குழாய் மூலம் காஸ்; அதானிக்கு நிராகரிப்பு

Updated : பிப் 24, 2020 | Added : பிப் 24, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
adani_group,gas,SC,SupremeCourt,குழாய்,காஸ்,அதானி,நிராகரிப்பு

புதுடில்லி: சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், குழாய் மூலம் சமையல், 'காஸ்' வழங்கும் ஒப்பந்தத்தை எதிர்த்து, 'அதானி' நிறுவனம் தொடர்ந்த வழக்கை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

குழாய் மூலம் சமையல் காஸ் இணைப்பு வழங்கும் ஒப்பந்தத்தை, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு கட்டுப்பாடு வாரியம், கடந்த, 2018ல் பல்வேறு நிறுவனங்களுக்கு வழங்கியது. இதில், தமிழகத்தில் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இந்த ஒப்பந்தம், குஜராத்தைச் சேர்ந்த, 'டோரன்ட் காஸ்' என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து, 'அதானி காஸ்' நிறுவனம், வாரியத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில், மாறுபட்ட தீர்ப்புகள் வழங்கப்பட்டதால், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


latest tamil news



இதை, நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், ஹேமந்த் குப்தா அமர்வு விசாரித்தது. அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: மிகவும் அதிகமான தொகையை குறிப்பிட்டு, இந்த ஒப்பந்தத்தை அந்த நிறுவனம் பெற்றுள்ளதாக, அதானி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இயற்கை நீதியின் அடிப்படையில், இவ்வாறு மிக அதிக தொகைக்கு ஒப்பந்தம் கோரும்போது, அவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது. ஆனால், இந்த ஒப்பந்தத்தில் அவ்வாறு விதிமீறல் ஏதும் நடக்கவில்லை. அதனால், மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramalingam Shanmugam - mysore,இந்தியா
24-பிப்-202015:38:15 IST Report Abuse
Ramalingam Shanmugam பாராளுமன்றத்தை எப்போ விக்கப்போறீங்க அதெல்லாம் பப்பு வந்த பிறகு நடக்கும் நம்ம செட்டி இருக்கார் நம்பிக்கையுடன்
Rate this:
Cancel
arudra1951 - Madurai,இந்தியா
24-பிப்-202008:16:10 IST Report Abuse
arudra1951 பாராளுமன்றத்தை எப்போ விக்கப்போறீங்க
Rate this:
24-பிப்-202009:53:27 IST Report Abuse
chandranஎல்லா வேலைகளையும் டெண்டர் விட்டு தனியார் கம்பெனி தான் செய்து தருகிறார்கள்....
Rate this:
Anand - chennai,இந்தியா
24-பிப்-202014:31:23 IST Report Abuse
Anandரவுல் வின்சி பிரதமர் ஆனதும், சூசை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்த அடுத்த நொடி அதற்கான உத்தரவில் கையெழுத்து போடப்படும்....
Rate this:
Ram Sekar - mumbai ,இந்தியா
24-பிப்-202017:29:01 IST Report Abuse
Ram Sekarபாராளுமன்றத்தை விக்கிறது கிடக்கட்டும். நாட்டையே கொள்ளை அடித்த கும்பல்களான இத்தாலி கும்பல், திருட்டு ரயில் விங்யான ஊழல் கும்பல்கள், மாட்டு தீவன ஊழல் கும்பல் இப்போ மீண்டும் திருட துடிக்கின்றன. அதுக்கு என்ன செய்யலாம்??...
Rate this:
Cancel
24-பிப்-202008:00:41 IST Report Abuse
chandran மிக அதிகமான தொகையால் அரசுக்கு லாபம்தானே. அதானியின் குறைந்த விலைக்கு வாங்கும் முயற்சி பலிக்க வில்லையோ. இது காங்கிரஸ் ஆட்சி இல்லை மிஸ்டர் அதானி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X