குழாய் மூலம் காஸ்; அதானிக்கு நிராகரிப்பு| Dinamalar

குழாய் மூலம் காஸ்; அதானிக்கு நிராகரிப்பு

Updated : பிப் 24, 2020 | Added : பிப் 24, 2020 | கருத்துகள் (6)
Share
adani_group,gas,SC,SupremeCourt,குழாய்,காஸ்,அதானி,நிராகரிப்பு

புதுடில்லி: சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், குழாய் மூலம் சமையல், 'காஸ்' வழங்கும் ஒப்பந்தத்தை எதிர்த்து, 'அதானி' நிறுவனம் தொடர்ந்த வழக்கை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

குழாய் மூலம் சமையல் காஸ் இணைப்பு வழங்கும் ஒப்பந்தத்தை, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு கட்டுப்பாடு வாரியம், கடந்த, 2018ல் பல்வேறு நிறுவனங்களுக்கு வழங்கியது. இதில், தமிழகத்தில் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இந்த ஒப்பந்தம், குஜராத்தைச் சேர்ந்த, 'டோரன்ட் காஸ்' என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து, 'அதானி காஸ்' நிறுவனம், வாரியத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில், மாறுபட்ட தீர்ப்புகள் வழங்கப்பட்டதால், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


latest tamil news



இதை, நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், ஹேமந்த் குப்தா அமர்வு விசாரித்தது. அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: மிகவும் அதிகமான தொகையை குறிப்பிட்டு, இந்த ஒப்பந்தத்தை அந்த நிறுவனம் பெற்றுள்ளதாக, அதானி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இயற்கை நீதியின் அடிப்படையில், இவ்வாறு மிக அதிக தொகைக்கு ஒப்பந்தம் கோரும்போது, அவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது. ஆனால், இந்த ஒப்பந்தத்தில் அவ்வாறு விதிமீறல் ஏதும் நடக்கவில்லை. அதனால், மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X