டெஸ்ட் சாம்பியன்ஷிப்; இந்திய அணிக்கு முதல் தோல்வி

Updated : பிப் 24, 2020 | Added : பிப் 24, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
INDvsNZ,WorldTestChampionship,NewZealand,India,cricket,கிரிக்கெட்,இந்தியா,நியூசிலாந்து

வெலிங்டன்: வெலிங்டன் டெஸ்டில் நியூசி., வேகங்கள் அசத்த, இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இது டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணிக்கு கிடைத்த முதல் தோல்வி.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி வெலிங்டனில் நடக்கிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 165 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 216 ரன்கள் எடுத்திருந்தது. 348 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் இஷாந்த் 5 விக்கெட் வீழ்த்தினார்.


மீண்டும் சொதப்பல்:


பின் 183 ரன்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு பவுல்ட், சவுத்தீ மீண்டும் தொல்லை தந்தனர். பிரித்வி ஷா (14), புஜாரா (11 ரன்), கோஹ்லி(19 ரன்) மீண்டும் ஏமாற்றினர். அரைசதம் கடந்த மயங்க் (58) சவுத்தீ பந்தில் சிக்கினார். மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி, 4 விக்கெட்டுக்கு 144 ரன்கள் எடுத்து, 39 ரன்கள் பின்தங்கி இருந்தது.


latest tamil news




சவுத்தீ அசத்தல்:


நான்காம் நாள் ஆட்டம் துவங்கிய சில நிமிடங்களிலேயே, ரகானே (29 ரன்) பவுல்ட் வேகத்தில் வெளியேறினார். விகாரியை (15 ரன்) சவுத்தீ வெளியேற்றினார். அஷ்வின் (4 ரன்), இஷாந்த் (12 ரன்), பும்ரா(0) ஏமாற்றினர். பன்ட்(25 ரன்) ஆறுதல் அளித்தார். முடிவில், இந்திய அணி 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி, 8 ரன்கள் முன்னிலை பெற்றது. வேகத்தில் அசத்திய சவுத்தீ 5, பவுல்ட் 4 விக்கெட் கைபற்றினர்.


latest tamil news




10 விக்கெட்:


எளிய இலக்கை நோக்கி விளையாடிய நியூசி., அணி, 1.4 ஓவரில் இலக்கை எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது நியூசி., அணிக்கு 100 வது டெஸ்ட் வெற்றி. இதனை 441 போட்டிகளில் நியூசி., அணி எட்டியுள்ளது. ஆட்ட நாயகன் விருது சவுத்தீக்கு வழங்கப்பட்டது.


முதல் தோல்வி:


டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி அடைந்த முதல் தோல்வி இது. 8 போட்டிகளில் 7ல் வென்றுள்ள இந்திய அணி 360 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறது. ஆஸி., 296 புள்ளிகளுடன் 2வது இடம் வகிக்கிறது. இந்த வெற்றியின் மூலம் 120 புள்ளிகளுடன் நியூசி., 5வது இடம் பிடித்தது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Sugavanam - Salem,இந்தியா
24-பிப்-202014:01:08 IST Report Abuse
K.Sugavanam வீட்ல புலி,வெளீல எலி.
Rate this:
Cancel
24-பிப்-202012:38:55 IST Report Abuse
தமிழ் T20, ஒருநாள் போட்டிகளில் மட்டும் நன்றாக விளையாடுகிறார்கள். டெஸ்ட் போட்டிகளில் சொதப்புகிறார்கள். டெஸ்ட் போட்டிகளில் நன்றாக விளையாடுபவர்கள்தான் சிறந்த வீரர்கள்.
Rate this:
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
24-பிப்-202011:11:35 IST Report Abuse
இந்தியன் kumar வெளிநாட்டு சூழ்நிலையில் இந்தியா வெற்றி பெறுவதுதான் உண்மையான வெற்றி , அடுத்த போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X