கேரளாவில் பாக்., துப்பாக்கி குண்டுகள் ; பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணை

Updated : பிப் 24, 2020 | Added : பிப் 24, 2020 | கருத்துகள் (22)
Share
Advertisement

கொல்லம் : கேரளாவின் குளத்துப்புழாவில் சாலையோரம் கிடந்த, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி குண்டுகள் குறித்து, பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்துகின்றனர்.



latest tamil news



கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், தமிழக எல்லையான செங்கோட்டையில் இருந்து, 60 கி.மீ., தொலைவில் உள்ள குளத்துப்புழாவில், சாலையோரம் கிடந்த சிறிய பையில், 14 துப்பாக்கி குண்டுகள் இருந்தன. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இரண்டு பேர், போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீசார் உடனடியாக அங்கு சென்று, துப்பாக்கி குண்டுகளை கைப்பற்றினர். அவை, வெளிநாட்டில் தயாரானவை என்பது தெரிய வந்துள்ளது.


latest tamil news



இந்த சம்பவம் குறித்து, கேரள போலீஸ் டி.ஜி.பி., லோக்நாத் பெஹெரா கூறியதாவது:குளத்துப்புழாவில் கைப்பற்றப்பட்ட துப்பாக்கி குண்டுகள், வெளிநாட்டில் தயாரானவை என தெரிகிறது. இந்த குண்டுகள் எங்கிருந்து வந்தன என்பது குறித்து, பயங்கர வாத தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்துவர். இவ்வாறு, அவர் கூறினார். கைப்பற்றப்பட்ட துப்பாக்கி குண்டுகளை, தீவிரவாத தடுப்பு படை போலீசார் ஆய்வு செய்ததில், அவை நீண்ட துாரம் குறிபார்த்து சுடும் தொலைநோக்கி துப்பாக்கிகளில் பயன்படுத்தக் கூடிய தோட்டாக்கள் என்றும், பாகிஸ்தான் ராணுவ தொழிற்சாலையில் தயாரானவை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பயங்கரவாதிகள் இந்த தோட்டாக்களை பதுக்கி வைத்து இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துஉள்ளது.


latest tamil news



மேலும், பாகிஸ்தான் தயாரிப்பு தோட்டாக்கள் இங்கு வந்தது எப்படி என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது. இதற்கிடையே, கேரள - கர்நாடகா எல்லையில், கலால் வரித் துறை அதிகாரிகள், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அங்கு வந்த ஒரு காரில், 10 பாக்கெட்டுகளில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட, 60 துப்பாக்கி தோட்டாக்கள் இருந்தன; அவற்றை கைப்பற்றிய போலீசார், காரில் வந்த நபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பெரிய ராசு - Baton Rouge,யூ.எஸ்.ஏ
25-பிப்-202012:36:21 IST Report Abuse
பெரிய ராசு திருட்டு மார்க்கத்தின் கேரளா இப்போது முழுக்க தீவிரவாதிங்கள் நிறைந்த மூர்க்க தேசம் கடவுளின் தேசம் இப்பொது மூர்க்க தீவிரவாத தேசம் ..
Rate this:
Share this comment
Cancel
திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா
24-பிப்-202015:52:49 IST Report Abuse
திண்டுக்கல் சரவணன் கேரளாவில் பலவருடமாக அடிப்படை இஸ்லாமிய வாதிகள் வளர்ந்து வருகின்றனர். நடுவண் அரசு சரியான வலையில் கையாளும் என நம்புவோம். இந்தவகையில் மலையாளிகள் ஏமாளிகள். தமிழர்களாகிய நாம் அப்படி ஒன்றும் பின்தங்கிவிடவில்லை.
Rate this:
Share this comment
Cancel
24-பிப்-202015:03:01 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் CAA எதிர்ப்பு போராளிகள் தங்கள் நட்பு நாட்டின் உதவியை பெறக்கூடாதா ? இது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X