பொது செய்தி

இந்தியா

டிரம்ப் சொல்லித் தரும் பாடம்!

Updated : பிப் 24, 2020 | Added : பிப் 24, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
DonaldTrump,Trump,India_visit,US_president,டிரம்ப்,இந்தியா

இன்றும், நாளையும்(பிப்.,24,25), அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யப் போகிறார். பெரிய அளவில் வர்த்தக ஒப்பந்தம் ஏதும் இருக்கப் போவதில்லை. ஆனால், அவர் வேறொரு உத்தியை நமக்குச் சொல்லிக் கொடுத்துள்ளார். அது என்ன?

டிரம்ப், இந்தியா வரப்போகிறார் என்றவுடனேயே, அமெரிக்காவுடனான வர்த்தம் தான் இந்தப் பயணத்தில் முக்கிய இடத்தைப் பிடிக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இதற்கு, அமெரிக்க அரசாங்கத்தின் வர்த்தக பிரதிநிதியான, ராபர் லைதிஸரும் நம் அமைச்சர் பியுஷ் கோயலும் தொடர்ச்சியாக மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளும் காரணம். ஆனால், கடந்த வாரம் அந்தப் பேச்சு முறிந்துவிட்டது. அமெரிக்க அதிபரோடு, லைதிஸர் வரவில்லை. அப்படியானால், இங்கே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்ற நம்பிக்கை பொய்த்துப் போனது.


வரிகள் கடுமை:


இதற்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக, கடந்த வார மத்தியில் பேசிய அதிபர் டிரம்ப், 'விரிவான வர்த்தக ஒப்பந்தம், அமெரிக்க அதிபர் தேர்தலுக்குப் பின்னர் தான் கையெழுத்தாகும்' என்று திருவாய் மலர்ந்தருளினார். கடைசியாக, வெள்ளியன்று அவர் தெரிவித்த கருத்து தான் ஹைலைட். 'இந்தியா விதிக்கும் வரிகள், கடுமையாக உள்ளன. அதனால், அதைப் பற்றியும் இந்தப் பயணத்தில் பேசப் போகிறேன்' என்று உண்மை நிலைமை போட்டு உடைத்துவிட்டார். வேறு எந்த நாட்டு அதிபர் பயணமும் இவ்வளவு வெளிப்படையாக, தெளிவாக இருந்ததில்லை. எது கிடைக்கும் என்பதைவிட, எவையெல்லாம் கிடைக்காது என்பது இப்போதே தெரிந்துவிட்டது.

இந்திய - அமெரிக்க உறவு இப்போது வேறு மட்டத்துக்கு உயர்ந்து விட்டது. நாம் இதுநாள் வரை எதிர்பார்த்தது வேறு. அதாவது, அமெரிக்காவுக்கு நாம் ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு, அங்கே, ஜி.எஸ்.பி., வரிச்சலுகைகள் கிடைத்து வந்தன. அதிபர் டிரம்ப், அந்தச் சலுகையை நீக்கிவிட்டார். அதை மீண்டும் பெறுவதற்கு நாம் முயற்சி செய்வோம் என்று சொல்லப்பட்டது. அது, இனி நடைபெறாது. அதேபோல், அமெரிக்கா நம்மை வளர்ந்த நாடாக அறிவித்தும் விட்டது.

உலக வர்த்தகத்தில் அரை சதவீதத்துக்கு மேல் வர்த்தகம் செய்யும் நாடு; ஜி - 20 நாடுகளில் உறுப்பினர் ஆகிய தகுதிகளை முன்வைத்து, நம்மை, 'வளர்ந்த நாடு' என்று வகைப்படுத்திவிட்டது. இவை இரண்டின் அர்த்தம் என்னவெனில், என்னிடம் இருந்து, இனிமேலும் நீ எந்தவிதமான சலுகைகளையும் எதிர்பார்க்காதே என்பதே. அப்படியானால், இனிமேல் அமெரிக்காவோடு என்னவிதமான உறவு ஏற்படும்?


latest tamil news
வர்த்தகப்போர்:


நீ ஒன்றைக் கொடுத்தால், நான் இன்னொன்றைக் கொடுப்பேன். அதுவும் டிரம்ப், 'அமெரிக்காவே முதல்' என்ற கோஷத்தோடு இருப்பவர். தன்னுடைய நாட்டின் நலனே முக்கியம். அதற்கு குந்தகம் விளைவிக்கும் எதையும் டிரம்ப் செய்யமாட்டார். இதே அணுகுமுறையைத் தான் அவர் சீனா மீதும் வைத்தார். வர்த்தகப் போர் துவங்கியது இதன் பின்னர் தான். இந்தியாவை இன்னொரு சந்தையாகத்தான் டிரம்ப் பார்க்கிறார். இங்கே ஹார்லி டேவிட்சன் வாகனத்துக்கு கூடுதல் வரி விதிக்கிறீர்கள். உள்நாட்டில் மருத்துவ கருவிகளுக்கு விலைகளைக் கட்டுப்படுத்துகிறீர்கள். பால் பொருட்கள் உட்பட, அமெரிக்க விவசாயப் பொருட்களுக்கு, உள்நாட்டுச் சந்தையைத் திறந்துவிட மறுக்கிறீர்கள்.

பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகளையும், கட்டுப்பாடுகளையும் கொண்டுவந்து இம்சை செய்கிறீர்கள். இதனால், அமெரிக்க தொழிலதிபர்களால் இந்தியாவில் காலுான்ற முடியவில்லை. முதலில் இதையெல்லாம் விலக்கி, வழி சமைத்துத் தாருங்கள். இதுதான் அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தையின் மையம். 'அமெரிக்காவுக்குச் சாதகமான அம்சங்கள் இருந்தால் மட்டுமே, வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும்' என்று தெளிவாக டிரம்ப் சொன்னதும் இந்தப் பின்னணியில் தான். ஒரு மிகப் பிரமாதமான இடத்துக்கு நாம் வந்திருக்கிறோம். அதாவது, இனிமேல் இருதரப்பிலும் அன்பு, பாசம், நேசம், சகோதரத்துவம், பெரியண்ணன், புடலங்காய், தெருப்புழுதி என்று எதுவும் கிடையாது.


உங்கள் விருப்பம்:


நான் ஒரு சந்தையின் நலனை முன்வைத்து பேசி வருகிறேன். இந்திய பிரதமரான நீங்கள், இன்னொரு தேசத்தின் நலனில் அக்கறையோடு உரையாடுகிறீர்கள். எனக்கும், என் நாட்டுக்கும் எது பயன் தருமோ அதைத்தான் நான் முன்வைப்பேன். ஏற்பதும், ஏற்காததும் உங்கள் விருப்பம். இதைத் தான், டிரம்ப் நமக்கும் சொல்லிக் கொடுக்கிறார். நம், 130 கோடி பேர் எண்ணிக்கை, அமெரிக்காவின் கண்ணை உறுத்துகிறது. இதை எப்படியெல்லாம் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று அவர்கள் யோசிக்கின்றனர்.

நாமும் இதையே தான் யோசிக்க வேண்டும். உங்கள் சந்தையை நீங்கள் எவ்வளவு திறந்து விடுவீர்கள், அதில், எங்கள் பொருட்களுக்கு எத்தகைய அனுமதி கிடைக்கும் என்று ஒரு பக்கம் யோசிக்க வேண்டும். மறுபக்கம், இந்திய சந்தையைத் திறந்து விடுவது என்பது நிபந்தனைகளுக்கு உட்பட்டது. உதாரணமாக, ஹார்லி டேவிட்சன் போன்ற சொகுசு வாகனங்களுக்கு இறக்குமதி வரியைக் குறைக்கலாம். ஆனால், பால் பொருட்களையோ, விவசாயப் பொருட்களையோ இந்தியாவுக்குள் அனுமதிக்க முடியாது.

இணைய வணிக நிறுவனங்கள், பயனர் டேட்டாக்களை உள்நாட்டில் தான் வைத்திருக்கவேண்டும் என்றெல்லாம் நாம் உறுதியாக நிற்கலாம். பேச்சுவார்த்தையில் பின்பற்ற வேண்டிய பிடிவாதத்தையும் சொல்லிக் கொடுக்கிறார் டிரம்ப். நம் நாட்டின் நலனைக் காக்க, இதைக் கற்பதில் தவறே இல்லை.

-ஆர்.வெங்கடேஷ்,
பத்திரிகையாளர்,
pattamvenkatesh@gmail.com

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
24-பிப்-202016:13:23 IST Report Abuse
Endrum Indian தேர்தலில் அடுத்தது யார்???அதற்கு பின் ட்ரம்ப் வரவில்லையென்றால் ட்ரம்ப் என்று ஒரு அமெரிக்க அதிபர் இருந்தார் என்று வெறும் சரித்திரம் சொல்லும் அவ்வளவு தானே???
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
24-பிப்-202014:04:10 IST Report Abuse
K.Sugavanam அல்வா குடு, கட்டிப்பிடி.. இதுதானே த்ரும்ப்பு சொல்லித்தரும் பாடம்..
Rate this:
Share this comment
Cancel
24-பிப்-202013:06:21 IST Report Abuse
Ganesan Madurai பப்பூ பேச ரெடி. டிரம்ப் தாங்குவாரா?
Rate this:
Share this comment
Ram Sekar - mumbai ,இந்தியா
24-பிப்-202015:05:29 IST Report Abuse
Ram Sekarகணேஷ் மதுரை அவர்களே - ஒரு சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் இம்ரான் கான் மற்றும் டிரம்ப் பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது, ஒரு பாகிஸ்தானிய நிருபர் காஷ்மீர் 370 நீக்கம் பற்றி கேள்வி கேட்டபோது டிரம்ப் அதற்கு சொன்ன பதில் ப்ரமாதமயா, எங்கிருந்துய்யா இந்த ஆள் கிடைச்சார்? என்று அந்த நிருபரை கேலி பண்ணினார். பப்பூ பேசினால் டிரம்ப் நிச்சயம் தாங்க மாட்டார், அமெரிக்கா சென்றபின்னர் கூட தூங்காமல் தவிப்பார். விடாது கருப்பூ மாதிரி விடாது பப்பூ. பூச்சாண்டி காட்ட வேண்டாம் என்று பயபக்தியோடு மன்றாடி கேட்டுக்கொள்கிறோம் அதுவும் டிரம்ப் சார்பாக...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X