பொது செய்தி

இந்தியா

'பாஸ்டேக்' இல்லாததால் ரூ.20 கோடி அபராதம் வசூல்

Updated : பிப் 24, 2020 | Added : பிப் 24, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement
FASTag,TollPlazas,NationalHighways,Electronic_Toll_Collection,பாஸ்டேக்

புதுடில்லி: சுங்கச் சாவடிகளில், 'பாஸ்டேக்' வழிக்குள், டேக் இல்லாமல் நுழைந்த, 18 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களுக்கு, 20 கோடி ரூபாய் அளவிற்கு, அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில், பாஸ்டேக் நடைமுறை அமலில் உள்ளது. இதன் மூலம், சுங்கச் சாவடிகளில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. வாகனங்களில் ஒட்டப்படும் டேக்கில், ரீசார்ஜ் செய்யப்படும் பணம், ஒவ்வொரு சுங்கச் சாவடிகளில் பயணிக்கும் போதும், கழிக்கப்படும். இந்த நடைமுறையால், சுங்கச் சாவடிகளில், வாகன நெரிசல் ஏற்படுவது, பெருமளவு குறைந்துள்ளது. இதுவரை, 1.55 கோடி எண்ணிக்கையிலான பாஸ்டேக்குகள், வினியோகம் செய்யப்பட்டுள்ளன.


latest tamil news



இந்நிலையில், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், கூறியிருந்ததாவது: பாஸ்டேக் பயனாளிகள் மட்டுமே, சுங்கச் சாவடிகளில், அதற்காக உள்ள வழியில் நுழையலாம். அந்த டேக் இல்லாத வாகன ஓட்டிகள், அவ்வழியில் நுழையக் கூடாது. அப்படி, டேக் இல்லாதவர்கள் அதில் நுழைந்தால், அவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்படும். அந்த நடைமுறை அமலில் உள்ளது. அவர்களிடம் இருந்து, இரண்டு மடங்கு அதிக சுங்க கட்டணம், அபராதமாக வசூலிக்கப்படுகிறது.

இந்தியா முழுவதும், பாஸ்டேக் வழிக்குள், டேக் இல்லாமல் நுழைந்த, 18 லட்சத்திற்கும் அதிகமானோரிடம் இருந்து, 20 கோடி ரூபாய் அளவிற்கு, அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arun Kumar - Tuticorin(Thoothukudi),இந்தியா
24-பிப்-202013:10:04 IST Report Abuse
Arun Kumar திட்டம் போட்டு திருட கூட்டம்...
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
24-பிப்-202011:37:44 IST Report Abuse
K.Sugavanam FASTag ஓனர் எவம்பெத புள்ளையோ... கொட்டோ கொட்டோன்னு கொட்டுது அவன் பையில.
Rate this:
Share this comment
Cancel
karutthu - nainital,இந்தியா
24-பிப்-202011:29:31 IST Report Abuse
karutthu இது மத்திய அரசின் கொள்ளையோ கொள்ளை திட்டம் .....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X