டிரம்ப் வருகை: காங்கிரசின் நான்கு கேள்விகள்

Added : பிப் 24, 2020 | கருத்துகள் (48)
Share
Advertisement
DonaldTrump,Trump,Congress,RandeepSurjewala,டிரம்ப்,

புதுடில்லி: அமெரிக்க அதிபர் டிரம்ப் இரண்டு நாள் பயணமாக இன்று(பிப்.,24) இந்தியா வருகிறார். அவரது இந்திய சுற்றுப்பயணம் குறித்து, காங்., கட்சி 4 கேள்விகளை முன்வைத்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர், ரனதீப் சுர்ஜேவாலா கூறியுள்ளதாவது: அதிபர் டிரம்ப் உடனான சந்திப்பின்போது, எச்1பி விசா பிரச்னை, இந்தியாவுக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து, பிரதமர் மோடி பேசுவாரா?

மேலும், அமெரிக்காவின் நெருக்கடியால், ஈரானிடம் இருந்து பெட்ரோலியப் பொருட்கள் வாங்குவதை நிறுத்தியுள்ளோம். அதனால், குறைந்த விலையில் அமெரிக்காவிடம் இருந்து பெட்ரோலியப் பொருட்களை வாங்குவது குறித்து, மோடி பேசுவாரா?

அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை என்று டிரம்ப் கூறி வருகிறார். இந்த நிலையில், இந்தியர்களுக்கே முன்னுரிமை என்ற கோஷத்தை மோடி நிறுத்தியுள்ளது ஏன்?

நம் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில், தலிபான் பயங்கரவாத அமைப்புடன் அமெரிக்கா ஒப்பந்தம் செய்ய உள்ளது. இதனால், இந்தியாவுக்கு ஏற்பட உள்ள பாதிப்பு குறித்தும் டிரம்புடன் மோடி பேசுவாரா? இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


latest tamil news




காங்., புறக்கணிப்பு:


அதிபர் டிரம்பை வரவேற்று, ராஷ்டிரபதி பவனில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்து அளிக்கிறார். 'காங்., தலைவர் சோனியாவுக்கு அழைப்பு இல்லாததால், இந்த விருந்தில் பங்கேற்கப் போவதில்லை' என, லோக்சபா காங்., தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
25-பிப்-202000:17:37 IST Report Abuse
Rajagopal இவை நல்ல கேள்விகள் தான்.
Rate this:
Cancel
துயில் விரும்பி - coimbatore,இந்தியா
24-பிப்-202022:44:44 IST Report Abuse
துயில் விரும்பி எங்களுக்கு ஒரே கேள்விதான். நீங்க டெல்லி தேர்தல் ல ஏன் துடைப்ப கட்டையால் துடைக்க பட்டீர்கள். கடைசி வரை தருதலையாகவே இருப்பேன் என்றால் என்ன செய்வது.
Rate this:
Cancel
Kamal - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
24-பிப்-202018:33:43 IST Report Abuse
Kamal என்ன நாடு நாசமா போய்டும் போல் இருக்கு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X