சிஏஏ யாரை பாதிக்கும்? : சிதம்பரம் கேள்வி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

சிஏஏ யாரை பாதிக்கும்? : சிதம்பரம் கேள்வி

Updated : பிப் 24, 2020 | Added : பிப் 24, 2020 | கருத்துகள் (179)
Share

சென்னை : சிஏஏ.,வுக்கு எதிரான போராட்டம் முஸ்லீம்களுக்கும் இந்திய அரசுக்கும் இடையேயானது அல்ல. பா.ஜ.,வுக்கும் இந்திய மக்களுக்கும் இடையேயானது. சிஏஏ இந்தியர்களை பாதிக்காது என்றால் வேறு யாரை பாதிக்கும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.



latest tamil news



சென்னையில் சிஏஏ.,வுக்கு எதிரான கூட்டத்தின் போது பேசிய சிதம்பரம், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் இஸ்லாமிய மக்களுக்கும், இந்திய அரசுக்கும் இடையேயானதல்ல.இது அரசியலமைப்பை பாதுகாக்க நினைப்பவர்களுக்கும், அரசுக்குமான போராட்டம். அசாமில் என்.ஆர்.சி மூலம் 40 லட்சம் பேர் அந்நியர்கள் என அடையாளம் காட்டப்பட்டனர். என்.ஆர்.சி அறிக்கையை சீராய்வு செய்ததில் 19 லட்சம் பேர் அந்நியர்கள் என முடிவு செய்யப்பட்டது. எந்த நாடு 19 லட்சம் பேரை குடிமக்கள் இல்லை என அடையாளம் காட்டியது? இதில் மோடிக்கு ஏதாவது சந்தேகம் என்றால் இந்தியா வரும் டிரம்ப்பை கேட்கட்டும்.


latest tamil news



12 லட்சம் பேர் இந்துக்கள் என்றும், 7 லட்சம் பேர் இஸ்லாமியர்களும் மற்ற மதத்தினரும் என்று தெரியவந்தது. இந்த அறிக்கையை அசாம் மாநில பாஜ., அரசு நிராகரித்தது. சிஏஏ பற்றி உண்மையை மறைக்கிறார்கள் அல்லது திரித்து சொல்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். சி.ஏ.ஏ.,வால் இந்தியாவில் இருக்கும் மக்கள் பாதிக்கப்படமாட்டார்கள் என பாஜ அரசு மாபெரும் பொய்யை சொல்லி வருகிறது. இந்தியாவில் இருப்பவர்களை பாதிக்காது எனில் யாரை பாதிக்கும்? 70 ஆண்டுகள் கட்டிக் காப்பாற்றிய அரசியலமைப்புச் சட்டத்தை 72 மணி நேரத்தில் பாஜ குழிதோண்டி புதைத்துவிட்டது. பார்லி.,யில் பாஜ.,விற்கு பெரும்பான்மை பலம் இருப்பதால் இந்தியாவை இந்து நாடாக மாற்ற முயற்சிக்கிறது. சிஏஏ மத அடிப்படையிலானது. அதனால் தான் அதனால் அதனை எதிர்க்கிறோம். பொருளாதாரத்தை பற்றி பேசும் அதே சமயம், சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி., பற்றியும் நாங்கள் பேசி ஆக வேண்டும் என்றார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X