் தான் தங்குவர்.விடுதி நிர்வாகம் தற்போது புதிய நடைமுறை ஒன்றை கட்டாயமாக பின்பற்றப்போவதாக அறிவித்துள்ளது. அது என்னவென்றால் 'விடுதியில் உணவு சாப்பிடுபவர்கள் 10 கிராம் உணவை வீண் செய்தால் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இந்த விதிமுறையை பின்பற்றுபவர்களுக்கு மட்டும் சொகுசு விடுதியில் தங்க அறை வழங்கப்படும். இல்லை என்றால் அறை வழங்க முடியாது' என்று விடுதியின் முன் பகுதியில் 'நோட்டீஸ்' ஒட்டப்பட்டுள்ளது.


latest tamil news



இது குறித்து விடுதி நிர்வாகி ஒருவர் கூறியதாவது:வாடிக்கையாளர்கள் எவ்வளவு உணவு வேண்டுமென்றாலும் சாப்பிடலாம் ஆனால் வீணடிக்க கூடாது. வீணடித்தால் அந்த உணவை எடை போட்டு அதற்கேற்ப அபராதம் வசூலிக்கப்படும்.இந்த பணத்தை குழந்தைக்கு உணவளிக்கவும் என்ற உண்டியலில் வாடிக்கையாளர் மூலம் போட்டுக் கொள்வோம். அந்த பணத்தை கொண்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு தேவையான பொருட்கள் வாங்கிக் கொடுப்போம். வீணடித்த உணவை உதிர்ந்த இலைகளுடன் கலந்து இயற்கை உரம் தயாரிப்போம். இதன் மூலம் காய்கறிகள் கீரைகள் விளைவிப்போம். இங்கு தங்கும் பிரபலங்களும் இந்த விதிமுறை பொருந்தும். இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news



பல இடங்களில் உணவுகள் வீணாக்கப்படுவதை தடுக்கவும், அனைவருக்கும் உணவு கிடைக்கும் வகையிலும் அதன் முக்கியத்துவத்தை உணர்த்தும்படியான நோக்கத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Care - Chennai,இந்தியா
24-பிப்-202016:54:34 IST Report Abuse
Care இருநூறு ஆக மாற்றுங்கள்
Rate this:
Share this comment
Cancel
sethu - CHENNAI,இந்தியா
24-பிப்-202011:39:13 IST Report Abuse
sethu சூப்பர் அருமையான முடிவு தயவு செய்து இதில் சமரசம் செய்து கொள்ள வேண்டாம்
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
24-பிப்-202008:32:19 IST Report Abuse
Natarajan Ramanathan உணவை வீணடிப்பது அதை உயிரை கொடுத்து விளைவித்த விவசாயிக்கு செய்யும் அவமானம்...அபராதம் அவசியம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X