அரசியல் செய்தி

தமிழ்நாடு

சிஏஏ யாரை பாதிக்கும்? : சிதம்பரம் கேள்வி

Updated : பிப் 24, 2020 | Added : பிப் 24, 2020 | கருத்துகள் (179)
Share
Advertisement

சென்னை : சிஏஏ.,வுக்கு எதிரான போராட்டம் முஸ்லீம்களுக்கும் இந்திய அரசுக்கும் இடையேயானது அல்ல. பா.ஜ.,வுக்கும் இந்திய மக்களுக்கும் இடையேயானது. சிஏஏ இந்தியர்களை பாதிக்காது என்றால் வேறு யாரை பாதிக்கும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.



latest tamil news



சென்னையில் சிஏஏ.,வுக்கு எதிரான கூட்டத்தின் போது பேசிய சிதம்பரம், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் இஸ்லாமிய மக்களுக்கும், இந்திய அரசுக்கும் இடையேயானதல்ல.இது அரசியலமைப்பை பாதுகாக்க நினைப்பவர்களுக்கும், அரசுக்குமான போராட்டம். அசாமில் என்.ஆர்.சி மூலம் 40 லட்சம் பேர் அந்நியர்கள் என அடையாளம் காட்டப்பட்டனர். என்.ஆர்.சி அறிக்கையை சீராய்வு செய்ததில் 19 லட்சம் பேர் அந்நியர்கள் என முடிவு செய்யப்பட்டது. எந்த நாடு 19 லட்சம் பேரை குடிமக்கள் இல்லை என அடையாளம் காட்டியது? இதில் மோடிக்கு ஏதாவது சந்தேகம் என்றால் இந்தியா வரும் டிரம்ப்பை கேட்கட்டும்.


latest tamil news



12 லட்சம் பேர் இந்துக்கள் என்றும், 7 லட்சம் பேர் இஸ்லாமியர்களும் மற்ற மதத்தினரும் என்று தெரியவந்தது. இந்த அறிக்கையை அசாம் மாநில பாஜ., அரசு நிராகரித்தது. சிஏஏ பற்றி உண்மையை மறைக்கிறார்கள் அல்லது திரித்து சொல்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். சி.ஏ.ஏ.,வால் இந்தியாவில் இருக்கும் மக்கள் பாதிக்கப்படமாட்டார்கள் என பாஜ அரசு மாபெரும் பொய்யை சொல்லி வருகிறது. இந்தியாவில் இருப்பவர்களை பாதிக்காது எனில் யாரை பாதிக்கும்? 70 ஆண்டுகள் கட்டிக் காப்பாற்றிய அரசியலமைப்புச் சட்டத்தை 72 மணி நேரத்தில் பாஜ குழிதோண்டி புதைத்துவிட்டது. பார்லி.,யில் பாஜ.,விற்கு பெரும்பான்மை பலம் இருப்பதால் இந்தியாவை இந்து நாடாக மாற்ற முயற்சிக்கிறது. சிஏஏ மத அடிப்படையிலானது. அதனால் தான் அதனால் அதனை எதிர்க்கிறோம். பொருளாதாரத்தை பற்றி பேசும் அதே சமயம், சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி., பற்றியும் நாங்கள் பேசி ஆக வேண்டும் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (179)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mohandas - sydney,ஆஸ்திரேலியா
26-பிப்-202007:35:14 IST Report Abuse
mohandas Chidambaram அவர்களே மோடி உங்களின் எதிரி இல்லை உங்கள் தவறின் எதிரி நீங்கள் தப்பிக்க கன்னாபின்னா என்று பேசிவருகிறீர்கள். உங்களை பேச கூப்பிட்டவர் யார் அவரை பிடித்து உங்களுடன் திஹார் ஜெயிலில் வைக்கவேண்டும்
Rate this:
Cancel
Thirumurugan - Kuala Lumpur,மலேஷியா
26-பிப்-202004:05:14 IST Report Abuse
Thirumurugan RSS ன் ஊதுகுழலாக பிஜேபி அரசு செயல்படுகிறது, என்ன செய்வது? இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்பதை மனதில் கொள்ள வேண்டும். அருகாமையில் உள்ள நாட்டிலிருந்து வருகிறார்கள் என்றால் எல்லை பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். இவர்கள் கொண்டு வந்த சி ஏ ஏ வில் இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை கிடைக்காதாம். ஆனால் வடமாநிலங்களில் உள்ள இந்துக்களுக்கு (வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள்) மட்டும் உண்டாம். தமிழ்நாட்டில் இருக்கும் சங்கிகளும் சேர்த்து ஜின்க் ஜக் அடித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
25-பிப்-202019:10:11 IST Report Abuse
r.sundaram மெத்தப்படித்த, உச்சநீதிமன்ற வக்கீல், ஒரு சட்டம் வந்தால் யாருக்கு பாதிப்பு வரும் என்று கேட்க்கிறார்? யாருக்கும் பாதிப்பு வராது. பாகிஸ்தான், வங்கதேசம் மட்டும் ஆப்கனிஸ்தான் ஆகிய நாட்டிலிருந்து இங்கு வந்து தங்கி இருக்கும் அந்த நாட்டு சிறுபான்மை மக்களுக்கு இந்த சட்டம் குடியுரிமை வழங்கும், அவர்களுக்கு நன்மை செய்யும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X