கொரோனா வைரஸ்: சீனாவில் பலி 2500ஐ கடந்தது

Updated : பிப் 24, 2020 | Added : பிப் 24, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

பீஜிங்: கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரசிற்கு சீனாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 2592 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 77,000 ஆக அதிகரித்துள்ளது.



latest tamil news


கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க சீன அரசு பலவித நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. புதிதாக 409 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக தென்கொரியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 763 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 161க்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை 7ஐ தொட்டது.,


latest tamil news




வெனிஸ் திருவிழா ரத்து


ஐரோப்பிய ஒன்றியத்தில், இத்தாலியில்தான் அதிக எண்ணிக்கையில் கொரோனா வைரஸ் பரவி உள்ளது. இதுவரை, 152 பேர் இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று பேர் பலியாகி உள்ளனர். கொரோனா வைரஸ் அச்சத்தால் உலகப் புகழ்பெற்ற வெனீஸ் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.


latest tamil news



தமிழகத்தில் கோழி விலை வீழ்ச்சி

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பீதியால் கறிக்கோழி விலை வீழ்ச்சியடைந்து வருகிறது. ஒரு கிலோ கறிக்கோழி (உயிருடன்) ரூ.49க்கு தற்போது விற்பனை ஆகிறது. இதுகுறித்து சென்னை இறைச்சி சில்லறை வியாபாரிகள் சங்க துணைத்தலைவர் எம்.அன்வர் பாஷா கூறுகையில், ''கொரோனா வைரஸ் பீதியால் கடந்த சில நாட்களாகக் கடைகளில் கோழிக்கறி வாங்குபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. ரூ.200க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ கோழி (உயிருடன்) தற்போது வெறும் 49 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால், கோழி வளர்ப்பில் ஈடுபட்டவர்கள் பெரும் பொருளாதார இழப்பைச் சந்தித்துள்ளனர்,'' என்றார்.


latest tamil news




latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
24-பிப்-202019:45:54 IST Report Abuse
Tamilan உலகிலேயே விஞ்சானத்தில், பொருளாதாரத்தில் இரண்டாம் இடத்தில உள்ள நாடு சீனா . அதை அணைத்து உலக நாடுகளும் , உலகிலேயே வளர்ந்த நாடுகளும் அங்கீகரிக்கின்றன. உலகிலேயே அதிக அதிகாரம் கொண்ட ஐவர்களில் ஒரு நாடு . அப்படிப்பட்ட ஒரு நாட்டிலேயே இப்படி ஒரு கூத்து . அதுவும் உலகம் மிகவும் வளர்ந்துவிட்டதாக உலகில் உள்ள அரசியல் சட்ட மூடர்கள் அனைவரும் பிதற்றிக்கொள்ளும் இந்த கால கட்டத்திலேயே . இதெல்லாம், சீனா மட்டுமின்றி வளர்ந்துவிட்டதாக பிதற்றிக்கொள்ளும் அனைத்து நாடுகளும் தங்கள் தரத்தை மறு பரிசீலனை செய்து மறு நிர்ணயம் செய்ய வேண்டிய நிலையைத்தான் காட்டுகிறது . இனியும் இவர்கள் வளர்ந்துவிட்டார்கள் என்று உலகில் உள்ள எந்த ஒரு மூடன் கூட நம்பமாட்டான் . இந்தியாவில் உள்ள மதசார்பின்மை வாதிகளும் , அரசியல் சட்ட மூடர்கள் மட்டுமே அப்படி நம்ப முடியும் .
Rate this:
Cancel
24-பிப்-202013:03:58 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் மனிதன் உணவு தேவைக்காக சில விலங்குகள் , பறவைகள் , மீன்களை உணவாக உட்கொள்ளலாம் , ஆனால் எதை உட்கொள்ள வேண்டும் , எது ஆபத்தானது என்று அந்த காலத்திலேயே முன்னோர்கள் கண்டறிந்து சொல்லிவைத்திருக்கிறார்கள். அதை புறக்கணித்துவிட்டு எதை வேண்டுமானாலும் தின்பேன் என்று ஆரம்பித்து இன்று சீனர்கள் மிக பெரிய ஆபத்தில் சிக்கி இருக்கிறார்கள். அவர்களை மட்டுமல்லாமல் உலகையே இந்த நோய் அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் இது மறைக்கப்பட்டிருக்கிறது என்றே தோன்றுகிறது. தென்கொரிய , சிங்கப்பூர் , ஈரான் , இத்தாலி என்று பல நாடுகளில் பரவிவிட்ட இந்த நோய் இந்தியாவில் பரவவில்லை என்பதை நம்மால் நம்ப முடியவில்லை
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
24-பிப்-202012:45:10 IST Report Abuse
Malick Raja இழப்பு ஆறு இலக்கங்கங்களை (6.டிஜிட்டல் ) என்றோ கடந்துவிட்டது என்பது உண்மை காரணம் சீன அதிபர் அலறுவதும் . தான் மட்டும் பாதுக்காப்பாக இருக்க தினமும் 1.கோடி ருபாய் வரை செலவாகுவதும் வெளிவராத செய்திகளாக இருக்கிறது .. அதுவும் விரைவில் வெளிவரும் .. அநீதி ,, அக்கிரமங்கள் நிலைப்பதில்லை .. வக்கிரர்களுக்கு புத்தி இந்நிலை கண்டபின்பாவது அறிவு வரவேண்டும் ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X