காஷ்மீர் விவகாரம் ; சத்ருகன் சின்ஹாவிடம் பாக்., அதிபர் கவலை

Updated : பிப் 24, 2020 | Added : பிப் 24, 2020 | கருத்துகள் (18)
Share
Advertisement

புதுடில்லி : லாகூரில் நடைபெற்ற, திருமண விழாவில் பங்கேற்ற காங்கிரஸ் பிரமுகர் சத்ருகன் சின்ஹாவிடம், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசின் நடவடிக்கைக்கு, பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வி கவலை தெரிவித்துள்ளார்.



latest tamil news



காங்., தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சத்ருகன் சின்ஹா, நம் அண்டை நாடான பாகிஸ்தானில் உள்ள லாகூரில் நடந்த, ஒரு திருமண விழாவில் பங்கேற்றார். பின், பாக்., அதிபர் ஆரிப் ஆல்வியை, லாகூர் கவர்னர் இல்லத்தில், சத்ருகன் சின்ஹா சந்தித்து பேசினார். இது குறித்து, பாக்., அதிபர், 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது: ஜம்மு -- காஷ்மீர் மாநிலத்திற்கு, ௩௭௦ன் கீழ் வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்து, இரு யூனியன் பிரதேசங்களாக மாற்றியதற்கு, நான் கவலை தெரிவித்தேன்; சத்ருகன் சின்ஹாவும் என் கருத்தை ஆமோதித்தார். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.


latest tamil news



இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், டுவிட்டர் சமூக வலைதளத்தில் சத்ருகன் சின்ஹா கூறியிருப்பதாவது:நாங்கள் இருவரும், அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை. சமூகம், கலாசாரம் தொடர்பாக விஷயங்களை மட்டுமே பேசினோம். அரசால் அங்கீகரிக்கப்படாத என்னை போன்ற ஒருவருடன், அரசியல் மற்றும் அரசின் கொள்கைகள் குறித்து பேசுவதற்கு எதுவும் இல்லை என்பதை, அனைவரும் உணர வேண்டும். இவ்வாறு சத்ருகன் சின்ஹா கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
24-பிப்-202016:17:19 IST Report Abuse
Endrum Indian இதிலிருந்து ஒண்ணு நல்லா தெரியுது எவன் எவன் இந்தியாவில் இந்திய சட்டத்துக்கு எதிராக உளறுகின்றானோ அவன் எல்லாம் பாகிஸ்தானின் கைக்கூலிகள் என்று சொல்வது அவசியம் என்று தெரிந்து விட்டது.
Rate this:
Cancel
24-பிப்-202015:46:04 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் இந்தியாவில் யாருமே மதிக்கவில்லை என்று பாக்கிஸ்தான் கில்மாப்பிவிட்டார் போலிருக்கிறது. அங்கே பிரியாணி சாப்பிட்டு பரிசு வாங்கி வந்திருப்பார் நம்ம கனிமொழி மாதிரி
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
24-பிப்-202014:54:27 IST Report Abuse
Anand எப்படியோ இந்த சத்ருகன் சின்ஹாவிற்கு கேடுகாலம் உடனே ஆரம்பித்து விட்டது.... கெடுவான் கேடு நினைப்பான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X